தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

6 Oct 2026, 9:03 pm
திருச்சி விரைவு செய்திகள்

வெற்றிப் பயணப் பேருந்தில் பயணச்சீட்டு வழங்கிய அமைச்சர்

சிவகாசி, அக்.6-சிவகாசியில் வெற்றிப் பயணப் பேருந்தில் பயணம் செய்த தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ச.கீர்த்தனா, பயணிகளுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டுகளை வழங்கினார்.அப்போது அவர் கூறியதாவது:பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான சேவைகள் எளிதாகவும், தடையின்றியும் கிடைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் முக்கிய நோக்கமாகும். இதன் அடிப்படையில், மகளிர் நலன் சார்ந்த முக்கியத் திட்டமான ‘வெற்றிப் பயணம்’ தொடங்கப்பட் டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மகளிர், திருநங்கைகள்மற்றும் மாற்றுத் திறனாளிகளின் பயணத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.சிவகாசி கிளையிலிருந்து 39 கட்டணமில்லா பேருந்துகள் மூலம் 244 நடைகள் இயக்கப்படுகின்றன. வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம், அரசு சேவைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயனாளிகளுக்கு இத்திட்டம் பயனுள்ளதாக உள்ளது என்றார்.நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தி, சிவகாசி சார் ஆட்சியர் முகமது இர்பான், மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பசும்பொன்னில் ஆட்சியர் ஆய்வு

இராமநாதபுரம், அக்.6-பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119வது பிறந்தநாள் மற்றும் 64-வது குருபூஜை விழா வரும் 30 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, பசும்பொன் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட ஆட்சியர் மா.சிவகுரு பிரபாகரன் செவ்வாய்க் கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பசும்பொன் வந்து அஞ்சலி செலுத்த உள்ளனர். இதையொட்டி, பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வரும் புதிய சாலைப் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.தொடர்ந்து, தென்மண்டல காவல்துறைத் தலைவர் விஜயேந்திர பிதாரி, காவல்துறைத் துணைத் தலைவர் மணிவண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், பரமக்குடி சார் ஆட்சியர் ச.வினோதினி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குருதிவேல் மாறன் உள்ளிட் டோருடன் பசும்பொன் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர், மல்லாங்கிணறு பகுதிகளில் நாளை மின் தடை

விருதுநகர், அக்.6-விருதுநகர் உள்ளரங்கு துணை மின்நிலையம் மற்றும் மல்லாங்கிணறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அக்.8 இல் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள் ளது.காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே, அங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான இராமமூர்த்தி சாலை, அம்பேத்கர்தெரு, கஸ்தூரிபாய் சாலை, ரோசல் பட்டி சாலை, கம்மாபட்டி, சத்தியமூர்த்தி சாலை, பேராலி சாலை, பாண்டியன் நகர், படேல் சாலை, ஏ.ஏ.சாலை, பேராசிரியர் காலனி, இரயில்வே பீடர் சாலை, கால்நடை மருத்துவமனை சாலை, எல்.பி.எஸ்.நகர், மெயின் பஜார் வடக்கு, காசுக்கடை பஜார், காந்திபுரம் தெரு, மணி நகரம், லிங்க்ரோடு, அழகர்சாமி தெரு ஆகிய பகுதிகளில் மின் சாரம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல் மல்லாங்கிணறு துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான வலையங்குளம், நந்திகுண்டு, மேலதுலுக்கன்குளம், அழகியநல்லூர், கெப்பிலிங்கம்பட்டி, வில்லிபத்திரி, நாகம்பட்டி, வலுக்கலொட்டி, வரலொட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் காலை 9மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைசெய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாம்பு கடித்து 3 வயது சிறுமி பலி

திருச்சுழி, அக்.6-விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே சிறுவனூர் கிராமத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி கட்டுவிரியன் பாம்பு கடித்ததில் உயிரிழந்தார்.சிறுவனூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி மகாதேவன் (40). இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், மகாதேவன் குடும்பத்தினர் திங்களன்று இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டுக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு, தூங்கிக் கொண்டிருந்த சிறுமி தனுஸ்ரீயை கடித்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் சிறுமி மயக்கமடைந்தார்.இதையடுத்து, பெற்றோர் சிறுமியை அ.முக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருப்புவனம் அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைக்கப்பட்டார்.ஆனால், அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அ.முக்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலாடி அருகே வெறி நாய் கடித்து பள்ளி மாணவர் படுகாயம்

இராமநாதபுரம், அக்.6-இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள எம்.சவேரியார் சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த இனிக்கோ, அவரது மனைவி டயானா ஆகியோரின் மகன் ஜார்டன் ( 5) ஆவார். தாயார் டயானா சவேரியார் சமுத்திரம் கிராமத்தில் உள்ள பள்ளியில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். திங்கட்கிழமை காலை டயானா பள்ளியில் சமையல் வேலை பார்த்து கொண்டிருந்தார். அங்கு விளையாடி கொண்டிருந்த நாய் கடித்ததில் ஜார்டன் படுகாயம் அடைந் தார். இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துமனைக்கு கொண்டுச் சென்றனர்.

அரசு மருத்துவக் கல்லூரி அருகே பாரபட்சமாக ஆக்கிரமிப்பு அகற்றம்

விருதுநகர், அக்.6-விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே நீண்டகாலமாக இருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர்அகற்றும் பணியில் ஈடுபட்ட நிலையில், பாரபட்சமாக நடவடிக்கை மேற்கொண்டதாக சாலையோர வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதன் அருகே ஏராளமான தனியார் கடைகள் சாலையோரத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்ததால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையிடம் பல்வேறு தரப்பினர் புகார் அளித்தனர்.

