தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ராஜினாமா செய்த 4 எம்.எல்.ஏ.க்கள்: விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ்

12 Jun 2026, 9:20 pm
ராஜினாமா செய்த 4 எம்.எல்.ஏ.க்கள்:  விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ்

ராஜினாமா செய்த 4 எம்.எல்.ஏ.க்கள்: விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ்

சென்னை: தமிழகத்தில் 17 ஆவது சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த த.வெ.க. அரசுக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆதரவளித்த 25 அதிமுக எம்.எல்.ஏ.க்களில் நான்கு பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து த.வெ.க. வில் இணைந்தனர்.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தது ஏன் என்றும், அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் 7 நாட்களுக்குள் விளக் கம் அளிக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். ராஜினாமா செய்த நான்கு பேர் மரகதம் குமர வேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பா சமுத்திரம்) ஆவர்.

இதற்கு முன்னர் முதலமைச்சர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதன் விளைவாக திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம் என மொத்தம் 5 தொகுதிகள் காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட் டால் 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும் என்ற விதிமுறையின்படி, இந்த 5 தொகுதிகளுக்கான முன் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். இடைத்தேர்தல் தேதி ஜூலை இறுதியில் அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி யுள்ளன. த.வெ.க.வுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.