தென்மேற்கு பருவமழை ஜூன் 5-க்குள் தொடங்க வாய்ப்பு
31 May 2026, 8:42 pm

தென்மேற்கு பருவமழை ஜூன் 5-க்குள் தொடங்க வாய்ப்பு

சென்னை, மே 31 - தமிழகத்தின் சில பகுதிகளில் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்குள், அதாவது ஜூன் 5ஆம் தேதிக்குள், தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட முன்கூட்டியே தொடங்கியுள்ளது.

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் மே 16ஆம் தேதியே பருவமழை தொடங்கியது.

கேரளத்திலும் மே 26 ஆம் தேதி வாக்கில் பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பருவமழை முன்கூட்டியே தொடங்கியதற்கு பல காரணங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன.

சைபீரியா பகுதியில் வழக்கத்தை விடக் குறைந்த பனிப்பொழிவு காரணமாக நிலப்பகுதி வேகமாக வெப்பமடைந்தது.

இதனால் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகி பருவமழைக் காற்று இந்தியாவை நோக்கி முன்கூட்டியே ஈர்க்கப்பட்டுள்ளது.

மேலும் அந்தமான் கடல் பகுதியில் உருவான சாதகமான காற்றழுத்த தாழ்வு நிலையும் இதற்கு உந்துதலாக அமைந்துள்ளது.

எனினும் பருவமழை முன்கூட்டியே தொடங்கியது மகிழ்ச்சிக்குரிய செய்தியல்ல என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

பசிபிக் பெருங்கடலில் உருவாகும் எல் நினோ தாக்கத்தின் காரணமாக இந்த ஆண்டு மழைப்பொழிவு இயல்பை விட குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் வழக்கமான அளவில் 90 சதவீத மழைப்பொழிவு மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை இயல்பை விட சற்று குறைவாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.