தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாடு

11 Jul 2026, 8:58 pm
விளையாடு

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா

பெல்ஜியம் ஏமாற்றம் : அரையிறுதியில் ஸ்பெயின்

23ஆவது சீசன் உலகக் கோப்பை கால்பந்து தொடர் வட அமெரிக்க நாடுகளான அமெரிக்கா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளில் கூட்டாக நடை பெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ள நிலையில், 2ஆவது காலிறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் - பெல்ஜியம் அணிகள் மோதின. இந்த ஆட்டம் அமெரிக் காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மைதானத் தில் சனியன்று அதிகாலை நடை பெற்றது. இந்த ஆட்டத்தின் முதல் 20 நிமி டங்களில் பெல்ஜியம் கோலடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டது. ஆனால் 20 நிமிடத்திற்கு மேல் ஸ்பெயின் தாக்கு தல் பாணி ஆட்டத்தை கையிலெ டுத்தது. இதன்பலனாக ஆட்டத்தின் 30ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ரூயிஸ் கோலடித்தார். அடுத்த 11 நிமிட இடைவெளியில் பெல்ஜியம் வீரர் சார்லஸ் கோலடித்து பதிலடி கொ டுத்தார். முதல் பாதியில் இரு அணிக ளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்தன. இரண்டாம் பாதியில் இரு அணிக ளும் கோலடிக்க தீவிர தாக்குதலை தொடுத்தாலும், ஸ்பெயின் அணியின் கை சற்று ஓங்கியது. ஆனாலும் 85 ஆவது நிமிடம் வரை இரு அணிக ளும் மேற்கொண்டு கோலடிக்க வில்லை. இதனால் இந்த ஆட்டம் கூடுதல் நேரத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 88ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மைக்கேல் மெரினோ தலையால் முட்டி கோல டித்தார். இதுவே ஆட்டத்தின் வெற்றி கோலாக அமைந்தது. இறுதியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது. ஸ்பெயின் - பிரான்ஸ் அமெரிக்காவின் டல்லாஸில் ஜூலை 14ஆம் தேதி நள்ளிரவில் நடை பெறவுள்ள அரையிறுதிப் போட்டி யில் ஸ்பெயின் அணி, வலுவான பிரா ன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. 2010ஆம் ஆண்டு உலகக்கோப் பையை வென்ற பிறகு, மீண்டும் இறு திப்போட்டிக்குள் நுழைய ஸ்பெயின் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

மோசமான தடுப்பாட்டத்தால்தான் பெல்ஜியம் வெளியேற்றம்

ஆட்டத்தின் பெரும்பாலான நிமிடங்களில் கோலடிக்க ஸ்பெ யின் அணி தாக்குதலை நடத்தியது உண்மை தான். ஆனால் தடுப்பாட்டத்தில் அந்த அணியின் கோல் கீப்பர் திபோ கோர்ட்டிஸ் தவிரவேற யாரும் சிறப்பாக செயல்படவில்லை. கோர்ட்டிஸ் காயம் காரணமாக 71ஆவது நிமிடத்தில் வெளியேறினார். அதுவரை கிட்டத் தட்ட 7க்கும் மேற்பட்ட முக்கிய கோல்கள் தடுத்தார். இல்லையென்றால் ஸ்பெயின் அணி 10 கோல்கள் வரை விளாசியிருக்கும். கோர்ட்டிஸ் வெளியேறியது தான் பெல்ஜியம் அணிக்கு பின்னடைவு என கூறுவதும் தவறானதுதான். 71ஆவது நிமிடத்திற்குப் பிறகு களமிறங்கிய மாற்று கோல் கீப்பர் லாம்மென்ஸும் மிக அருமையாக தான் விளையாடி னார். அதாவது 2 கோல் கீப்பர்களும் நன்றாக தான் விளையாடினர். மோசமான தடுப்பாட்டத்தால்தான் பெல்ஜியம் அணி வெளியேறியது. இதற்கு ஆதாரமாக 2 சம்பவங்கள் இந்த ஆட்டத்தில் அரங்கேறின. ஸ்பெயின் அணி 2 கோல்கள் அடிக்கும் முன்பு பந்துகளை கோர்ட்டிஸ், லாம்மென்ஸ் (தலா ஒரு கோல்) அபாரமாக தடுத்தனர். ஆனால் கோல் கீப்பர்கள் தடுத்த பந்தை பெல்ஜியம் பின்கள வீரர்கள் தற்காக்காததால் அவை கோல்களாக மாறின. கோல்கீப்பர்கள் தடுத்துக் கொடுத்த பந்தை பெல்ஜியம் வீரர்கள் அசமந்தமாக நிற்காமல் கார்னர் பக்கம் எட்டி உதைத்து இருந்தால், இந்த ஆட்டத்தில் பெல்ஜியம் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறி இருக் கும். கீப்பர்கள் அபா ரமாக செயல்பட்டும், பின்கள வீரர்கள் சொ தப்பியதால் பெல்ஜி யம் அணி தோல்வி யுடன் உலகக்கோப் பையில் இருந்து வெளியேறியது.

