முந்தய பக்கம்

பறிமுதல் பணத்தை விடுவிக்க ராணிப்பேட்டையில் சிறப்புக் குழு அமைப்பு

22 Mar 2026, 4:19 pm
பறிமுதல் பணத்தை விடுவிக்க ராணிப்பேட்டையில் சிறப்புக் குழு அமைப்பு
<p><strong>பறிமுதல் பணத்தை விடுவிக்க ராணிப்பேட்டையில் சிறப்புக் குழு அமைப்பு</strong></p> <p>ராணிப்பேட்டை, மார்ச் 22- சட்டமன்றத் தேர்தலையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தின் நான்கு தொகுதிகளிலும் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும் பணம் மற்றும் பொருட்களை உரிய ஆவணங்களைச் சரிபார்த்து விடுவிக்க மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ரூ.11.65 லட்சம் ரொக்கம் பறிமுதல் இந்நிலையில் அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரொக்கம் ரூ.86,440ம், சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரொக்கம் ரூ.9,95,000ம், ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.84,000ம், ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.82,000 மதிப்புள்ள வேட்டி, சட்டை, சேலைகளும் &nbsp;ஆக மொத்தம் ரூ.11,65,440 ரொக்கப்பணமும், ரூ.82,000 மதிப்புள்ள இதர பொருட்களும் மேற்கண்ட பறக்கும் படை குழு மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டன.தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாகப் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொலைபேசி வாயிலாக வரப்பெற்ற 13 புகார்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. C-VIGIL செயலி மூலம் வரப்பெற்ற 14 புகார்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram