தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

29 Oct 2026, 10:30 pm
திருச்சி விரைவு செய்திகள்

மோனிகா ரானா தென்காசி மாவட்ட புதிய ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதலூரில் வீடு புகுந்து தாக்குதல் : தந்தையும் பலி

தூத்துக்குடி,அக்.29-தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே முதலூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (43). இவரது 15 வயதுமகளுக்கும், சாத்தான்குளம் ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பரோட்டா மாஸ்டர் ஞானபிரகாஷ் என்பவருக்கும் இடையேஇருந்த பழக்கம் தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி இரவு முத்துக்கிருஷ்ணனின் வீட்டிற்குச் சென்ற ஞானபிரகாஷ் மீண்டும் தகராறில்ஈடுபட்டுள்ளார்.

பின்னர் அரிவாளால் முத்துக்கிருஷ்ணன், அவரது மனைவி மேரி விஜிலா (39) மற்றும் அவர்களது 12 வயதுமகன் ஆகியோரை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில்பலத்த காயமடைந்த மேரி விஜிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தலையில் பலத்த காயமடைந்து உயிருக்குப்போராடிக் கொண்டிருந்த சிறுமியின் தந்தை, தீவிரசிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றித் தந்தையும் தற்போது உயிரிழந்துள்ளார். ஞானபிரகாசை சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

கஞ்சா விற்ற ரவுடிகள் உட்பட 3 பேர் கைது

தூத்துக்குடி,அக்.29-தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மொட்ட கோபுரம் பகுதியில் சட்டவிரோதமாகக்கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.அப்பகுதியில் சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 நபர்களைத் தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன்தலைமையிலான போலீசார் மடக்கிப் பிடித்தனர்.விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் மகன் பிரகாஷ் (24), திருநெல்வேலி சேரன்மகாதேவியை சேர்ந்த மாயாண்டி மகன்மாயகணபதி (24) மற்றும் தூத்துக்குடி குளத்தூரைச் சேர்ந்த சந்தனசேகர் மகன் முகிலரசன் (19) என்பது தெரியவந்தது.இது தொடர்பாகத் தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர்வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தார். மேலும், அவர்களிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 5 கிலோ 750 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்துதொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில்பிரகாஷ் மற்றும் மாயகணபதி ஆகிய இருவரும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்செந்தூரில் தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயில் மோதி பலி

தூத்துக்குடி,அக்.29- திருச்செந்தூரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றவர் ரயில் மோதி உயிரிழந்தார்.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியபட்டணம், பிரசாத் நகரைச் சேர்ந்தவர் கந்தபிச்சை மகன்வேல்குமார் (56). இவர் பிரசாத் நகர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளப் பகுதியைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வேல்குமார்மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த திருச்செந்தூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேம்பாலத்தில் மணல் குவியலில் பைக் மோதி ஒருவர் பலி

தூத்துக்குடி,அக்.29- விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியைச் சேர்ந்தவர் துரைசாமி பாண்டியன் மகன் சரவணன் (40). இவர் பந்தல்குடியில் இருந்து மேலக்கரந்தை நோக்கித் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

மேலக்கரந்தை பகுதியில் புதிதாக மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால், போக்குவரத்திற்காகத் தற்காலிகச் சாலைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த சரவணன், சாலைப் பிரிவில் செல்லாமல் நேராகப் பாலம் கட்டும் பணிக்காகக் கொட்டப்பட்டிருந்த மணல் குவியலின் மீது அதிவேகமாக மோதியதாகக் கூறப்படுகிறது.இதில் சரவணனுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து மாசார்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலைக்கரைப்பட்டியில் நோயால் இறந்த ஆடுகள் ஓட்டல்களுக்கு விற்பனை250 கிலோ இறைச்சி அழிப்பு

