ஜனநாயகத்திற்கு மிக அவசியமான முன்நிபந்தனை இறையாண்மை ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக ஆப்பிரிக்க நாடுகளில் எழும் பிரச்சாரம்
15 Jul 2026, 10:35 pm

ஜனநாயகத்திற்கு மிக அவசியமான முன்நிபந்தனை இறையாண்மை ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக ஆப்பிரிக்க நாடுகளில் எழும் பிரச்சாரம்

வாகடூகு, ஜூலை 15 - ஜனநாயகத்திற்கு மிக அவசிய மான முன்நிபந்தனை இறை யாண்மைதான் என்ற புதிய சிந்த னை ஆப்பிரிக்காவின் சில நாடு களில் உருவெடுத்து வருகிறது. புர்கினா பாசோவின் இடைக்கால ஜனாதிபதி கேப்டன் இப்ராகிம் தரோர் 2026 துவக்கத்தில் “இறையா ண்மை இல்லாமல் ஜனநாயகம் இருக்க முடியாது” என்று கூறினார்.

இந்த கூற்றை அவர் ஜனநாயகத்தை யே முழுமையாக நிராகரித்துவிட் டார் என்று பல சர்வதேச ஊடகங்கள் செய்திகளை திரித்து வெளியிட்டன. மேற்குலக நாடுகளின் ஊடகங்கள் பலவும் இவரது கருத்தை, புர்கினா பாசோ, மாலி மற்றும் நைஜர் ஆகிய நாடுகளின் ராணுவ ஆட்சிகள் ஜனநா யகப் பாதையைக் கைவிட்டு, சர்வா திகாரத்தை நோக்கிச் செல்கின்றன என சித்தரித்தன.

அரசியல் மற்றும் பொருளாதார முடிவுகள் இன்னும் வெளிநாட்டுச் சக்திகளால் தீர்மானிக்கப்படும் நவ காலனித்துவ நாடுகளில், உண்மை யான ஜனநாயகம் இருக்க முடி யுமா? என்ற மிக அடிப்படையான கேள்வியையே அவர் எழுப்பியுள் ளார். ஆனால் இப்ராஹிம் கூறிய கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டது. தற்போது புர்கினா பாசோவில் மனித உரிமை மீறல்கள் நடப்ப தாகக் கூறி ஐரோப்பிய ஒன்றியம் கண்டனத் தீர்மானம் ஒன்றை நிறை வேற்றியது. இதன் பிறகு இந்த விவாதம் மேலும் தீவிரமடைந்துள் ளது.

இந்த தீர்மானம் தவறான புரித லின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்றும், தங்கள் நாட்டின் உள்விவ காரங்களில் தலையிடும் இத்தகைய செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியா தவை என்றும் புர்கினா பாசோ இத னை நிராகரித்துள்ளது.

சர்வதேச விவாதங்கள் பெரும் பாலும் தேர்தல், அரசியலமைப்பு மீதான ஆட்சி மற்றும் மனித உரிமை கள் ஆகியவற்றையே சுற்றியிருக் கும் வேளையில், “ஜனநாயகத்திற்கு மிக அவசியமான முன்நிபந்தனை இறையாண்மைதான்” என்ற புதிய சிந்தனை ஆப்பிரிக்காவின் சில நாடு களில் உருவெடுத்து வருகிறது. பல ஆப்பிரிக்க நாடுகள் தங்க ளுக்குப் பெயரளவில் சுதந்திரம் கிடைத்து பல ஆண்டுகள் ஆகியிரு ந்தாலும், அவை இன்னும் அரசியல் ரீதியாகக் கட்டுப்படுத்தப்பட்டே இருக்கின்றன.

ஆப்பிரிக்கா ஒரு முக்கிய இட த்தை எட்டியுள்ளது. நாம் தேசபக்தி மற்றும் இறையாண்மை இணையும் இடத்தில் இருக்கிறோம். நாம் இன்னும் ஜனநாயகக் கட்டத்தை எட்டவில்லை, ஏனென்றால் ஜனநாய கம் என்பது ஒரு இறையாண்மை யுள்ள நாட்டிற்குள்ளேயே செயல்பட முடியும். ஒரு நாடு சுதந்திரமாக இல்லாதபோது அங்கு ஜனநாய கம் இல்லை.

இறையாண்மை இல்லாதபோது ஜனநாயகம் இல்லை என பெனின் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிலிப் நுட்ஜெனோமே இது பற்றி கூறு கிறார். மேற்கத்திய நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளின் அரசியல் முடிவுகளில் தீர்க்கமான ஆதிக்கத்தை செலுத்தி வரும் வரை, ஜனநாயக அமைப்பு களால் அர்த்தமுள்ளதாகச் செயல்பட முடியாது. பல ஆப்பிரிக்க நாடுகளில் யார் ஆள வேண்டும் என்பதை மேற்கத் திய நாடுகளே தீர்மானிக்கின்றன.

அவர்கள் முறைகேடுகள், ஊழல் மற்றும் ஆதிக்கத்தின் மூலம் தேர்தல்களை மாற்றி அமைத்து, தங் களுக்குச் சாதகமான தலைவர்களை நம் மீது திணிக்கிறார்கள். இதுதான் யதார்த்தம் என்றால், ஜனநாயகம் என்று காட்டப்படுவது ஒருபோதும் மக்களின் ஆட்சியாக இருக்க முடியாது. ஆப்பிரிக்கா இப்போது இறையா ண்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய வரலாற்றுச் சூழலில் இருக்கிறது. ஆப்பிரிக்கா இன்று இறையாண்மையின் சந்திப்பில் நிற்கிறது.

மேற்கத்திய நாடுகள் நமக்குக் கற்றுக்கொடுக்கும் ஜன நாயகம் என்பது ஆட்டுவிப்பது, ஊழல் மற்றும் பணத்தின் மீது கட்ட மைக்கப்பட்ட ஒரு போலி ஜனநாய கம். நாம் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன், முதலில் நமது கண்டத்தில் இறையாண்மையுள்ள நாடுகளை உருவாக்க வேண்டும்.

பல ஆண்டுகளாக, மேற்கத்திய தாராளவாத ஜனநாயக அளவு கோல்கள் ஆப்பிரிக்காவின் வர லாற்று மற்றும் அரசியல் யதார்த்த ங்களைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டன.

பெரும்பாலும், அவை ஆப்பிரிக்க மக்களின் விருப்பத் திற்கு ஆதரவாக இருப்பதற்குப் பதி லாக, சர்வதேச ஒழுங்கை எதிர்க்கும் நாடுகளைத் தண்டிக்கும் ஒரு கரு வியாகவே பயன்படுத்தப்பட்டு வரு கின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.