தீக்கதிர் உலக செய்திகள்
28 Oct 2026, 8:50 pm

ஸ்பெயினில் ரயில்கள் மோதல்: 30 பேர் பலியான துயரம்

ஸ்பெயினில் இரண்டு அதிவேக ரயில்கள் நேருக்கு நேர் மோதி கோரமான விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் 30 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சிக்னல் கோளாறு காரணமாக நின்று கொண்டிருந்த போது மற்றொரு அதிவேக ரயில் அதன் மீது மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. மாட்ரிட் நகரத்தையும் தெற்கு அந்தாலுசியா பகுதியையும் இணைக்கும்வழித்தடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. இதுஇவ்வழித்தடத்தில் ஒரே ஆண்டில் நடக்கும் இரண்டாவது விபத்தாகும்.

கடுமையான போருக்கு தயாராகுங்கள்

அரபு நாடுகளுக்கு அமெரிக்கா ‘உத்தரவு’ அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிந்த பிறகு,ஈரான் மீது மிக வேகமாகவும் தீவிரமாகவும் தாக்குதல் நடத்த தயாராகுமாறு அரபு நாடுகளை அமெரிக்கா எச்சரித்துள்ளதாக ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் உள்கட்டமைப்பு மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது மிகப் பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்துவது குறித்து டிரம்ப் பரிசீலித்து வருகிறார். குறிப்பாக கடுமையான போருக்கு தயாராக இருக்க வளைகுடா நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையானது இந்தப் போரில் இஸ்ரேலும் பங்கேற்கத் தயாராகி வருவதைக் குறிப்பதாக உள்ளன.

அமெரிக்காவிற்கு தப்பி ஓடிய ஃபிளாவியோ பொல்சானரோ

புளோரிடா, அக்.28-பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் ஃபிளாவியோ பொல்சானரோ அந்நாட்டை விட்டு ஓடிவிட்டார் என செய்திகள் வெளியானது. இந்நிலையில் அவர் அமெரிக்கஅதிகாரிகளின் உதவியுடன் ரகசியமாக புளோரிடா சென்றுவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அவரதுசகோதரர் எட்வர்டோவைச் சந்தித்துள்ளார் எனவும் ‘மெட்ரோபோலெஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

2025 பிப்ரவரி முதல் எட்வர்டோ அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் அமெரிக்காவில் இருந்து கொண்டு அந்நாட்டின் முக்கிய அதிகாரிகள் மூலமாக தனது சொந்த நாட்டுக்கு எதிரானதுரோக நடவடிக்கைகளை செய்து வருகிறார்.

தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக அமெரிக்கா சென்ற ஃபிளாவியோ பொல்சானரோவும் மற்றும் அவரது சகோதரர் எட்வர்டோவும் தமது சொந்த நாடான பிரேசில்மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் எனவும் அதன்மீது நேரடியாக ராணுவத் தாக்குதலை நடத்தவேண்டும் எனவும் பேசியுள்ளனர். இவர்களை ஆட்சியில் அமர வைப்பதன் மூலமாக அந்நாட்டின் மொத்த வளங்களையும் கொள்ளையடித்து விடலாம் என அமெரிக்கா திட்டமிட்டு வந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் அமெரிக்காவின் கனவுகளை தகர்த்துவிட்டது.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான சில மணி நேரத்தில் ஃபிளாவியோ போல்சானரோ அந்நாட்டை விட்டுத் தப்பியோடியதாக செய்திகள் வெளியானது. முன்னதாகபிரேசில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஃபிளாவியோ பிரேசிலை விட்டு வெளியேறத் தடை விதித்தார். மேலும் அவரது பாஸ்போர்ட்டை 24 மணிநேரத்திற்குள் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். இந்த உத்தரவை அவர் மதிக்காமல் நாட்டை விட்டு ஓடியுள்ளார். நீதிமன்றம் விதித்தகாலக்கெடு முடிந்ததையடுத்து அப்போது அந்நாட்டு காவல்துறை அவரது பாஸ்

போர்ட்டை ரத்து செய்துள்ளது.

ஃபிளாவியோ மீது ஊழல், பணமோசடி, அந்நியச் செலாவணி மோசடி போன்ற குற்றச்சாட்டு வழக்குகள் விசாரணையில் உள்ள நிலையில் அவர் தப்பித்து ஓடியுள்ளார். எனினும் ஃபிளாவியோ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விசா வழங்கப்படும் என்றுஅமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது. அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்துள்ள அவர் இந்த வாரம் வாஷிங்டனில் செய்தியாளர் சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளார்.

டிரம்ப்புடன் நெருக்கமாக உள்ள மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் சைமன் லெவி, செனட்டர் ஃபிளாவியோ பாதுகாப்பாக வந்து சேர்ந்துவிட்டார். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோதான் காரணம் என்றும் பதிவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் அமெரிக்க அரசியலிலும் சிறிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. தேர்தலில் தோற்பது புகலிடம் பெறுவதற்கான காரணம் அல்ல என்று அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோவாகின் காஸ்ட்ரோ கூறியுள்ளார். மேலும் ஃபிளாவியோ பிரேசிலின்சட்டத்திற்குப் புறம்பாக அந்நாட்டை விட்டுத் தப்பியோட டொனால்டு டிரம்ப் அரசு உதவியதா என கேள்வியெழுப்பியுள்ளார். பிரேசிலை விட்டுத் தப்பியோட உதவியதில் தனது பங்கு என்ன என்பது குறித்து டிரம்ப் நிர்வாகம் நாடாளுமன்றத்திற்குப் பதில் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.