விளையாடு
15 Jul 2026, 9:34 pm

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா

பிரான்ஸ் அதிர்ச்சி தோல்வி இறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின்

23ஆவது சீசன் உலகக்கோ ப்பை கால்பந்து தொடர் வட அமெரிக்க நாடுகளான அமெரிக்கா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடு களில் கூட்டாக (காலிறுதி முதல் அமெரிக்காவில் மட்டும் ஆட்டங்கள்) நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ள நிலையில், புதனன்று அதி காலை நடைபெற்ற முதல் அரை யிறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் களான பிரான்ஸ் - ஸ்பெயின் அணி கள் மோதின. அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் யாரும் எதிர்பாராத வகை யில், ஸ்பெயின் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது.

பெனால்டி

ஆட்டத்தின் 20ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் லூகாஸ் டிக்னே பந்தை உதைப்பது போல, ஸ்பெயின் அணி யின் நட்சத்திர வீரர் லாமின் யமாலை எட்டி உதைத்தார். இது வேண்டு மென்றே எட்டி உதைத்தது போன்று இருந்ததால், நடுவர் ஸ்பெயின் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கி னார். இந்த பெனால்டி வாய்ப்பில் (22’ - கோலடித்த நேரம்) ஸ்பெயின் வீரர் ஒயர்சபால் கோலடித்தார். இந்த கோல் மூலம் ஸ்பெயின் அணி முதல் பாதி யில் 1-0 என்ற கோல் அணி முன்னி லை பெற்றது.

மீண்டும் கோல்

இரண்டாம் பாதியில் பிரான்ஸ் அணி பலமான பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் பாதியை போலவே ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. ஆட்டத்தின் 58ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் அணி மேலும் ஒரு கோல டித்தது. இந்த கோலை ஸ்பெயின் பின்கள வீரர் பெட்ரோ அடித்தார்.

“ஒரு கோலடித்தாலே ஸ்பெயின் அணியிடம் இருந்து பந்தை பறிப்பது சிரமம்; 2 கோல் அடித்துவிட்டதே! பிரான்ஸ் என்ன செய்ய போகிறதோ?” என கால்பந்து ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டனர். இந்த எதிர்பார்ப்பை போலவே ஸ்பெயின் அணியிடம் பந்தை பறிப்பதா? அல்லது கோலடிக்க முயற்சி செய்வதா? என பிரான்ஸ் அணி இரண்டு இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்டது.

எனினும் ஆட்டம் முடியும் தரு வாயில் கடைசி 10 நிமிடம் (80’-90’) பிரான்ஸ் அணி கோலடிக்க வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பிரீகிக் உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளும் கிடைத்தும் பிரான்ஸ் அணி கடுமை யாக சொதப்பியது. பிரான்ஸ் அணி சொதப்பியது என்று கூறுவதை விட, ஸ்பெயின் கோல் கீப்பரின் (சைமன்) அசத்தலான ஆட்டத்தால் அந்த அணி யின் கோலடிக்கும் வாய்ப்பு பறிபோ னது எனக் கூறலாம்.

இறுதியில் ஸ்பெயின் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று, உலகக்கோப்பை வரலாற்றில் 2ஆவது முறையாக இறுதிக்கு முன்னேறியது. இதற்கு முன்பு 2010ஆம் ஆண்டு ஸ்பெயின் அணி இறுதிக்கு முன்னேறி, உலகக்கோப்பையை முதன்முறையாக வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் நாட்டில் பெரும் வன்முறை

உலகக்கோப்பை அரை யிறுதி ஆட்டத்தில் ஸ்பெ யினிடம் 2-0 என்ற கணக்கில் பிரான்ஸ் தோல்வியடைந்து வெளியேறியது. இதைத்தொடர்ந்து, பிரான்ஸின் பல் வேறு பகுதிகளில் வன்முறை வெடித் தது. தலைநகர் பாரீஸ், லியோன் உள்ளிட்ட நகரங்களில் ரசிகர்கள் வாக னங்களுக்கு தீ வைத்தும், பட்டாசு களை வீடுகளுக்குள் செலுத்தியும் பெரும் அடாவடியில் ஈடுபட்டனர். வெற்றி என்றாலும் வன்முறை, தோல்வி என்றாலும் வன்முறை என்ப தை கருத்தில் கொண்டு, பிரான்ஸ் நாட்டு காவல்துறை போட்டி நடை பெறும் முன்னரே தயார் நிலையில் இருந்தன. இதனால் வன்முறை சம்ப வங்கள் நடந்த போது, காவல்துறை யினர் விரைந்து செயல்பட்டு நிலை மையை கட்டுக்குள் கொண்டு வந்த னர். பெரிய அளவிலான சேதங்களோ அல்லது பலத்த காயங்களோ ஏற்பட வில்லை. எனினும் இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 160-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள் ளனர் என செய்திகள் வெளியாகி யுள்ளன.

