தீக்கதிர் முக்கிய செய்திகள்
20 Jan 2026, 2:46 pm

ஜனவரி 24 வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் பேரவை தலைவர் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 24 வரை நடைபெறும் என்று பேரவைத் தலை வர் மு. அப்பாவு தெரிவித்துள்ளார். அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்திற்குப் பின், செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்த மு. அப்பாவு, பேரவைக் கூட்டத்தொ டரை ஜனவரி 24 வரை நடத்த அலுவல் ஆய்வுக் குழு முடி வெடுத்துள்ளது. ஜனவரி 21 அன்று மறைந்த திமுக உறுப்பினர் பொன்னுசாமியின் மறைவுக்கு இரங்கல் தெரி வித்து அபை நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்படு கின்றன. ஜன வரி 22, 23 ஆம் தேதிகளில் கேள்வி-பதிலுடன் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும். ஜனவரி 24 அன்று முதல்வர் பதிலளிப்பார் என்று தெரிவித்தார். பேரவைத் தலைவரின் விளக்கம் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பேரவைத் தலைவர், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் உரிமையை மறுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்றும் ஆளுநர் மாளிகையை விட்டு வெளியே வந்து, ஏதாவது ஒரு கட்சியில் ஆளுநர் சேர்ந்து பின்னர் விமர்சிக்கலாம் என்றும் தெரிவித்தார். கடமையை செய்யும்படி ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்தோம் என்றும், அரசு தயாரித்து கொடுத்த அறிக் கையை வாசிப்பது ஆளுநரின் கடமை என்றும், ஜனநாயக கடமையை பின்பற்றி ஆளுநருக்கு அழைப்பு விடுத்தோம் என்றும் விளக்கமளித்தார்.

விரைவில் 100 சதவீதம்: அமைச்சர் நம்பிக்கை

சென்னை: 96% கல்வி அறிவு பெற்ற மாநிலமான தமிழ்நாடு, விரைவில் 100%-ஐ எட்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எழுத்தறிவு திட்டம் மூலம் 2022-25 ஆம் ஆண்டு வரை 15 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். 2025-இல் எழுத, படிக்க தெரியாத 15 வயதுக்கு மேற்பட்ட 15 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கப்பட்டுள்ளது. 100% கல்வி அறிவு பெற்ற மாநிலம் என்ற இலக்கை தமிழ்நாடு எட்டும் போது ஒன்றிய அரசே பாராட்டும் என அன்பில் மகேஸ் கூறி யுள்ளார்.