திருநெல்வேலி,அக்.29-

மூலைக்கரைப்பட்டியில் நோய்வாய்ப்பட்டு இறந்தஆடுகளை ஓட்டல்களுக்கு வியாபாரி விற்பனை செய்தது தெரியவந்தது. சுமார் 250 கிலோ இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி மெயின் பஜாரில் உள்ள ஒருஇறைச்சிக்கடையில் நோய்வாய்ப்பட்டு இறந்து போன ஆட்டு இறைச்சிகளை பதப்படுத்தி விற்பனை செய்வதாக நெல்லை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஜெகநாத் தலைமையிலான அதிகாரிகள் அந்த இறைச்சிக்கடைக்கு சென்றுஅதிரடி சோதனை மேற்கொண்டனர்.அந்த கடையின் வியாபாரியும், உரிமையாளருமான மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த வானமாமலை (வயது 50) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து அவரது வீட்டிற்கு அதிகாரிகள் சென்றனர். வீட்டிலும், அங்குள்ள குடோனிலும் சோதனை மேற்கொண்டனர்.குடோ

னில் இருந்த 2 பெரிய பிரீசர்பாக்சில் சோதனையிட்ட போது அதில் நோய்வாய்ப்பட்டு, வயதாகி இறந்துபோன 20 ஆடுகள் தோல் உரிந்து முழுதாக உள்ளே வைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த ஆடுகளின் இறைச்சிகளை ஆய்வு செய்த போது அவை அனைத்தும் அழுகி கெட்டுப்போய்இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இறைச்சிகள் சுமார் 10 நாட்களுக்கு மேலாக பிரீசர் பாக்சில்பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.ஓட்டல்களுக்கு விற்பனைஇவ்வாறு ஆட்டு இறைச்சிகள் தினமும் அவரது கடையிலும், நெல்லை உள்பட பிற பகுதிகளுக்கு குறைந்த விலைக்கு ஓட்டல்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவது தெரியவந்தது.

பின்னர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த பிரீசர் பாக்சுகளில் வைக்கப்பட்டிருந்த சுமார்250 கிலோ ஆட்டு இறைச்சிகளை பறிமுதல் செய்து, பெரிய குழி தோண்டி கிருமி நாசினி மருந்து தெளித்து அழித்தனர்.இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீசாரும் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

சாலை அமைக்காததைக் கண்டித்து மேலப்பாளையத்தில் கடையடைப்பு போராட்டம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு

திருநெல்வேலி,அக்.29-நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ரிலையன்ஸ் பல்க் முதல் சந்தை வுண்டான வரை சாலைஅமைக்காமல் மெத்தனப்போக்கோடு செயல்படும் தமிழக அரசு மற்றும் நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து விரைவில் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்துக்கட்சி கூட்டம் அறிவித்துள்ளது.

நெல்லை மாநகரம் மேலப்பாளையத்தில் அனைத்து கட்சி கூட்டம் புதன்கிழமையன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகுதிச்செயலாளர் எஸ்.எம். சாகுல் ஹமீது தலைமையில் நடைபெற்றது. தமுமுகமாவட்டச் செயலாளர் மைதீன் பாதுஷா,மனிதநேய மக்கள் கட்சி தெற்கு பகுதி தலைவர் முகமது யூசுப் சுல்தான்,அதிமுக பகுதி செயலாளர் ஹயாத், எஸ்டிபிஐ கட்சி சார்பாக ஷேக்தாவூத், விடுதலை சிறுத்தைகள்கட்சி சார்பாக மாநில துணைச் செயலாளர் நடராஜன், இரா.முருகன், சிபிஐநகரச் செயலாளர் சேக் மதார், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் பி.என்.இசக்கிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மீனவர்கள் 5 ஆவது நாளாகக் கடலுக்குச் செல்லவில்லை மீன்பிடித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

தூத்துக்குடி,அக்.29- விசைப்படகுச் சங்கங்களுக்கு இடையே ஏற்பட்ட உள்ளூர் விவகாரம் காரணமாகத் தூத்துக்குடியில் மீனவர்கள் 5 ஆவது நாளாகக் கடலுக்குச் செல்லவில்லை.தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து தினசரி சுழற்சி முறையில் விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

வங்கக்கடலில் உருவான புயல் காரணமாகக் கடலில் மணிக்கு 55 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், கடந்த 25-ஆம் தேதிமுதல் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த 25-ஆம் தேதி முதல் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

தற்போது புயலின் தாக்கம் மற்றும் காற்றின் வேகம் குறைந்ததைத் தொடர்ந்து,அக்டோபர் 29 முதல் மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்கச் செல்லலாம் என மீன்வளத்துறை நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது.

