திருச்சி விரைவு செய்திகள்
23 Sept 2026, 10:16 pm

ரயிலில் 13.8 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

விருதுநகர், செப்.23-விருதுநகர் ரயில் நிலையத்தில் புரூலியா–நெல்லை அதிவிரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 13.8 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து, மேற்குவங்கத்தைச் சேர்ந்த 2 பேரை கைது செய்தனர்.விருதுநகர் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு புதனன்று அதிகாலை வந்த புரூலியா–நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் அண்ணாத்துரைதலைமையிலான போலீசார் ரயிலில் சோதனை நடத்தினர்.பின்பகுதியில் உள்ள பொதுப் பெட்டியில் சுபாஸ்குமார் (28), ராணா (25) ஆகியோர் வைத்திருந்த பைகளைசோதனையிட்டபோது 13.8 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா திண்டுக்கல் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

செப்.29 - எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

இராமநாதபுரம், செப்.23-இராமநாதபுரம் மாவட்டத்தில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பான பொதுமக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறியும் வகையில், எண்ணெய்நிறுவனங்கள் மற்றும் எரிவாயு முகவர்களுடன் குறைதீர்க்கும் கூட்டம் செப்.29-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது.இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் கூட்ட அரங்கில் நடைபெறும் இக்கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர், தன் னார்வ நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

முத்திரையிடப்படாத தராசுகளை பயன்படுத்தினால் அபராதம்

சிவகங்கை, செப்.23-சிவகங்கையில் நடைபெற்ற வாரச் சந்தையில் காய்கறி, பழம் மற்றும் பலசரக்கு வியாபாரிகளிடம் தொழிலாளர் துறையினர் ஆய்வு மேற்கொண்டு, அரசு முத்திரையிடப்பட்ட தராசுகள் மற்றும் எடைக்கற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.சட்டமுறை எடையளவுச் சட்டம், 2009 மற்றும் தமிழ்நாடு சட்டமுறை எடையளவுகள் விதிகள், 2011-ன்படி மின்னணு தராசு, மேடை தராசு, வில் தராசு உள்ளிட்ட எடையளவுகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் மறுபரிசீலனை செய்து அரசு முத்திரையிட வேண்டும் என வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.முத்திரையிடப்படாத தராசுகள் மற்றும் எடையளவுகளை பயன்படுத்தினால் அவை பறிமுதல் செய்யப்படுவதுடன், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என தொழிலாளர் துறையினர் எச்சரித்தனர்.

கூடுதல் விலைக்கு மது விற்பனை 2 பேர் தப்பியோட்டம்

இராஜபாளையம், செப்.23-இராஜபாளையம் சங்கரன்கோவில் முக்கு பகுதியில் அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து, தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ், எஸ்.ஐ. செல்வம் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.அப்போது சாக்குப் பைகளுடன் நின்றிருந்த 2 பேர், போலீசாரைக் கண்டதும் பைகளை கீழே போட்டுவிட்டு தப்பியோடினர். போலீசார் பைகளை சோதனையிட்டதில் 25 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1,000 ரொக்கம் இருந்ததுதெரியவந்தது.இதுதொடர்பாக தப்பியோடிய திருவனந்தபுரம் தெருவைச் சேர்ந்த சதீஷ்குமார் (32), எம்.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்த வனகுரு (30) ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஒருவர் கைது

கீழராஜகுலராமன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பூமா, எஸ்.ஐ. கோட்டியப்பசாமி தலைமையிலான போலீ

சார், எஸ்.ராமலிங்கபுரம்–நல்லமநாயக்கன்பட்டி சாலையில் செவ்வாயன்று இரவு சோதனை நடத்தினர்.அப்போதுமதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த எஸ்.ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து (46) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

இராஜபாளையம், செப்.23-இராஜபாளையம் அருகே வடக்கு தேவதானத்தைச் சேர்ந்த அழகுசுந்தரத்தின் மகன் ஜெயக்குமார் (27), மது பழக்கத்துக்கு அடிமையான நிலையில், வீட்டின் முற்றத் தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் பழனீஸ்வரி அளித்த புகாரின் பேரில் சேத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மூதாட்டியிடம் ரூ.70 ஆயிரம் மோசடி