இந்நிலையில், மல்லாங் கிணறு சாலை அகலப்படுத் தும் பணி நடைபெற்று வருவதையடுத்து, நெடுஞ்சாலைத்துறையினர் மண் அள்ளும் இயந்திரம், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர். பாதுகாப்புப் பணிக்காக ஏராளமான போலீசாரும் குவிக்கப் பட்டனர். இதனால் சில வியாபாரிகள் தங்களது கடைகளை தாங்களாகவே அப்புறப்படுத்தினர்.

ஆனால், பெரிய அளவில் ஆக்கிரமித்து செயல்பட்டு வந்த பழக்கடையை அகற்ற அதிகாரிகள் சென்றபோது, கடை உரிமையாளர் நீதிமன் றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, 10 நாட்கள் அவகாசம் கேட்ட நிலையில், அந்தக் கடையை அகற்றாமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால், கம்மங்கூழ், கரும்புச்சாறு உள்ளிட்ட சிறிய கடைகள் வைத்து வாழ்வாதா

ரம் நடத்தி வந்த சாலையோர வியாபாரிகள் அதிருப்தியடைந்தனர். பெரிய ஆக்கிரமிப்பை அகற்றாமல், சிறிய சாலையோரக் கடைகளை மட்டும் அகற்றுவது பாரபட்சமான நடவடிக்கை என அவர் கள் குற்றம்சாட்டினர்.

மேலும், மருத்துவமனையின் மேற்கு நுழைவுவாயில் அருகே உள்ள பழக்கடைக்கு நகராட்சியால் அனுமதி வழங் கப்படவில்லை என்றும், அந்தக் கடை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை என்றும்

கூறப்படுகிறது.எனவே, ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மனைவி உள்பட 3 பெண்களை கொலை செய்தவருக்கு 3 ஆயுள் தண்டனை

சிவகங்கை, அக்.6-மானாமதுரை அருகே கடந்த 2015-ஆம் ஆண்டு மனைவி உள்பட 3 பெண் களை வெட்டிக் கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 3 ஆயுள் தண்டனையும், ரூ.75 ஆயிரம் அபராதமும் விதித்து சிவகங்கை மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப் பளித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. கூலித் தொழிலாளியான இவரது மனைவி ராஜேஸ்வரி (22). இவர்களுக்கு 4 மாத ஆண் குழந்தை இருந்தது.

கடந்த 2015 ஆம் ஆண்டு கணவன்–மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, ராஜேஸ் வரி தனது குழந்தையுடன் வேலூர் ஒத்தவீடு பகுதியில் உள்ள தாய் தனபாக்கியம்வீட்டுக்குச் சென்றார்.இந்நிலையில், 2015 ஜனவரி 6 ஆம் தேதி இரவு பாண்டித்துரை மாமியார் வீட்டுக்குச் சென்று குழந்தையை தன்னிடம் தருமாறு மனைவியிடம் கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த பாண்டித்துரை அரிவாளால் மனைவி ராஜேஸ்வரியை வெட்டினார். இதைத் தடுக்க வந்த மாமியார் தனபாக்கியம் (45), உறவினர்ஆறுமுகத்தம்மாள் (65) ஆகியோரையும் வெட்டியுள் ளார். இதில் பலத்த காயமடைந்த 3 பேரும் சம்பவ இடத் திலேயே உயிரிழந்தனர்.இதுகுறித்து மானாமதுரை சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டித்துரையை கைது செய்தனர். பின்னர் சிவகங்கை மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது.வழக்கை விசாரித்த நீதிபதி ராமலிங்கம், பாண்டித் துரை மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, ஒவ்வொரு கொலைக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதன் படி, பாண்டித்துரைக்கு மொத்தம் 3 ஆயுள் தண்டனையும், ரூ.75 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

குலதெய்வ வழிபாட்டு உரிமைக்கு இடையூறு : ஆட்சியர், எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு

மதுரை, அக்.6-இராமநாதபுரம் முத்துவிஜயபுரத்தைச் சேர்ந்த இருளாண்டி தாக்கல் செய்த மனுவில், நகரத்தார்குறிச்சி கிராமத்தில் பட்டியலின மக்களின் பொதுச்சாலை பயன்பாடு மற்றும் குலதெய்வ வழிபாட்டு உரிமைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் குறிப்பிட்ட ஒரு குடும்பத்தினர் செயல்பட்டு வருவதாகவும், இதுதொடர்பாக அளிக் கப்பட்ட புகார் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப் பட்டிருந்தது.

மேலும், பட்டியலின மக்களின் பொதுச்சாலை பயன்பாடு மற்றும் குலதெய்வ வழிபாட்டு உரிமைகளை நிரந்தரமாகப் பாதுகாக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண் டும் எனவும் மனுவில் தெரிவிக் கப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதிகள் வேல் முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

இராமநாதபுரத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

இராமநாதபுரம், அக்.6-இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலும் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தெரிவு செய்து கொள்ளலாம்.

அதேபோல இம்முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலைநாடுநர்கள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்துகொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணிநியமனம் பெறும் வாய்ப்பினை பெறலாம்.

இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்கள் தங்களின் சுய விபரங்களடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் 9.10.2026 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத் திற்கு நேரில் வந்து இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறும், இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதினால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது எனவும் அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படுமெனவும், மேலும் தனியார் துறைநிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாக தமிழக அரசால் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் Tamil Nadu Private Job Portal” (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது.

இவ்விணையதளத்தில் பதிவு செய்து தனியார் துறை நிறுவனங்களும் வேலைதேடும் இளைஞர்களும் பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 04567 230160 / 8220809422 என்ற எண்களில் தொடர்புகொண்டுபயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.