கேரளம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தது தென்மேற்கு பருவமழை
1 Jun 2026, 9:24 pm

கேரளம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தது தென்மேற்கு பருவமழை

திருவனந்தபுரம் தென்மேற்கு பருவமழை என்பது இந்தியாவிற்கு மிக முக்கியமான, அதிக மழையைத் தரும் முதன்மை மழைக்காலமாகும். நாட்டின் ஒட்டுமொத்த வருடாந்திர மழை யளவில் சுமார் 70% முதல் 80% வரை தென்மேற்கு பருவமழை யின் மூலமே கிடைக்கிறது.

இந்த பருவமழை பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும்.

இந்நிலையில், இந்த ஆண்டுக் கான தென்மேற்கு பருவமழை ஜூன் 1 அன்று கேரள கடற்கரை யை கடந்து, இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது.

கேரளம், தமிழ் நாடு, கர்நாடகா வழியாக முன் னேறி, ஜூலை நடுப்பகுதிக்குள் ஒட்டுமொத்த இந்தியாவையும் தென்மேற்கு பருவமழை பலத்த மழையுடன் ஆக்கிரமிக்கும்.

தென்மேற்கு பருவமழையும், நகர்வும் ஜூன் 5-க்குள் : தென்னக தீப கற்பம் (தமிழ்நாடு, கர்நாடகா, ஆந் திரா, தெலுங்கானா, கோவா), வடகிழக்கு ஜூன் 10 அல்லது ஜூன் 15-க்குள் : மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஒடிசா, மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் பரவத் தொடங்கு கிறது.

ஜூன் 20 அல்லது ஜூன் 25-க்குள் : மத்தியப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், குஜராத், கிழக்கு உத் தரப்பிரதேசம் ஆகியவற்றின் பெரும் பகுதிகளுக்கு முன்னேறு கிறது.

ஜூன் மாத பிற்பகுதியிலும் ஜூலை மாத தொடக்கத்திலும் தென் மேற்கு பருவமழை தில்லி, ஹரி யானா, பஞ்சாப், ராஜஸ்தான், வட மேற்கு இந்தியாவின் பிற பகுதி களை பலத்த கனமழையுடன் மிரட் டும் என்பது குறிப்பிடத்தக்கது.