இராஜபாளையம், செப்.23-இராஜபாளையத்தில் ஏடிஎம்மில் பணம் எடுத்துத் தருவது போல் நடித்து, மூதாட்டியின் கார்டு மற்றும் ரகசிய எண்ணை பயன்படுத்தி ரூ.70 ஆயிரம் மோசடி செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். செவல்பட்டிதெருவைச் சேர்ந்த சாந்தி (65) அளித்த புகாரின் பேரில் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

4 பேர் மீது வழக்குப்பதிவு

திருவில்லிபுத்தூர், செப்.23-வத்திராயிருப்பு அருகே சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக ஈஸ்வரன், அவரது தாய் லட்சுமி, சிறுமியின் தந்தை மருதகோச்சடை, தாய் தங்கச்செல்வி ஆகிய 4 பேர் மீது திருவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இன்று சங்கு ஊதி நூதனப் போராட்டம்

இராஜபாளையம் மேற்கு ஒன்றியம் புனல்வேலி பகுதியில் கஞ்சித் தொட்டி திறக் கும் போராட்டத்தை தொடர்ந்து வியாழனன்று (24.9.2026) அரசரடியில் அதல பாதாளத்தில் வீழ்ந்த கைத்தறித் துறைக்கு பாடைகட்டி சங்கு ஊதும் போராட்டம் சிஐடியு கைத்தறி நெசவாளர் சங்கத்தின் தலைமையில் நடைபெறுகிறது. இதில், மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட தலைவர்கள், நெசவாளர்கள் பங்கேற்கின்றனர்.

திருவில்லிபுத்தூரில் செப்புத் தேரோட்டம்

திருவில்லிபுத்தூர், செப்.24-திருவில்லிபுத்தூர் வடபெருங்கோவில் உடையான் திருக்கோவிலின் புரட்டாசித் திருவிழாவையொட்டி, பெரிய பெருமாள் செப்புத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.இதையடுத்து ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டு, கோரதம் எனப்படும் செப்புத்தேரை நான்கு ரத வீதிகள் வழியாக வடம் பிடித்து இழுத்துச் சென்று நிலையை அடையச் செய்தனர். தேரோட்டத்தையொட்டிபோக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சௌ.சக்கரை அம்மாள், சரக ஆய்வாளர் செ.முத்துமணிகண்டன்,கோயில் கண்காணிப்பாளர் அர்ஜுன் மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

கார் மோதி தனியார் வாகன ஓட்டுநர் படுகாயம்

தேனி, செப்.23-தேவாரம் அருகே அடையாளம் தெரியாத கார் மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற தனியார் வாகன ஓட்டுநர் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தேவாரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த ரவியின் மகன் மனோஜ்குமார் (27). தனியார் வாகன ஓட்டுநராகபணியாற்றி வரும் இவர், தனது இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக தேவாரம்–கோவிலாபுரம்பிரிவு அருகே உள்ள பெட்ரோல் நிலையத்துக்குச் சென்றார்.

அப்போது, பின்னால் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார், மனோஜ்குமாரின் இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட மனோஜ்குமார் பலத்த காயமடைந்தார்.அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற காரைபோலீஸார் தேடி வருகின்றனர்.

அழகன்குளம் அகழாய்வு பொக்கிஷங்களை வேறு இடத்துக்கு மாற்ற மக்கள் எதிர்ப்பு

இராமநாதபுரம், செப்.23-இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அழகன்குளத்தில் 1987 முதல் 2016 வரை நடைபெற்ற அகழாய்வுகளில் பாண்டியர் கால நாணயங்கள், ரோமானிய பானை ஓடுகள், சுடுமண் உறைகிணறு உள்ளிட்ட சுமார் 13 ஆயிரம் தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.அழகன்குளத்தில் அகழாய்வு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அரசு அறிவித்தும் இதுவரை பணிகள்தொடங்கவில்லை. இந்நிலையில், இங்கு கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை வேறு இடத்துக்கு மாற்றிஅருங்காட்சியகம் அமைக்க முயற்சி நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்புதெரிவித்துள்ளனர்.

அழகன்குளத்தின் வரலாற்றுப் பொக்கிஷங்களை அங்கேயே பாதுகாக்க வேண்டும் என்றும், அருங்காட்சியகத்துடன் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பூங்கா அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி,மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித் தனர்.