தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

12 May 2026, 8:50 pm
தீக்கதிர் விரைவு செய்திகள்

மோடியை விமர்சித்ததற்காக சமாஜ்வாதி எம்.பி., மீது வழக்குகட்சியைச் சேர்ந்தவரான இவர், திங்க ளன்று தனது ஆதரவாளர்களுடன் மின் வெட்டு, ஸ்மார்ட் மீட்டர்கள் தொடர்பாக 11 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு வை மின்சாரத் துறையிடம் சமர்ப்பித்து, இது மக்கள் கோரிக்கை நிறைவேற்றப் படாவிட்டால் அரசு விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அவர் எச்சரித்தார். தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள வீடியோவில்,”தங்கம், எரிபொருள் நுகர்வு குறித்து பிரதமர் மோடி மக்களுக்கு சிக்கன வேண்டு கோளை விடுத்துள்ளார். ஆனால் மோடி வெளிநாட்டுப் பயணங்களில் அதிகம் கவனம் செலுத்துகிறார். நாட்டு மக்க ளுக்கு ஒரு உத்தரவு, மோடிக்கு ஒரு விலக்கா? இது “தேஷ்-விரோதி” (தேச விரோதி) செயல் ஆகும்” என குற்றம் சாட்டினார். உடனே உத்தரப்பிரதேச பாஜக அரசு லோதி பிரதமர் மோடியை தேசவிரோதி என்று விமர்சித்து விட்டார் ; ஸ்மார்ட் மீட்டர் பிரச்சனை தொடர்பாக அரசு அதி காரியை தாக்கி பேசிவிட்டார் ; மிரட்டல் விடுத்து விட்டார் என கூப்பாடு போட்டு மஹோபாவில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. இதற்கெல்லாம் அஞ்சமாட்டோம் என அஜேந்திர சிங் லோதி எம்.பி., பதிலடி தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு ரத்து கேரளத்தில் கொந்தளிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரைத் தொட ர்ந்து நீட் தேர்வு ரத்து செய் யப்பட்டுள்ளது. இதனால் கேரளத்தில் பரவலான அரசியல் கொந்தளிப்பையும் மாணவர்களின் ஆவேசத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிபிஎம் கேரள மாநிலக்குழு உறுப்பி னர் வி.சிவன்குட்டி கூறுகையில்,”நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மருத்துவக் கனவுகளுடன் இருக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ண யிக்கும் ஒரு தேர்வை ரத்து செய்தி ருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது. இந்த தேர்வை நடத்துவதற்குப் பொறுப்பான ஒன்றிய அரசு முகமை களின் ‘கடுமையான அலட்சியம் மற்றும் விழிப்புணர்வு இல்லாமையை’ அம்ப லப்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசும் தேசிய தேர்வு முகமையும் தேர்வு நடத் தும் முறையைத் தவறாகக் கையாண் டுள்ளது. தேசிய தேர்வு அமைப்பின் நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத் தன்மையைக் குலைத்துவிட்டது” என குற் றம் சாட்டினார்.

மக்களை சிக்கனமாக இருக்க சொல்லிவிட்டு தனி விமானத்தில் வெளிநாடு கிளம்பும் மோடி

மேற்கு ஆசிய போரால் மக்கள் எரிபொருள் முதல் அனைத்து விஷயங்களிலும் சிக்கனமாக இருக்க வேண்டும் என அறிவுரை கூறி விட்டு, தனி விமானத்தில் வெளிநாடு கிளம்புகிறார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி மே 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை 5 நாடுகளில் 6 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற் கொள்ள உள்ளார். தனது பயணத்தின் முதல் கட்டமாக வரும் 15ஆம் தேதி ஐக் கிய அரபு அமீரகம் செல்கிறார். அன்றைய தினம் ஐரோப்பா நாடான நெதர்லாந்து செல்கிறார். மே 17ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை சுவீடன் செல்லும் மோடி, மே 18 மற்றும் 19ஆம் தேதிகளில் நார்வே செல்கிறார். இறுதியாக மே 19ஆம், 20ஆம் தேதிகளில் இத்தாலி செல்லும் பிரதமர், அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி மற்றும் அதிபர் செர்ஜியோ மேட்டரெல்லாவை சந்திக்கிறார். பின்பு நாடு திரும்புகிறார்.

“பாஜக ஆட்சியில் மாணவர்களின் உழைப்பு வீணாகிறது”

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மக்க ளவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், “நீட் 2026 தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ஊழல் நிறைந்த பாஜக ஆட்சியில் 22 லட்சத் திற்கும் அதிகமான மாணவர்களின் கடின உழைப்பு, தியாகங்கள் மற்றும் கனவுகள் நசுக்கப்பட்டுள்ளன. பாஜக ஆட்சியில் மாணவர்களின் உழைப்பு வீணாகிறது. சில தந்தைமார்கள் கடன் வாங்கினார்கள், சில தாய்மார்கள் தங்கள் நகைகளை விற்றார் கள், லட்சக்கணக்கான குழந்தைகள் இரவு முழுவதும் விழித்திருந்து படித்தார் கள்; ஆனால் அதற்குப் பதிலாக அவர் களுக்குக் கிடைத்தது வினாத்தாள் கசிவு, அரசாங்கத்தின் அலட்சியம் மற்றும் கல்வி யில் திட்டமிடப்பட்ட ஊழல் மட்டுமே. இது வெறும் தோல்வி மட்டுமல்ல. இளைஞர் களின் எதிர்காலத்திற்கு எதிராக இழைக் கப்பட்ட ஒரு குற்றமாகும்” என அவர் குற் றம்சாட்டியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.