கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
5 Jan 2026, 6:21 pm

சித்த மருத்துவ தினம் திருப்பூரில் சிறப்பு முகாம்

திருப்பூர், ஜன.5- 9 ஆவது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு, மாவட்ட சித்த மருத்துவமனையில் மருத்துவ முகாம் நடை பெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற வந்திருந்தனர். திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள மாவட்ட சித்த மருத்துவமனையில் 9 ஆவது தேசிய சித்த மருத்துவ தினம் திங்களன்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வை முன்னிட்டு மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற்றது. இதில் மக்களுக்கு ரத்த பரிசோதனை, சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300க் கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற வந்திருந்தனர். மேலும் மருத்துவமனை வளாகத்தில் மூலிகை தாவரங்க ளின் கண்காட்சி மற்றும் மூலிகை பொருட்களின் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தன. இதில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த செடிகளின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட் டது. மேலும் ரசாயனமற்ற மற்றும் பக்க விளைவுகள் இல்லாத சித்த மருத்துவ முறையை மக்கள் அதிகளவு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. உடுமலை: உடுமலை ராஜாவூர் ஹார்ட் வெல்னஸ் மையத்தில் ஜிவிஜி விசாலாட்சி பெண்கள் கலைக் கல்லூரி நாட்டு நலப் பணி திட்ட சார்பில் திங்களன்று சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடை பெற்றது. முகாமை மாவட்ட சித்த மருத்துவர் அலுவலர் கவிதா மற்றும் ஸ்ரீ விசாலாட்சி பெண்கள் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் கற்பகவல்லி ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த முகாமில் தமிழ் மருத்துவ முகாம் சித்த மருத்துவம் சார்ந்த பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஓவிய போட்டி நடத் தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஹெல்த் இன்சூரன்ஸ் முகவர்கள் சங்கம் திருப்பூரில் தொடக்கம்

திருப்பூர், ஜன.5 - திருப்பூரில் ஹெல்த் இன்சூரன்ஸ் முகவர்கள் சங்கம் தொடங்கப்பட்டது. திருப்பூர் கே ஆர் சி சிட்டி சென்டரில் ஞாயிறன்று அமைப்பு கூட்டம் நடைபெற்றது. ஹெல்த் இன்சூரன்ஸ் முகவர்கள் பா.ராஜேஷ், பி.குமார் ஆகியோர் ஆலோசகர்க ளாகவும், சங்கத் தலைவராக நல்லசாமி, செயலாளராக வி . மணிகண்டன், பொருளாளராக நவநீதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஹெல்த் இன்சூரன்ஸ் முகவர்களின் நலன் களை பாதுகாப்பதற்காக இந்த சங்கம் தொடங்கப்பட்டுள் ளதாக செயலாளர் மணிகண்டன் தெரிவித்தார்.

அ.சு.பவுத்தன் தாயார் மறைவு அமைச்சர் நேரில் இரங்கல்

திருப்பூர், ஜன.5 - ஆதித்தமிழர் சனநாயகப் பேரவையின் நிறுவனத் தலைவர் அ.சு.பவுத்தனின் தாயார் அருக்காணி அம்மா (80) கடந்த டிசம் பர் 30 அன்று உடல் நலக் குறைவால் காலமானார். தகவல் அறிந்து தாராபுரம் வட்டம் மரவபாளையத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தோர் இரங்கல் தெரிவித்த னர். மாநில மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல் விழி செல்வராஜ் திங்களன்று நேரில் சென்று தாயா ரின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தி.மு.க குண்டடம் மேற்கு ஒன்றியச் செயலாளர் சந்திர சேகர், சூரிய நல்லூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் ஸ்ரீதர், ஆதித்தமிழர் சனநாயகப் பேரவை மாநில இளைஞர் அணி செயலாளர் ச.பிரதாப் மற்றும் பலர் இந்நிகழ்வில் பங் கேற்றனர்.

உடுமலையில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

உடுமலை, ஜன.5 - மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் புதன்கிழமை காலை 11 மணிக்கு உடுமலை செயற்பொறியாளர் அலுவல கத்தில் நடைபெறுகிறது. உடுமலை கோட்ட மேற்பார்வை பொறியாளர் கீதா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் மின் நுகர்வோர் தங்களுடைய குறை களை தெரிவிக்கும்படி செயற்பொறியாளர் மூர்த்தி தெரி வித்துள்ளார்.

500 கிலோ புகையிலை, பான் மசாலா பொருட்கள் எரிப்பு

அவிநாசி ஜன.5- அவிநாசியில் கடந்த ஓராண்டு காலத்தில் பறிமுதல் செய் யப்பட்ட 500 கிலோ புகையிலை மற்றும் பான் மசாலா பொருட் களை காவல் துறையினர் திங்களன்று தீ வைத்து எரித்து சாம் பலாக்கினர். அவிநாசி புதிய பேருந்து நிலையத்திற்கு பின்புறம் உள்ள ஜம்படை குப்பை கிடங்கில், இந்த பொருட்களை அதிகாரிக ளின் முன்னிலையில் அவிநாசி போலீசார் எரித்து அழித்த னர். இந்நிகழ்வில் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, உணவு பாது காப்பு அதிகாரி ஸ்டாலின் பிரபு, சுகாதார இன்ஸ்பெக்டர் அர விந்தன், வருவாய் துறை அதிகாரி மகேஸ்வரி, விஏஓ லதா ஆகியோர் கலந்து கொண்டனர்.