முந்தய பக்கம்

எஸ்.பி. வேலுமணி அமைச்சராக இருந்தபோது நடந்த 54 நியமனங்கள் சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம்

14 Jul 2026, 1:03 pm
எஸ்.பி. வேலுமணி அமைச்சராக இருந்தபோது நடந்த 54 நியமனங்கள் சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த பொழுது மேற்கொண்ட 54 இளநிலை உதவியாளர்கள் பணி நியமனங்களை சட்டவிரோதம் எனக் கூறி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு கோவை மாநகராட்சிக்கு 54 இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களை ஒரே நாளில் விளம்பரப்படுத்தி அந்த நாளிலேயே நேர்காணல் வைத்து ஆட்கள் சேர்க்கப்பட்டதாகவும் இதில் கடுமையான விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதாகவும் புகார்கள் எழுந்தது.

இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பணி நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. இதன் மேல்முறையீட்டு மனுவை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது.

விசாரணை முடிவில் 54 பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் சட்டவிரோதம் இருப்பதாகவும் விதிமுறைகள் மீறல் இருப்பதை கண்டுபிடித்திருப்பதாகவும் கூறி அவர்கள் அனைவரையும் உடனடியாக பணியிலிருந்து நீக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த பணியிடங்கள் பணம் பெற்றுக் கொண்டு நிரப்பப்பட்டதாக ஒரு புறம் புகார்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது

Share
FacebookXWhatsAppTelegram