அமெரிக்காவில் உணவு விற்பனை மந்தம்

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் முக்கியமான அணிகளின் ஆட்டம் மற்றும் காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டிகள் அமெரிக்காவில்தான் நடைபெறும் படி அட்டவணை உருவாக்கப்பட்டது. காரணம் கல்லா கட்ட அமெரிக்கா விற்கு சாதகமாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் திட்டம் தீட்டியதுதான். அதே போல மெக்சிகோ, கனடா நாடுகளில் பெயரளவில் மட்டுமே சில போட்டிகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், அமெரிக்கா முக்கிய ஆட்டங்களை கையாண்டா லும், அங்கு உணவு விற்பனையில் மந்த மாக தான் உள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. ‘சர்கானா’ நிறு வனத்தின் ஆய்வுகளின்படி, முன்பே கலந்த காக்டெய்ல்கள் (மது - பழச்சாறு) 25.4% அளவிலும், மது அல்லாத பீர் 10.9% அளவிலும், எனர்ஜி பானங்கள் 10% அளவிலும், சூப்பர்- பிரீமியம் உள்நாட்டு பீர் 2.2% அள விலும், சாக்லேட் 1.6% அளவிலும், பிற மிட்டாய்கள் 2.2% விற்பனை நடந்துள்ளது. மற்றபடி அமெரிக்காவின் பாரம்பரிய உணவு வகைகளை உள் மற்றும் வெளிநாட்டு ரசிகர்கள் கண்டுகொள்ளவில்லை. ஆனால் உல கக்கோப்பையில் சில போட்டிகளை மட்டும் நடத்திய கனடா, மெக்சிகோ நாடுகளில் உணவு விற்பனை அமோக மாக இருந்தது என செய்திகள் வெளி யாகியுள்ளன. காரணம் அந்நாட்டு மக்களின் உபசரிப்பு அப்படி என்றும் தகவல் வெளியாகியுள்ளன.

பிரான்ஸ் செய்த 2 மோசமான தவறுகளால் வெற்றி பெற்ற ஸ்பெயின்

ஸ்பெயின் அணி இந்த ஆட்டத்தில் கோல டிக்க ஆதிக்கம் செலுத்தியதே தவிர, வலுவான முயற்சிகளை அந்த அணி எடுக்கவில்லை. ஸ்பெயின் அணி அடித்த இரண்டு கோல்களும், பிரான்ஸ் அணி செய்த பெரும் தவறால் கிடைத்தது தான். பிரான்ஸ் வீரர் லூகாஸ் டிக்னே தேவையில்லாமல் யமாலை எட்டி உதைக்காமல் இருந்திருந்தால் ஸ்பெ யின் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்திருக்காது. அதே போல 58 ஆவது நிமிடத்தில் பந்தை உதைக்க ஒரே நேரத்தில், அத்தனை பிரான்ஸ் வீரர்களும் தடுப்பாட்ட களத்தை விட்டு முன்னோக்கி ஓடியதால் தான், கிடைத்த கேப்பில் (இடைவெளி) ஸ்பெயின் வீரர் பெட்ரோ கோல டித்தார். இந்த நேரத்தில் பிரான்ஸ் வீரர்கள் 2 பேர் மட்டுமே பந்தை தடுக்க ஓடியிருந்தால், ஸ்பெயின் அணி இரண்டாவது கோலை அடித்திருக் காது. பிரான்ஸ் அணி செய்த இரண்டு மாபெரும் தவறுகளால் தான் ஸ்பெயின் அணி வெற்றி பெற்று, இறுதிக்கு முன்னேறியது. ஜூலை 19 நள்ளிரவில் நடை பெறும் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி, அர்ஜெண்டினா அல்லது இங்கி லாந்து அணியை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.