விளையாட்டு
12 Jan 2026, 6:02 pm

ஸ்பானிஷ் சூப்பர் கோபா கோப்பை பார்சிலோனா சாம்பியன்

2025-2026ஆம் ஆண்டுக்கான “ஸ்பானிஷ் சூப்பர் கோபா” கோப்பை தொடரின் இறுதிப் போட்டி “எல்கிளாசிகோ” போட்டியாக இந்திய நேரப்படி ஞாயிறன்று நள்ளிரவு சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது. பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகள் மோதிய இந்த இறுதிப்போட்டியில், பார்சிலோனா தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஆனாலும் முதல் பாதி (பார்சிலோனா - ராபின்ஹா, ராபர்ட் தலா ஒரு கோல்) 2-2 ( ரியல் மாட்ரிட் - வினிசியஸ், கார்சியா) என்ற கணக்கில் சமனில் முடிந்தது. 2ஆவது பாதியில் முன்னிலை பெறும் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் செல்லும் என்பதால், இரு அணி வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் 2ஆம் பாதியின் ஒவ்வொரு நிமிடமும் அனல் பறந்தது. 73ஆவது நிமிடத்தில் பார்சிலோனா வீரர் ராபின்ஹா கோலடித்தார். இதுவே அந்த அணிக்கு வெற்றி கோலாக அமைந்தது. இறுதியில் பார்சிலோனா அணி 3-2 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி 16ஆவது முறையாக ஸ்பானிஷ் சூப்பர் கோப்பையை கைப்பற்றியது.

கிரிக்கெட்டிலும் ‘இந்தி’ மொழி அரசியல் சஞ்சய் பாங்கருக்கு தென்னிந்திய ரசிகர்கள், நெட்டிசன்கள் கடும் கண்டனம்

மோடி பிரதமரான பின்பு நாடு முழுவதும் இந்தி மொழியை கட்டாயமாக்க ஒன்றிய பாஜக அரசு தீவிர முயற்சி மேற் கொண்டு வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங் களில் இந்தி மொழிஐய திணிக்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது கிரிக்கெட்டிலும் இந்தி மொழி அரசியல் சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்தியா - நியூஸிலாந்து அணி களுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் வதோ ராவில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் நியூஸிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது, 13ஆவது ஓவரை தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர் வீசிக் கொண்டிருந்தார். அப்போது விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல், பந்தின் வேகத்தைக் குறைக்குமாறு இந்தியில் அறிவுரை வழங்கினார். ஆனால், வாஷிங்டன் சுந்தர் அடுத்த பந்தை இன்னும் வேகமாக வீசினார். இதைக் கவனித்த வர்ணனையாளர் வருண் ஆரோன் (இந்திய அணியின் முன்னாள் வீரர்),”வாஷிங்டன் சுந்த ருக்கு இந்தி அவ்வளவாகத் தெரியா மல் இருக்கலாம். அதனால் கே.எல். ராகுல் அவரிடம் தமிழிலேயே பேசி யிருக்கலாம்” என்று நல்லமுறையில் ஒரு அறிவுரையை வர்ணனையாக கூறினார். உடனே வருண் ஆரோனின் கருத்துக்குப் பதிலளித்த சஞ்சய் பாங்கர் (இவரும் இந்திய அணி யின் முன்னாள் வீரர்) நேரலை வர்ண னையில், “தென்னிந்தியர்கள் தங்கள் மாநில மொழிகளில் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆனால் நான் தேசிய மொழியான இந்தியை மட்டுமே நம்புகிறேன். இந்தி தான் நமது தேசிய மொழி, அதை அனைவரும் கற்றுக் கொண்டு மதிக்க வேண்டும்” என சர்ச்சைக்குரிய வகையில் கூறினார். சஞ்சய் பாங்கரின் இந்த கருத்துக்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன. ஒரு வீரருக்குத் தெரிந்த மொழி யில் தகவல் பரிமாறுவது தான் ஆட்டத் திற்கு நல்லது என்று வருண் ஆரோன் கூறியது சிறந்த கருத்து என்றும், சஞ்சய் பாங்கர் அதைத் தேவையற்ற மொழி அரசியலாக மாற்றி யதாக ரசிகர்கள் விமர்சித்து வரு கின்றனர். குறிப்பாக தமிழ், கன்னட மொழி பேசும் ரசிகர்கள், நெட்டி சன்கள் சமூக வலைதளங்களில் #SanjayBangar மற்றும் #StopHindiImposition போன்ற ஹேஷ்டேக் மற்றும் மீம்ஸ்களுடன் சஞ்சய் பாங்கரை எண்ணெய் இல்லா மல் வறுத்தெடுத்து வருகின்றனர்.