தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விண்வெளியா? குப்பைத் தொட்டியா?

yesterday
விண்வெளியா? குப்பைத் தொட்டியா?

விண்வெளியா? குப்பைத் தொட்டியா?

தொழில்நுட்ப வளர்ச்சி மனிதகுலத்தின் முன்னேற்றத்துக்கு அத்தியாவசியமானது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.ஆனால், அந்த வளர்ச்சிபூமியின் இயற்கைச் சமநிலையையும் எதிர்காலத் தலைமுறையின் பாதுகாப்பையும் பணயம் வைத்துநிகழக்கூடாது.

மக்கள் பயன்பாட்டுக்கும் அறிவியல் ஆராய்ச்சிக்கும் பயன்பட வேண்டிய விண்வெளி, இன்று பெருநிறுவனங்களின் லாபக் கணக்குகளுக்கான சந்தையாகமாறிவருகிறது. ஸ்பேஸ் எக்ஸ் ஏற்கெனவே 10,000-க்கும் மேற்பட்ட ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை இயக்குகிறது; மொத்தம் 42,000 வரை நிறுத்தத் திட்டமிட்டுள்ளது. அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களும் ஆயிரக்கணக்கானசெயற்கைக்கோள்களுடன் போட்டியில் இறங்கியுள்ளன.மறுபுறம், வல்லரசு நாடுகள் விண்வெளியைக் கண்காணிப்பு மையமாகவும் இராணுவ ஆதிக்கக் களமாகவும் பயன்படுத்துகின்றன.செயற்கைக்கோள் தகர்ப்புச் சோதனைகள் விண்வெளியை மாசுபடுத்தியுள்ளன.

1967-ஆம் ஆண்டின் வெளிப்புற விண்வெளி ஒப்பந்தம், விண்வெளியின் ஆய்வும் பயன்பாடும் அனைத்து நாடுகளின் நலனுக்காக நடக்க வேண்டும் என்றும், அது “மனிதகுலத்தின் எல்லை” என்றும் கூறுகிறது.இன்றைய வணிகப் போட்டியும் இராணுவ மோதல்களும் அந்த உணர்வைக்கேள்விக்குள்ளாக்குகின்றன. 2026 ஜூலை நிலவரப்படி, பூமியைச் சுற்றும் 19,447 செயற்கைக்கோள்களில் 13,276 (68 சதவிகிதம்) அமெரிக்காவுடையவை; ரஷ்யா 1,658, சீனா 1,523. இந்த முன்னிலை பெரும்பாலும் ஸ்டார்லிங்க் எண்ணிக்கையால் வந்தது.மோதல் அபாயத்தைத் தவிர்க்க, 2024 டிசம்பர் முதல் 2025 மே வரையிலான ஆறு மாதங்களில்ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் 1,44,404 முறை பாதையை மாற்றின. 2025 டிசம்பர்–2026 மே காலத்தில் 2,07,152. கடந்த 12 மாதங்களில் மொத்தம் 3,55,000-க்கும் மேல், அதாவது ஒவ்வொரு செயற்கைக்கோளும் ஆண்டுக்கு 40க்கும்மேற்பட்ட முறை, வாரம்தோறும் பாதையை மாற்றுகிறது.

2025-ஆம் ஆண்டில் 670 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து எரிந்தன.எரியும் செயற்கைக்கோள்கள் அலுமினியஆக்சைடு துகள்களை விட்டுச்செல்கின்றன; இவை புவியின் வெகு அருகில் உள்ள இரண்டாவது வளி மண்டல அடுக்கில் ஓசோனை அழிக்கும்வேதிவினைகளைத் தூண்டுகின்றன.உண்மையான பாதிப்பு இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை.கட்டுப்பாடற்ற பெருக்கம் தொடர்ந்தால், விண்ணில் தொடர் மோதல்கள் (கெஸ்லர் விளைவு) நிகழும் அபாயமும் உண்டு.அப்படிநிகழ்ந்தால் எதிர்கால விண்வெளிப் பயணங்களும் செயற்கைக்கோள் சேவைகளும் கடினமாகும்.

கடல்களையும் காடுகளையும் லாப வெறிக்காகச் சுரண்டியதுபோல், விண்வெளியிலும் அதே தவறு தொடரும் ஆபத்து உள்ளது.லாபத்துக்காக விண்வெளியைக் குப்பையாக்குவது, சொந்த வீட்டின் கூரையைப் பெயர்த்து முற்றத்தை நிரப்புவதற்குச் சமம்.விண்வெளி எந்தத் தனிநபரின் சொத்தோ, பெருநிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பை உயர்த்தும் கருவியோ அல்ல; அது மனிதகுலத்தின் எதிர்காலக் கண்ணாடி.தொழில்நுட்பம் மனிதனை வாழவைக்க வேண்டுமே தவிர அழிவுக்கு வழிகோல அனுமதிக்கக்கூடாது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.