கடைசி காலிறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா - சுவிட்சர்லாந்து இன்று பலப்பரீட்சை

உலகக்கோப்பை கால் பந்து தொடரின் கடைசி காலிறுதி ஆட்டம் அமெ ரிக்காவின் கேன்சாஸ் நகரில் ஞாயி றன்று காலை 6:30 மணிக்கு நடைபெறு கிறது. இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பி யன் அர்ஜெண்டினா - சுவிட்சர்லாந்து அணிகள் மோதுகின்றன. சுவிட்சர்லாந்து அணியை விட அர் ஜெண்டினா சற்று பலம் வாய்ந்தவை யாக உள்ளது. இதனால் அர்ஜெண்டி னாவை சுவிட்சர்லாந்து அணி தாக்குப் பிடிப்பது சற்று சிரமமான விஷ யம் தான். எனினும் 72 ஆண்டுக ளுக்குப் பிறகு உலகக்கோப்பை காலிறுதிக்குள் நுழைந்து மிகுந்த உற்சாகத்தில் சுவிட்சர்லாந்து லீக் சுற்று முதல் நாக் அவுட் -16 ஆட்டம் வரை தோல்வியை சந்திக்காமல் வலுவான ஆட்டத்துடன் அர்ஜெண்டி னா அணிக்கு சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இரு அணிகளிலும் இளம் வீரர்கள் அதிகம் இருப்பதால், ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றி வாய்ப்பு கணிப்பில் அர்ஜெண்டினா அணிக்கு 57% வாய்ப்புகளும், சுவிட்சர்லாந்து அணிக்கு 43% வாய்ப்புகளும் உள்ளன.

இரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 5 முறை அர்ஜெண்டினா வெற்றி பெற்றுள்ளது, 2 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. உலகக்கோப்பை வரலாற்றில் சுவிட்சர்லாந்து இதுவரை அர்ஜெண்டினாவை தோற்கடித்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அர்ஜெண்டினா - சுவிட்சர்லாந்து

நேரம் : காலை 6:30 மணி இடம் : கேன்சாஸ், அமெரிக்கா சேனல் : ஜீ 5 (ZEE 5), யுனைட்8 (தொலைக்காட்சி)

உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடைபெறும் மைதானத்தின் புல்வெளி விற்பனைக்கு அறிவிப்பு ஒரு துண்டின் விலை ரூ.37,500

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி, அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைப் மைதா னத்தில் ஜூலை 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில் பயன்படுத்தப்படவுள்ள மைதானத்தின் புல்வெளியை, நினை வுப் பரிசாக விற்க சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) முடிவு செய்துள்ளது. மைதானத்தின் புல்வெளித் துண்டு ஒன்று 450 டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.37,500) விற்பனை செய்யப்படுகிறது. இந்த புல்வெளி துண் டுகள், உயர்தர அக்ரிலிக் உறையில் பாது காக்கப்பட்டு, அதனுடன் ஒரு நினைவக மும் இணைக்கப்பட்டு ரசிகர்களுக்கு வழங்கப்படுகிறது. “கால்பந்து வரலாற் றின் ஒரு உண்மையான பகுதியை நீங்களே சொந்தமாக்கிக் கொள்ளுங் கள்” என்ற வாசகத்துடன், இது ஒரு பிரத் யேகமான சேகரிப்புப் பொருளாக பிபா சந்தைப்படுத்துகிறது. இந்த புல்வெளி துண்டுகள், இறு திப்போட்டி முடிந்த பின்னரே வாடிக்கை யாளர்களுக்கு அனுப்பப்படும். தற்போ தைய நிலவரப்படி, இவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள முகவரிக ளுக்கு மட்டுமே அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்களன்று உலகக்கோப்பை போட்டி இல்லை

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டங்கள் ஞாயிறன்றுடன் நிறைவு பெறுகிறது. அதன்பின்னர் ஜூலை 13 (திங்கள்) விடுமுறை தினமாகும். தொடர்ந்து ஜூலை 14 அன்று நள்ளிரவு முதல் அரையிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.