விளையாடு
21 Jul 2026, 9:50 pm

விளையாடு

உலகக்கோப்பை வென்ற ஸ்பெயின் அணிக்கு உற்சாக வரவேற்பு

23ஆவது சீசன் உலகக்கோப்பைத் தொடரின் இறுதிஆட்டத்தில், நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினாவை வீழ்த்தி 16 ஆண்டுகளுக்குப் பிறகு 2ஆவது முறையாக ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உலகக்கோப்பையைக் கைப்பற்றிய ஸ்பெயின் கால்பந்து அணி இந்திய நேரப்படி செவ்வாயன்று தாயகம் திரும்பியது. தலைநகர் மாட்ரிட்டில் உலகக்கோப்பையுடன் நகர்வலம் வந்த ஸ்பெயின் வீரர்களுக்கு சிபில்ஸ் சதுக்கத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு கோலாகல வரவேற்பு அளித்தனர்.

அடுத்த கால்பந்து உலகக்கோப்பை 3 கண்டம் ; 6 நாடுகள் ; 64 போட்டிகள்

கால்பந்து உலகக்கோப்பை தொடரின் 23ஆவது சீசன் வட அமெரிக்க கண்டத்தின் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது. அடுத்து 24ஆவது சீசன் 2030ஆம் ஆண்டில் 3 கண்டங்களில் நடைபெறுகிறது. இந்த உலகக்கோப்பை தொடரை ஆப்பிரிக்கா நாடான மொராக்கோ, ஐரோப்பிய நாடுகளான போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. மேலும், இதன்

நூற்றாண்டு

விழா சிறப்புத் தொடக்கப் போட்டிகள் உருகுவே, அர்ஜெண்டினா மற்றும் பராகுவே ஆகிய தென் அமெரிக்க நாடுகளிலும் நடைபெறவுள்ளன. நூற்றாண்டு உருகுவே தலைநகர் மண்டிவீடியோவில் 1930ஆம் ஆண்டு முதல் உலகக்கோப்பை நடைபெற்றது. இதனால் 24ஆவது சீசன் உலக்கோப்பை நூற்றாண்டு சிறப்பைப் பெறுகிறது. இந்த 100ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில்தான், தொடக்கப் போட்டிகள் உருகுவே, அர்ஜெண்டினா மற்றும் பராகுவே ஆகிய நாடுகளில் 2030ஆம் ஆண்டு ஜூன் 8 மற்றும் 9 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.

தென் அமெரிக்கக் கொண்டாட்டங்களைத் தொடர்ந்து, மொராக்கோ, போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடு களில் அதிகாரப்பூர்வ தொடக்க விழா 2030ஆம் ஆண்டு ஜூன் 13 அன்று நடைபெறும். குறிப்பாக போட்டியை நடத்தும் அனைத்து 6 நாடுகளும் (மொராக்கோ, போர்ச்சுக்கல், ஸ்பெயின், அர்ஜெண்டினா, பராகுவே மற்றும் உருகுவே) இத்தொடருக்கு நேரடியாகத் தகுதிபெறும். இத்தொடரை மேலும் 64 அணிகளாக விரிவுபடுத்துவதற்கான முன்மொழி வை சர்வதேச கால்பந்து சம்மேளனம் தீவிரமாக மதிப்பீடு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தோல்விக்கும் மத்தியிலும் அர்ஜெண்டினாவுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அதிர்ச்சித் தோல்வி அடைந்த அர்ஜெண்டினா அணி திங்களன்று தாயகம் திரும்பியது. அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸ் விமான நிலையத்தில் மெஸ்ஸி, சில வீரர்கள் வரவில்லை. எனினும், பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி மற்றும் ஏனைய வீரர்களை வரவேற்க விமான நிலையத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பும், இராணுவ இசைக்குழுவின் வாத்திய முழக்கமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. குளிரையும் சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நீல மற்றும் வெள்ளை நிறக் கொடிகளுடன் அணிக்கு வரவேற்பளித்தனர்.

பல்வேறு சாதனைகளை தகர்த்த 23ஆவது சீசன் உலகக்கோப்பை களம்

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 23ஆவது சீசன் திங்களன்று நிறைவடைந்தது. இந்த தொடரில் பல வரலாற்றுச் சாதனைகள் முறியடிக்கப்பட்டு புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. கால்பந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய சில முக்கிய சாதனைகளின் தொகுப்பு :

1. மாப்பே (அதிக கோல்கள்) : பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கலியன் மாப்பே, உலகக்கோப்பை வரலாற்றில் ஒட்டுமொத்தமாக 22 கோல்களை அடித்து, அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார்.

2. மெஸ்ஸி (அதிக வெற்றிகள்): அர்ஜெண்டினா அணியின் ஜாம்பவான் மெஸ்ஸி, உலகக்கோப்பை வரலாற்றில் அதிக வெற்றிகளை (23 வெற்றிகள்) பெற்ற வீரர் என்ற புதிய வரலாறு படைத்தார். மேலும், தொடர்ச்சியாக 9 போட்டிகளில் கோல் அடித்து புதிய சாதனை படைத்ததுடன், பெனால்டி பாக்ஸுக்கு வெளியே இருந்து அதிக கோல்கள் (7 கோல்கள்) அடித்தவர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

3. கிறிஸ்டியானோ ரொனால்டோ (அதிக தொடர்களில் கோல்): போர்ச்சுக்கல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தொடர்ச்சியாக 6 உலகக்கோப்பை தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

4. மைக்கேல் ஒலிஸ் (அதிக கோல் உதவிகள்): ஒரே உலகக்கோப்பைத் தொடரில் அதிக கோல் உதவிகளை (Assists - 7) வழங்கி பிரான்சின் மைக்கேல் ஒலிஸ் புதிய சாதனை படைத்துள்ளார்.

5 ரோட்ரி (அதிக பாஸ்கள்): ஸ்பெயின் அணியின் நடுகள வீரர் ரோட்ரி, இந்தத் தொடரில் மொத்தம் 790 வெற்றிகரமான பாஸ்களை செய்து தனது சொந்த சாதனையையே தகர்த்துள்ளார்.

6. சைமன் (அதிக கிளீன் ஷீட்டுகள்): ஸ்பெயின் கோல்கீப்பர் சைமன், ஒரே உலகக்கோப்பையில் 7 கிளீன் ஷீட்டுகளை (எதிரணி கோல் அடிக்க விடாமல்) பாதுகாத்து அசத்தினார்.

7. டிக் அட்வகேட் (வயதான பயிற்சியாளர்): குராசோவா அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற டிக் அட்வகேட், தனது 78ஆவது வயதில் உலகக்கோப்பையில் பங்கேற்ற மிக முதிய பயிற்சியாளர் என்ற சாதனையைப் படைத்தார்.