தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

12 Jul 2026, 11:48 pm
திருச்சி விரைவு செய்திகள்

திருவில்லிபுத்தூரில் பசுமை வார விழா

திருவில்லிபுத்தூர், ஜூலை 12- திருவில்லிபுத்தூர் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள நக ராட்சி பூங்காவில், ஹார்ட்புல்னஸ் அமைப்பு மற்றும் நக ராட்சி இணைந்து பசுமை வார விழாவை கொண்டாடின. விழாவுக்கு ஹார்ட்புல்னஸ் அமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் ஹரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நக ராட்சி ஆணையாளர் குமார் மரக்கன்றுகளை நட்டு விழா வை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் போது 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. அவற்றை ஹார்ட்புல்னஸ் அமைப்பு இலவசமாக வழங்கியது. விழாவில் சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வா ளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மற்றும் நகராட்சி அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

வேலை செய்த வீட்டில் பெண் உயிரிழப்பு; போலீசார் விசாரணை

இராமநாதபுரம், ஜூலை 12- இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே வேலை செய்து வந்த வீட்டில் பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். தொண்டி அண்ணாநகரைச் சேர்ந்த விஜி (38), குடும்பப் பிரச்சனை காரணமாக சனிக்கிழமை இரவு தான் வேலை செய்து வந்த வீட்டுக்குச் சென்று, ஒரு நாள் தங்க அனுமதி கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் அறைக்குள் சென்ற நிலையில், சிறிது நேரத்தில் உயிரி ழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்த தொண்டி போலீசார் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருவாடானை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், உயிரிழப்புக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். விசாரணை முடிவுகளுக்குப் பிறகே உயிரிழப்புக் கான காரணம் உறுதி செய்யப்படும் என போலீசார் தெரி வித்துள்ளனர்.

விருதுநகரில் வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை திருட்டு

விருதுநகர், ஜூலை 12- விருதுநகரில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். விருதுநகரில் உள்ளது பெத்தனாட்சி நகர். இங்குள்ள மல்லிகை தெருவைச் சேர்ந்தவர் ராஜேஸ்(42). நிலம் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை 10 அன்று இரவு குடும்பத்துடன் நெல்லை மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள குல தெய்வம் கோவிலுக்கு சென்றுள்ளனர். மறுநாள் காலை வீட்டிற்கு வந்த பால்காரர் வீடு திறந்து கிடப்பதாக போன் செய்துள் ளார். இதையடுத்து, அங்கு விரைந்துவந்த ராஜேஸ் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, பீரோ உடைக் கப்பட்டு அதில் இருந்து 4 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. எனவே, இதுகுறித்து ராஜேஸ் விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வரு கின்றனர்.

பள்ளி மாணவர்களின் இருசக்கர வாகன பயன்பாடு அதிகரிப்பு

கண்காணிப்பை தீவிரப்படுத்த கோரிக்கை இராமநாதபுரம், ஜூலை 12- இராமநாதபுரம் மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு வருவது அதிகரித்து வருவதாகக் கூறி, காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓட்டுநர் உரிமம் பெறாத சிறுவர்கள் இருசக்கர வாக னங்களை இயக்குவது சட்டவிரோதமானது என்றும், பள்ளிக் கல்வித்துறை தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும் இந்த நடைமுறை தொடர்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 18 வயதுக்குக் குறைவானவர்கள் வாகனம் ஓட்டுவ தால், அவர்களின் உயிருக்கும், சாலையில் செல்லும் பிறரின் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே, பள்ளி வளாகங்கள் மற்றும் முக்கிய சாலை களில் காவல்துறை தீவிர கண்காணிப்பு மேற்கொள்வது டன், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு சாலைப் பாது காப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

ஜூலை 17-ல் சிவகங்கையில் வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கை, ஜூலை 12- சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் ஜூலை 17ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். காலை 10.30 மணிக்கு நடைபெறும் இந்த முகாமில் தனி யார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளன. மாவட்டத்தைச் சேர்ந்த வேலை தேடுபவர்கள் இதில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம். மேலும், இலவச திறன் பயிற்சி, போட்டித் தேர்வு களுக்கான இலவச பயிற்சி வகுப்பு சேர்க்கை மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை தொடர்பான விண்ணப்பங்களும் வழங்கப்பட உள்ளன. 10-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ வரை படித்த இளைஞர்கள் கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் முகாமில் பங்கேற்கலாம். இந்த முகா மில் வேலை கிடைத்தாலும், வேலைவாய்ப்பு பதிவின் மூப்பு ரத்து செய்யப்படாது என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் ரூ.15 கோடி மதிப்புள்ள போதைபொருள் பறிமுதல்; 4 பேர் கைது

சிவகங்கை, ஜூலை 12- சிவகங்கை டவுன் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இந்திரா நகர் ரயில்வே கேட் பகுதியில் போதைப் பொருள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ரசூல்தீன் (35), அபு என்ற சாகுபர் சாதிக் (26), முகமது ஹபீஸ் (28), முகமது ரஃபீக் ஆகிய 4 பேரிடம் இருந்து 3.020 கிலோ மெத்தம்பெட்டமைன் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முதற்கட்ட விசாரணையில், பறிமுதல் செய்யப் பட்ட போதைப்பொருளை மலேசியாவுக்கு கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், பல ஆண்டுகளாக ‘குருவி கல்’ என்ற பெயரில் இந்தக் கடத்தல் வலையமைப்பு செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சிவகங்கை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்ட 4 பேரை யும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கடத்தல் வலை யமைப்பில் தொடர்புடைய மற்ற நபர்களை கண்டறிய தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

18 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள நபர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

மதுரை, ஜூலை 12- மதுரை செல்லூர் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் கடந்த 18 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள நபர், வரும் 21-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது. மதுரை பழைய விளாங்குடியைச் சேர்ந்த சுந்தரபாண்டி (40) மீது, 2008-ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் தமிழ்நாடு பொதுச் சொத்துகள் சேதப்படுத்துதல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் விசாரணை மதுரை நீதித்துறை நடுவர் எண்–2 நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், சுந்தர பாண்டி 18 ஆண்டுகளாக தலைமறை வாக இருந்து வருகிறார். பல்வேறு இடங்க ளில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடி யாததால், நீதிமன்றம் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. இதையடுத்து, சுந்தரபாண்டி வரும் 21-ஆம் தேதி மதுரை நீதித்துறை நடுவர் எண்–2 நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என டி-2 செல்லூர் காவல்துறை யினர் அறிவித்துள்ளனர்.

இராமநாதபுரத்தில் வெளிமாநில லாட்டரி விற்பனை நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

இராமநாதபுரம், ஜூலை 12- இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாகக் கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் லாட்டரி சீட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், அதிக பரிசுத் தொகை கிடைக்கும் என்ற ஆசையை ஏற்படுத்தி தினக்கூலி தொழிலாளர்கள், மீனவர்கள் உள்ளிட்ட பொரு ளாதாரத்தில் பின்தங்கிய மக்களை குறிவைத்து விற்பனை நடைபெறுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த சட்டவிரோத விற்பனையால் பல குடும்பங்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி வருவதாகவும், குடும்பச் சிக்கல்கள் அதிகரித்து வருவதாகவும் பொது மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் இணைந்து ஆய்வு நடத்தி, வெளிமாநில லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.