தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வீட்டு வாடகை உயர்வு: ஸ்பெயின் மக்கள் போராட்டம்!

9 Oct 2026, 9:04 pm
வீட்டு வாடகை உயர்வு: ஸ்பெயின் மக்கள் போராட்டம்!

வீட்டு வாடகை உயர்வு: ஸ்பெயின் மக்கள் போராட்டம்!

மாட்ரிட், அக். 9ஸ்பெயின் நாட்டில் வரலாறு காணாத வகையில் வீடுகளின் வாடகை மற்றும் விற்பனை விலை உயர்ந்துள்ளதால்,பொதுமக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தத் கடும் வீட்டுவசதி நெருக்கடி(Housing Crisis) காரணமாக ஸ்பெயின் அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் பல்லாயிரக்கணக்கான மக்கள்வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.

முதியவர் மரணம் ஏற்படுத்திய அதிர்வுகள்

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் 70 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து வந்த மரியா டெல் கார்மென் அபாஸ்கல் (87) என்ற முதியவர் வசித்து வந்தார். அவர் வசித்த வீட்டின் ரியல் எஸ்டேட் நிறுவனம் வாடகையைக் கடுமையாக உயர்த்தியதன் காரணமாக, கடந்த செப்டம்பர் 23 அன்று அந்த முதிய பெண்மணி ஈவிரக்கமின்றிப் படுக்கையோடு வீட்டை விட்டு வலுக்கட்டா யமாக வெளியேற்றப்பட்டார்.

இதனால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாகஉயிரிழந்தார். இந்தச் சம்பவம் ஸ்பெயின் மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. “இது சாதாரண மரணம் அல்ல, ஒரு அமைப்பின் படுகொலை!” என முழக்கமிட்டு ஆயி ரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

வாடகை உயர்வும் துயரமும்

ஸ்பெயினில் வீடுகளின் பற்றாக்குறை யும், கட்டுப்பாடற்ற வாடகை உயர்வும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தைச் சீரழித்துள்ளது. ஸ்பெயினில் ஒருவரின் சராசரி மாதச் சம்பளம் இந்திய மதிப்பில் ரூ.2,67,315 ஆக உள்ளது. ஆனால், ஒரு சிறிய வீட்டின் வாடகை ரூ.1,27,138 ஆகும். இது அவர்கள் ஈட்டும் ஊதியத்தில் சுமார் 50 சதவீதமாகும். மேலும், 2026 செப்டம்பர் மாத நிலவரப்படி அந்நாட்டின் பணவீக்கம் 4.9 சதவீதமாக அதிகரித்துள்ளதால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும்கடுமையாக உயர்ந்துள்ளது.

அத்துடன், அந்நாட்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வீடுகளைக் கட்டி வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்குக் குறுகிய காலத்திற்கு வாடகைக்குவிடுகின்றன. இதனால் உள்ளூர் மக்களுக்குப் போதிய அளவில் வீடுகள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும்எழுந்துள்ளது.

வீடுகள் பற்றாக்குறையும் அரசியல் முடக்கமும்

ஸ்பெயின் தலைநகரான மாட்ரிட்டில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் குறைந்த வாடகையிலோ அல்லது மானிய விலையிலோ தங்குவதற்காக அரசால் வழங்கப்படும் ‘சமூக நல அரசு வீடுகள்’ (Social Housing) வெறும் 10,000 மட்டுமே உள்ளன. ஆனால், தலைநகரில் வீடுகள் தேவைப்படும் எளிய மக்களின் எண்ணிக்கை 35 லட்சமாக உள்ளது.பிரதமர் பெட்ரோ சான்செஸ் தலைமையிலான முற்போக்கு அரசு, வீடுகளிலிருந்து மக்களை வெளியேற்றுவதைத் தடுப்பது மற்றும் வாடகையைக் கட்டுப்படுத்துவது தொடர்பான அவசரச் சட்டங்களைக் கொண்டுவர முயன்றது. எனினும், எதிர்க்கட்சியான வலதுசாரி ‘மக்கள் கட்சி’ மற்றும் ‘வாக்ஸ்’ ஆகியவற்றின் எதிர்ப்பால் இந்த மசோதாக்கள்தோற்கடிக்கப்பட்டன.

நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்ற முடியாததால் ஏற்பட்ட அரசியல் முடக்கத்தைத் தொடர்ந்து, பிரதமர் பெட்ரோ சான்செஸ் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, நவம்பர் 29 அன்று இடைக்காலப் பொதுத் தேர்தல் நடை

பெறும் என அறிவித்துள்ளார். ரியல் எஸ்டேட் சந்தையில் அரசு நேரடியாகத் தலையிட்டு விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு மக்கள்எதிர்பார்க்கின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.