முந்தய பக்கம்

பள்ளியில் விண்வெளி அறிவியல் கண்காட்சி

12 Jul 2026, 11:59 pm
பள்ளியில் விண்வெளி அறிவியல் கண்காட்சி
<p><strong>பள்ளியில் விண்வெளி அறிவியல் கண்காட்சி</strong></p><p>தென்காசி, ஜூலை 12- தென்காசியில் உள்ள இலஞ்சி இராம சுவாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அறிவியல் மையம் சார்பில் விண்வெளி அறிவியல் குறித்து மாண வர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் அறிவியல் தொழில் நுட்பத்தை புரிந்து கொள்ளவும் அறிவியல் கண்காட்சி நடை பெற்றது. இக்கண்காட்சிக் கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகா, மாவட்ட அறிவியல் மைய அலு வலர் மாரி லெனின் ஆகியோர் செய்திருந் தனர். பள்ளியில் நடைபெற்ற கண்காட்சிக்கு தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தலைமை தாங்கி கண்காட்சியின் நோக்கம் குறித்து பேசி மாணவர்களிடம் ஆர்வமூட்டினார். அறி வியல் மைய கல்வி ஒருங்கிணைப்பாளர் கந்த வேல்ராஜா துவக்கி வைத்தார். இதில் இருபது படைப்புக்கள் செயல் முறை வடி வில் இடம் பெற்றன. பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களும் கண்டு வியந்த னர். குறிப்பாக புவியின் சுழற்சி , ராக்கெட் சுற்றி யக்க திசைவேகம், செயற்கைக் கோளின் அமைப்பு மற்றும் பணிகள், தகவல் தொழில் நுட்பம், பேரிடர் மேலாண்மை, தொலை யுணர்வி, பி எஸ் எல் வி., ஜி எஸ் எல் வி., இயற்கை வள பாதுகாப்பு மற்றும் கண்டுபிடிப்பு, நவீன மருத்துவம் மங்கள் யான், சந்திராயன் போன்ற பல்வேறு தலைப்புகளில் மனித நலனுக்கான விண் வெளி தொழில் நுட்பங்களை வடிவமைத்து காட்சிப்படுத்தி இருந்தது நிறைவாக அறிவியல் மைய அறி வியல் தொடர்பியலாளர் ஆதித்யா, விந்தை வேதியியல் செய்து காட்டி மாணவர் களுக்கு விஞ்ஞான வினாடி வினா நடத்தி பரிசு வழங்கினார். பள்ளிச் செயலர் ஐ.சி. சண்முக வேலாயுதம், ஆசிரியர் குத்தாலம், அறிவியல் ஆசிரியர் சுரேஷ்குமார், அறி வியல் மைய தொழில் நுட்ப வல்லுநர் நட்ராஜ் விண்ணை நோக்கி திரவ ராக்கெட் ஏவி காட்டினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram