16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மகுடம்
20 Jul 2026, 8:51 pm

16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மகுடம்

23ஆவது சீசன் உலகக் கோப்பை கால்பந்து தொட ரின் இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி திங்களன்று அதிகாலை நடை பெற்றது. இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினா - முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் (ஐரோப்பிய சாம்பியன்) ஆகிய அணி கள் உலகக்கோப்பை மகுடத்திற்கு பலப்பரீட்சை நடத்தின.

ஸ்பெயின் கடும் தாக்குதல்

ஆட்டத்தின் முதல் 10 நிமிடங்கள் மந்தமான போக்குடன் நகர்ந்தது. இரு அணிகளும் களத்தை ஆய்வு செய்வது போன்று களமாடின. ஆனால் 11ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் பயிற்சி யாளர் லூயிஸ் டி லா, ஏதோ சைகை மூலம் தனது நாட்டு வீரர்களுக்கு உத்தர விட்டார். அவர் என்ன கூறினார்? என்ப தற்கான அர்த்தம் தெரியவில்லை. ஆனால் ஸ்பெயின் அணியை முன் களத்தில் தாக்குதல் நடத்த உத்தர விட்டார் என்பது மட்டும் நன்றாக புரிந்தது.

12ஆவது நிமிடம் முதல் ஸ்பெயின் அணி முன்களத்தில் இடைவிடா தாக்கு தல் நடத்தியது. ஸ்பெயின் அணி வீரர் களிடம் பந்தை பறிப்பது, கோலடிக்கா மல் தடுப்பது மட்டுமே அர்ஜெண்டினா வின் வேலையாக இருந்தது. கோல டிக்க அந்த அணியால் முயற்சி எதுவும் செய்ய முடியவில்லை. முதல் பாதி யில் இரு அணிகளும் கோலடிக்க வில்லை.

இரண்டாம் பாதியில் ஸ்பெயின் அணி தாக்குதலை மேலும் தீவிரப்ப டுத்தியது. அனைத்து விதமான அதிரடி ஷாட்களிலும் ஸ்பெயின் வீரர்கள் மிரட் டினர். முதல் பாதியைப் போலவே இரண்டாம் பாதியிலும் அர்ஜெண்டி னா அணி மந்தமான ஆட்டத்தையே வெளிப்படுத்தின. அர்ஜெண்டினா அணியின் தடுப்பாட்டம் சொதப்பலாக இருந்தாலும், அந்த அணியின் கோல் கீப்பர் மார்டினெஸின் அசத்தலான செயல்பாட்டால் ஸ்பெயினின் கோல டிக்கும் முயற்சிகள் தவிடு பொடியானது.

ரெட் கார்டு

இரண்டாம் பாதியின் உதிரி நிமிடத்தில் (90+ முதல்) அர்ஜெண்டி னா, ஸ்பெயின் அணிகள் கோலடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டன. 90+2’ஆவது நிமிடத்தில் அர்ஜெண்டி னா அணிக்கு கிடைத்த மிக எளிதான கோலடிக்கும் வாய்ப்பை அந்த அணி வீணடித்தது. அடுத்த சில விநாடிகளில் அர்ஜெண்டினா இளம் வீரர் என்ஜோ பெர்னாண்டஸ், ஸ்பெயினின் இளம் வீரர் குப்ராசியை எட்டி பறக்கவிட்டார். இது மிக மோசமான பவுலாகும். என்ஜோ பெர்னாண்டஸின் இந்த அடாவடிக்கு நடுவர் ரெட் அட்டை கொடுத்து, அவரை வெளியே அனுப்பி னார். இதனால் அர்ஜெண்டினா 10 வீரர்களுடன் விளையாடும் சூழல் ஏற்பட்டது.

90+3’ஆவது நிமிடத்தில் ஸ்பெ யின் வீரர் நிக்கோ வில்லியம்ஸின் அதி ரடி ஷாட்டை அர்ஜெண்டினா கோல்கீப்பர் மார்டினெஸ் அபாரமாக தடுத்து நிறுத்தினார். 90+8’ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு பிரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. ஸ்பெயின் நட்சத்திர வீரர் யமால் கோல் கம்பம் நோக்கி உதைக்க மார்டினெஸ் பாய்ந்து தடுத்து நிறுத்தினார். ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் கோலடிக்காமல் இருந்ததால், கூடுதல் நேரம் கடைபிடிக்கப்பட்டது.

வெற்றி கோல்

கூடுதல் நேரத்தின் 96ஆவது நிமி டத்தில் பல்வேறு சிக்கலுக்கு இடையே ஸ்பெயின் வீரர் நிக்கோ வில்லியம்ஸ் கோலடித்தார். ஆனால் பந்து செல்லும் முன்னரே சென்றதால், இது பவுலாக அறிவிக்கப்பட்டது. அடுத்த 10 நிமிட இடைவெளியில் (106) நிக்கோ வில்லியம்ஸின் அசத்தலான பாஸால், மாற்று வீரராக களமிறங் கிய ஸ்பெயினின் டோரஸ் கோல டித்தார். இது அர்ஜெண்டினா வீரர் களின் தடுப்பாட்டத் தவறால் அடிக்கப்பட்ட கோலாகும்.

113ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் அணி அடித்த கோல் பவுலாக அறிவிக்கப்பட்டது. கடைசி நேர மான 120ஆவது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணிக்கு எளிதான கோல் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இதனையும் அர்ஜெண்டினா வீரர் கள் வீணடித்தனர். இறுதியில் ஸ்பெ யின் அணி 1-0 என்ற கோல்கணக்கில் அபார வெற்றி பெற்று, 2ஆவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது. இதற்கு முன் 2010ஆம் ஆண்டில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி முதன்முறையாக உலகக்கோப்பை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.