முந்தய பக்கம்

3 விருதுகளை வென்ற ஸ்பெயின்

20 Jul 2026, 8:53 pm
3 விருதுகளை வென்ற ஸ்பெயின்

3 விருதுகளை வென்ற ஸ்பெயின்

உலகக்கோப்பை வெல்வது எவ்வளவு முக்கியமோ, அதே போல விருதுகளும் மிக முக்கியமானதுதான். அதன்படி சிறந்த வீரருக்கான தங்க பந்து விரு தை ஸ்பெயின் வீரர் ரோட்ரி வென் றார். இந்த பிரிவில் அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸி வெள்ளிப் பந்தை யும், பிரான்ஸ் கேப்டன் மாப்பே வெண்கலப் பந்தையும் வென்றனர்.

தங்க காலணி

அதிக கோல்கள் அடிக்கும் வீரர் களுக்கு வழங்கப்படும் தங்க காலணி விருதை மாப்பே (10 கோல்கள்) வென்றார். மாப்பே தொடர்ச்சியாக வெல்லும் 2ஆவது தங்க காலணி ஆகும். மெஸ்ஸி (8 கோல்கள்) வெள்ளி காலணியும், இங்கிலாந்து வீரர் பெல்லிங்ஹாம் (7 கோல்கள்) வெண்கல காலணியையும் வென்ற னர். கோல்கீப்பர்களுக்கு வழங்கப் படும் தங்க கையுறையை ஸ்பெயின் வீரர் உனாய் சைமோன் வென்றார். அதே போல சிறந்த வளரும் வீர ருக்கான விருதை ஸ்பெயின் அணியின் குபார்சி வென்றார். இந்த விருதுகள் அனைத்தும் பிரபல விளையாட்டு உபகரண நிறுவனமான அடிடாஸ் வழங்கியது.

நெதர்லாந்து

உலகக்கோப்பை தொடரில் மிகவும் ஒழுக்கமான விளையாட்டை வெளிப்படுத்தியதாக வழங்கப்படும் ‘பேர் பிளே ட்ராபி விருதை’ நெதர்லாந்து வென்றது. தொடர் முழு வதும் நெதர்லாந்து அணிக்கு மூன்று மஞ்சள் அட்டைகள் மட்டுமே (இவை அனைத்தும் ஜப்பானுக்கு எதிரான முதல் போட்டியில்) வழங்கப்பட்டன.

Share
FacebookXWhatsAppTelegram