இருப்பினும், தூத்துக்குடி மீன்பிடி துறைமுக விசைப்படகு உரிமையாளர்கள் நலச்சங்கம் மற்றும் விசைப்படகு தொழி

லாளர்கள் நலச்சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பில் இருந்து சில சங்கங்கள் வெளியேறுவதாக அறிவித்ததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்தச் சங்கப் பிரச்சனை காரணமாக அக்டோபர் 29 அன்று மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் புறக்கணித்துள்ளனர்.இதன் காரணமாகத் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப்படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.தொடர் வேலைநிறுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான மீன்பிடித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

புயலால் ரத்து செய்யப்பட்ட நரசப்பூர் - தூத்துக்குடி சிறப்பு ரயில் மீண்டும் இயக்க ஏற்பாடு

தூத்துக்குடி,அக்.29- ஆந்திரப் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்ட நரசப்பூர் - தூத்துக்குடி சிறப்புரயில் தூத்துக்குடியில் இருந்து வழக்கம்போல் சேவையைத் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஆந்திராவில் வீசிய ‘அர்னாப்’ புயல் காரணமாக நரசப்பூர் - தூத்துக்குடி சிறப்புரயில் (வண்டி எண்: 06020) ரத்து செய்யப்பட்டது. அந்த ரயிலின் காலியாக உள்ள பெட்டிகளைத் தூத்துக்குடிக்குக் கொண்டு வரத் தெற்கு ரயில்வே நடவடிக்கைஎடுத்துள்ளது.

இது தொடர்பாகத் தெற்கு ரயில்வே முதன்மைப் போக்குவரத்து மேலாளர் அலுவலகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், “ரத்து செய்யப்பட்ட நரசப்பூர் - தூத்துக்குடி சிறப்பு ரயிலின் (06020) காலியாக உள்ள ரயில் பெட்டிகள்,கூடூர் சந்திப்பில் பெறப்பட்டு தூத்துக்குடிக்குக் கொண்டு வரப்படுகிறது.இந்தக் காலி ரயில் பெட்டிகள் திருவொற்றியூர், சென்னை எழும்பூர், விழுப்புரம், திருச்சி, மதுரை வழியாகச் பிரதான தண்டுப்பாதை வழியே தூத்துக்குடி வந்தடையும். இந்தரயில் இயக்கத்திற்கு உரிய முன்னுரிமை அளித்து, தேவையான பணிக்குழுவினரை மாற்றி அமைத்து விரைவாகத் தூத்துக்குடிக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடி வந்தடைந்ததும், அங்குப்பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அக்டோபர் 29-ஆம் தேதி முதல் தூத்துக்குடியில் இருந்து மீண்டும் வழக்கமான சேவையைத் தொடங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்” என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் மக்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

தென்காசி, அக்.29-மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் வகையில் தங்கள் குடியிருப்புகள் மற்றும் சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், அறிவுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், , வீடுகளில் உள்ள குடிநீர்த் தொட்டிகள் மற்றும் தண்ணீர் சேமிக்கும்பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும். வாரத்திற்கு ஒருமுறையாவது தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை காலி செய்து,நன்கு சுத்தம் செய்ய வேண்டும். குடியிருப்புப் பகுதிகளில் தேங்காய் சிரட்டைகள்,பழைய டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட மழைநீர் தேங்குவதற்கு வாய்ப்புள்ள தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும் எனத்தெரிவித்துள்ளார்.

அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்களுக்குப் பின்புறம் வலி, தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால், அது டெங்கு காய்ச்சலின் அறிகுறியாக இருக்கலாம். எனவே, இத்தகைய அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் அல்லது அரசு மருத்துவமனையை அணுகி மருத்துவரின் ஆலோசனையுடன் சிகிச்சை பெற வேண்டும்.டெங்கு காய்ச்சலைத் தடுக்க சுற்றுப்புறத் தூய்மையைப் பராமரிப்பதுடன், பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.