கணிப்பை ஏமாற்றி 10 நாட்களுக்குப் பின் தொடங்கியது தென்மேற்கு பருவமழை கேரளத்தில் வெளுத்து வாங்கிய கனமழை
5 Jun 2026, 12:48 am

கணிப்பை ஏமாற்றி 10 நாட்களுக்குப் பின் தொடங்கியது தென்மேற்கு பருவமழை

கேரளத்தில் வெளுத்து வாங்கிய கனமழை

திருவனந்தபுரம் தென்மேற்கு பருவமழை என்பது இந்தியாவிற்கு மிக முக்கியமான, அதிக மழையைத் தரும் முதன்மை மழைக்காலமாகும்.

நாட்டின் ஒட்டுமொத்த வருடாந்திர மழைய ளவில் சுமார் 70% முதல் 80% வரை தென்மேற்கு பருவமழையின் மூலமே கிடைக்கிறது.

இந்நிலையில், இந்த ஆண்டுக் கான தென்மேற்கு பருவமழை கணிப்பை ஏமாற்றி 10 நாட்க ளுக்குப் பின் கேரளத்தில் தொடங்கி யுள்ளது.

மே 26இல் தென்மேற்கு பருவமழை வழக்கம் கேரளத்தில் இருந்து தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறி வித்திருந்தது. ஆனால் வானிலை கணிப்பு பொய்யானது.

அடுத் தக் கட்ட கணிப்பாக ஜூன் 1 என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆனால் லேசான கடற்கரை சாரலோடு ‘ரிவர்ஸ்’ சென்று போக்குக்காட்டியது.

ஒருவழியாக ஜூன் 2 அன்று வானிலை ஆய்வு மையம் மிக நீண்ட அறிக்கையை வெளியிட்டு, ஜூன் 4 அன்று கட்டாயம் கேர ளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என கூறியது.

அதன் படி, வியாழனன்று அதிகாலை முதல் கேரளத்தில் கனமழை துவங்கியுள்ள சூழலில், நாட்டில் தென்மேற்கு பருவமழை துவங்கி விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு பருவமழை துவங்கி விட்டது.

தென்மேற்கு, தென் கிழக்கு அரபிக்கடலின் பகுதிகள், மத்திய மேற்கு, மத்திய கிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகள், லட்சத்தீவுகள் முழுவதிலும், கேர ளம், மாஹே, கர்நாடகா, தமிழ் நாட்டின் சில பகுதிகள், குமரி கடற் பகுதியின் பகுதிகள், தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் தென் மேற்கு, மத்திய மேற்கு, மத்திய கிழக்கு, வடகிழக்கு வங்காள விரி குடாவின் சில பகுதிகளுக்கு தென் மேற்கு பருவமழை பரவியுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.