தலைகாட்டி மீண்டும் பின்னோக்கி நகர்ந்த தென்மேற்கு பருவமழை?
2 Jun 2026, 8:29 pm

தலைகாட்டி மீண்டும் பின்னோக்கி நகர்ந்த தென்மேற்கு பருவமழை?

திருவனந்தபுரம் இந்த ஆண்டிற்கான தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே, அதாவது ஜூன் 1 அன்று கேரள கடற்கரையில் இருந்து தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் அறிவித்து இருந்தது.

இந்த அறிவிப்பிற்கு ஏற்றார் போல, திங்களன்று கேர ளத்தின் ஒரு சில இடங்கள், தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.

இதனால் கேரளத்தில் காலடி வைத்து தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டது என அறிவிப்புகள் வெளியானது. ஆனால் கேரள கடற்கரையில் தலைகாட்டிய வேகத்தில் தென்மேற்கு பருவமழைக்கான சூழல் மீண்டும் பின்னோக்கி நகர்ந்துள்ளது.

கணிப்பில் சொதப்பலா? பருவநிலை மாற்றமா? இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,“தென்மேற்கு பருவமழை வரும் ஜூன் 4ஆம் தேதி கேரளத்திற்குள் முன் னேறும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று கூறி யுள்ளது.

இதற்குமுன் இந்திய வானிலை ஆய்வு மையம் மே 26ஆம் தேதியே கேர ளத்திற்குள் தென்மேற்கு பருவமழை தொ டங்கும் என அறிவித்திருந்தது.

அதன்பின் மே 26ஆம் தேதியிலிருந்து நான்கு நாட்களுக் குள் கேரளத்தில் தென்மேற்கு பருவமழை வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதை அறிக்கை வெளியிட்டது. கடைசி யாக ஜூன் 1 அன்று கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என கூறியிருந்தது. ஆனால் ஜூன் 1 அன்று கேரளம் உள்ளிட்ட சில பகுதிகளில் மழை லேசாக ஆட்டம் காட்டிவிட்டுச் சென்றது.

தொடர்ச்சியான மழை எதுவும் இல்லை. அதாவது பருவமழை போன்று தெரியவில்லை.

இதனால் தான் கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க இன்னும் 2 நாட்கள் ஆகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் குழப்பியுள்ளது.

21 ஆண்டுகளில்... கடந்த 21 ஆண்டுகளில் (2005-2025) கேர ளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி குறித்த இந்திய வானிலை ஆய்வு மையத் தின் அறிவிப்பு 2015ஆம் ஆண்டைத் தவிர மற்ற அனைத்து ஆண்டுகளில் துல்லியமாக இருந்தன.

ஆனால் இந்த ஆண்டு கணிப்பில் சொதப்பல் ஏற்பட்டுள்ளது.

வறட்சிக்கு வாய்ப்பா? கடந்த ஆண்டு மே 24ஆம் தேதியே கேர ளத்தில் பருவமழை தொடங்கியது. இது 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக முன்னதாக வந்த பருவமழையாகும். பொதுவாக பருவ மழை தொடங்கும் தேதிக்கும், பதிவாகும் ஒட்டுமொத்த மழையின் அளவுக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்றாலும், இந்த ஆண்டு மழையின் அளவு கவலைக்குரிய ஒன்றாக மாறி யுள்ளது.

ஏனெனில், இந்த ஆண்டு ‘இயல்பை விடக் குறைவான’ மழையே பெய்யும் என்று இந்திய வானிலை மற்றும் பிற வானிலை அமைப்புகள் எச்சரித்துள்ளன. இதனால் வறட்சிக்கு சாதகமான சூழல் ஏற்படுமா என்ற அச்சம் கிளம்பியுள்ளது.