கால்பந்து உலகக்கோப்பை வென்றது ஸ்பெயின்
20 Jul 2026, 8:38 pm

கால்பந்து உலகக்கோப்பை வென்றது ஸ்பெயின்

நியூயார்க், ஜூலை 20 - 23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஜுன் 11 அன்று தொடங்கியது. உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் முதன்முறையாக இந்த தொடரில் 48 நாடுகள் பங்கேற்றன. அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளின் 16 நக ரங்களில் உலகக்கோப்பை போட்டி கள் நடைபெற்றன. மொத்தம் 104 ஆட்டங்களைக் கொண்ட இந்த உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி திங்களன்று அதிகாலை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா - ஸ்பெயின் ஆகிய அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணி, கூடுதல் நேரத்தில் (90+30’) 1-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று, 2ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 4ஆவது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினா அணியோ எதிர்பாராத தோல்வியுடன் 2ஆவது இடத்தைப் பிடித்தது. இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் உலகக்கோப்பை, தங்கப்பதக்கத்துடன் ரூ.491 கோடி யை அள்ளியது. மேலும், அமெரிக்க பாரம்பரியத்தின்படி தங்க மோதி ரமும் அந்த அணிக்கு வழங்கப் பட்டது. 2ஆம் இடம் பிடித்த அர்ஜெண்டினா அணி வெள்ளிப் பதக்கமும், ரூ.327 கோடி பரிசுத் தொகையும் பெற்றது. அதே போல போட்டியில் கலந்து கொண்ட அனைத்து அணிகளும் (48) கோடி களுடன்தான் தாய்நாடு சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.