வீதிகளில் திரண்ட 40 லட்சம் தொழிலாளர்கள் வீட்டு வாடகை, விலைவாசி உயர்வுக்கு எதிராக ஸ்பெயினில் மாபெரும் போராட்டம்
12 Nov 2026, 9:12 pm

வீதிகளில் திரண்ட 40 லட்சம் தொழிலாளர்கள் வீட்டு வாடகை, விலைவாசி உயர்வுக்கு எதிராக ஸ்பெயினில் மாபெரும் போராட்டம்

மாட்ரிட்,நவ.12-ஸ்பெயினில் வீட்டு வாடகை உயர்வுவிலைவாசி உயர்வுக்கு எதிராக தொழிலாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என சுமார் 40 லட்சம் பேர் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டம்நடைபெற்றது.

2012 க்குப் பிறகு சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றுள்ளது. நவம்பர் 29 அன்று அந்நாட்டில் பொது தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இப்போராட்டமும் நடைபெற்றுள்ளது. ஸ்பெயின் நாடு ஒரு முக்கிய சர்வதேச சுற்றுலாத் தலமாகும். இதனால் அந்நாட்டின் மாட்ரிட், பார்சிலோனாபோன்ற பிரபலமான நகரங்களில் வீடுகளின் விலையும், வாடகையும், சாமானிய மக்களால் வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பல வீட்டு உரிமையாளர்கள் உள்ளூர் மக்களுக்கு நீண்ட கால வாடகைக்கு விடுவதை விட, சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகலாபத்திற்குக் குறுகியகால வாடகைக்கு விடுவதையே விரும்புகின்றனர். இதனால் உள்ளூர் மக்கள் தங்குவதற்கு வீடுகள் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் வீடுங்கள் பற்றாக்குறையால்தவித்து வருகின்றனர்.

பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வீடுகளை மொத்தமாக வாங்கி, செயற்கையாக விலையை ஏற்றும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. அதே சமயம், ஏழை மற்றும்நடுத்தர மக்களுக்காக அரசு கட்டிக்கொடுக்கும் மலிவு விலை ‘பொது வீட்டுவசதித் திட்டங்கள்’ குறைந்து விட்டன. மேலும் தொழிலாளர்களின் மாத வருமானத்தில் பெரும்பகுதி வீட்டு வாடகைக்கோ அல்லது வீட்டுக் கடனுக்கோ செலவு செய்யும் கட்டாயத்தில்உள்ளனர். சில இடங்களில் ஊதியத்தில் 90 சதவீதம் வரை இதற்கு செலவாகிறது. வீட்டு வாடகை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்த அளவிற்கு, தொழிலாளர்களின் ஊதியம் உயரவில்லை.

இந்த நிகழ்வுகள் அந்நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி தற்போது பெரும் போராட்டமாக வெடித்தது.மக்களின் போராட்டத்திற்குப் பிறகு, வாடகையைக் கட்டுப்படுத்தவும், வீடுகளை விட்டு வெளியேற்றுவதற்குத் தடை விதிக்கவும் பெட்ரோ சான்செஸ்தலைமையிலான அரசு அக்டோபர் மாதம் சில அவசர சட்டங்களை கொண்டு வந்தது. அச்சட்டங்களை எதிர்க்கட்சிகள் தோற்கடித்தன. இதனால் மக்களுக்குஉடனடி நிவாரணம் கிடைக்காமல் போனது. இதன்காரணமாகஅக்டோபர் 5 பிரதமர் பெட்ரோ சான்செஸ்நாடாளுமன்றத்தைக் கலைத்து நவம்பர் 29 அன்று பொதுத் தேர்தல் அறிவித்தார்.அந்நாட்டின் முக்கியத்தொழிற்சங்கங்களான தொழிலாளர் ஆணையங்கள் (CCOO - Comisiones Obreras) மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கம் (UGT - Unión General de Trabajadores) ஆகியவைஇணைந்து நவம்பர் 11 அன்று நாடு தழுவியவேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்த போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகள் வீட்டு உரிமைக்குழுக்கள்சங்கங்கள் மாணவர்கள் என நாடு முழுவதும் 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றுள்ளனர். பிரதானமாக வாகன உற்பத்தி தொழிற்சாலையில் பணியாற்றும் 90 சதவிகித தொழிலாளர்கள் இப்போராட்டத்தில்பங்கேற்றுள்ளனர்.

மலிவு விலையில் வீடுகள் வேண்டும்; ரியல் எஸ்டேட் நிறுவனங்களை கட்டுப்படுத்த வேண்டும்; பணியிடச் சுகாதாரப் பாதுகாப்பு; ஊதிய உயர்வு வேண்டும்; வாடகைதாரர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதே இவர்களின் முதன்மைக் கோரிக்கையாக உள்ளது.