தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆக.19, 20 சென்னையில் தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாடு?

14 Aug 2026, 9:30 pm
ஆக.19, 20 சென்னையில் தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாடு?

ஆக.19, 20 சென்னையில் தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாடு?

சென்னை, ஆக.14 -தென் மாநிலங்களின் முக்கியப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கும்தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாடு, சென்னை கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில்ஆகஸ்ட் 19, 20ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளம், தெலுங்கானா ஆகிய 5மாநிலங்களின் முதலமைச்சர்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசப் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில் முதலமைச்சர் விஜய், ஆந்திரப் பிரதேசமுதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார், கேரள முதலமைச்சர் சதீசன், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் இதில் கலந்து கொள்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நதிநீர் பங்கீடு தொடர்பான விவகாரங்கள், மாநில எல்லைப் பகுதிகளில் ஏற்படும் பிரச்சனைகள், சட்டம்-ஒழுங்குதொடர்பான சவால்கள் உள்ளிட்டவை குறித்து இச்சந்திப்பில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால் தென் மாநிலங்களின் நாடாளுமன்றப்பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவும் நிலையில், இம்மாநாட்டில் தொகுதி மறுவரையறை விவகாரமும் கூடுதல் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையைத் தற்போதைய 543 என்ற அளவிலேயே தொடர வேண்டும் எனவலியுறுத்தி தமிழக சட்டப்பேரவை ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், நீண்ட இடைவெளிக்குப்பிறகு தமிழ்நாட்டில் நடைபெறும் இந்த தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாடு, தென்மாநிலங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் ஒன்றிய-மாநில உறவுகள் அம்சங்களிலும் முக்கியத்துவம்பெற்றுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.