முந்தய பக்கம்

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு - வருமான வரித்துறை பதிலளிக்க நோட்டீஸ்

24 Apr 2026, 4:05 pm
எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு - வருமான வரித்துறை பதிலளிக்க நோட்டீஸ்
<p>அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சொத்து விவரங்கள் தொடர்பான வழக்கில் 4 வாரங்களில் பதிலளிக்க வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி போட்டியிட்டார். அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகவும், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தாக்கல் செய்த சொத்து விவரங்களை தற்போது தாக்கல் செய்துள்ள வேட்புமனுவுடன் ஒப்பிடும் போது அதிகளவில் உள்ளதாகவும் கோவை சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அமர்வு விசாரித்தது. அப்போது, எஸ்.பி.வேலுமணி சொத்து விவரங்களை மறைத்துள்ளார என 4 வாரங்களில் பதிலளிக்க வருமான வரித்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram