திருச்சி விரைவு செய்திகள்
18 Jul 2026, 9:14 pm

ஏர்வாடியில் தனியாக வசித்த மூதாட்டி கொலை காதுகள் அறுக்கப்பட்ட நிலையில் சடலம்

இராமநாதபுரம், ஜூலை 18- இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவர் வீட்டில் கொலை செய்யப் பட்டு, காதுகள் அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத் தில் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது. ஏர்வாடி ரைஸ் மில் பேருந்து நிறுத்தம் எதிரே வசித்து வந்த ஆறுமுகம் (76) என்பவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் சென்னையிலும், மற்றொருவர் தாயின் வீட்டுக்கு அருகிலும் வசித்து வருகின்றனர். வழக்கம்போல் வெள்ளிக்கிழமை காலை அருகில் வசிக்கும் மகள் உணவு வழங்க வீட்டுக்கு சென்றபோது, ஆறுமுகம் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்ததையும், அவரது காதுகள் அறுக்கப்பட்டிருந்ததை யும் கண்டு அதிர்ச்சியடைந்து ஏர்வாடி காவல்துறையின ருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், மூதாட்டியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையைத் தொடங்கினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆதா ரங்களை சேகரித்து வருகின்றனர். மூதாட்டி தனியாக வசித்து, ஆடு மற்றும் மாடுகளை மேய்த்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. காதுகள் அறுக்கப்பட்டிருந்ததால், நகைக்காக இந்தக் கொலை நடந்ததா அல்லது முன்விரோதம் உள்ளிட்ட வேறு ஏதே னும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர்

காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்

திருவில்லிபுத்தூர், ஜூலை 18- திருவில்லிபுத்தூர் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற முழக்கத்தை முன்வைத்து கையெழுத்து இயக்கம் சாத்தூர் சட்ட மன்ற தொகுதி கீழராஜகுலராமனில் நடைபெற்றது. வட்டாரத் தலைவர் பாலகுருநாதன் தலைமை வகித்தார். கீழ ராஜகுலராமன் தலைவர் பொ.காளிதாசன் முன்னிலை வகித்தார். விருதுநகர் மேற்கு மாவட்டத் தலை வர் ராஜ்மோகன் சிறப்புரை ஆற்றினார். தவெக திருவில்லிபுத்தூர் தெற்கு ஒன்றியச் செயலா ளர் சியாமளா ரஞ்சித், காங்கிரஸ் சார்பில் சேகர், ரவி, ஆர்.ஜெயராஜ், சுப்புராஜ், இ.பிச்சைக்கனி ராஜு மற்றும் பலர் பங்கேற்றனர்.

மண் அள்ளும் அனுமதிக்கு பணம் தவெக நிர்வாகி கைது

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை 18- ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் செங்கல் சூளைகளுக்கு மண் அள்ளும் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி பணம் கேட்டதாக எழுந்த புகாரின் பேரில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகர் ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்த செல்வகுமாரின் மகன் குரு பாலாஜி (23), பொறியியல் பட்ட தாரி. இவர் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் மாநில அளவிலான நிர்வாகியாக தன்னை அறிமுகப்படுத்தி வந்த தாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளையம் பகுதிகளில் செங்கல் சூளைகளுக்கு மண் அள்ளும் அனுமதி பெற்றுத் தருவதற்காக முறையே ரூ.30 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் கேட்டதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அந்த உரையாடலில் தவெக எம்.எல்.ஏ. கார்த்திக்கின் பெயரும் பயன்படுத்தப் பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து எம்.எல்.ஏ. கார்த்திக்கின் உதவியாளர் மல்லி வெற்றிவேல் அளித்த புகாரின் பேரில், ஸ்ரீவில்லி புத்தூர் நகர் போலீசார் குரு பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மது விற்பனை 3 பேர் கைது

தேனி, ஜூலை 18- தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி, புஷ்பராணி நகர், காமக்காபட்டி உள்ளிட்ட பல பகுதிகளிலும் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் தனிப்படை போலீசார் தேவதானப்பட்டி புஷ்ப ராணி நகரில் திடீர் சோதனை செய்தனர். அப்போது ஒரு வீட்டில் சட்ட விரோதமாக மது விற்பனைக்காக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்தி ருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்த 114 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மதுவிற்பனையில் ஈடு பட்ட கெங்குவார்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த சுதாகர்(34), பிரபா கரன்(33), பிரபு (28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

ரூ.1.40 லட்சம் சிக்கியது வெம்பக்கோட்டை, ஜூலை 18- வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சி யர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீ சார் நடத்திய திடீர் சோதனையில் ரூ.1.40 லட்சம் சிக்கியது. விருதுநகர் ஊழல் ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் பூமிநாதன் தலைமை யிலான அதிகாரிகள், வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் சோத னையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தில் இருந்த தனிநபர்களான சரவணகுமார் என்பவரிட மிருந்து ரூ.90 ஆயிரம், பாலகிருஷ்ணன் என்பவரிடமிருந்து ரூ.14 ஆயிரம், மணி கண்டனிடம் ரூ.21,500 மற்றும் அரசு ஊழி யர்களான வெம்பக்கோட்டை வருவாய் ஆய்வாளர் நாகராஜிடம் ரூ.6 ஆயிரம், விஏஓ கலைச்செல்வியிடம் ரூ.3 ஆயிரம், வரு வாய் உதவியாளர் மருது பாண்டியனிடம் ரூ.6 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட் டுள்ளது. குவாரி உரிமம் மற்றும் பட்டாசு கடை உரிமம் வாங்குவதற்காக தாசில்தாருக்கு லஞ்சம் கொடுப்பதற்காக கொண்டு வந்த பணமா என்ற கோணத்தில் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

உலக பொருளாதார சவால்களையும் கடந்து இந்தியா வேகமாக வளர்கிறது

நிர்மலா சீதாராமன் மதுரையில் பேச்சு மதுரை, ஜூலை 18- உலகளாவிய பொருளாதார நெருக்கடி கள் மற்றும் போர் பதற்றங்கள் உள்ளிட்ட பல் வேறு சவால்களுக்கு மத்தியிலும், இந்தியா வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொரு ளாதார நாடாக திகழ்கிறது என்று ஒன்றிய நிதி மற்றும் நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மதுரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற 3-வது YiFi தொழில்முனை வோர் மாநாட்டில் சனிக்கிழமை கலந்து கொண்டு அவர் பேசியதாவது: உக்ரைன் போர், இஸ்ரேல்–ஈரான் பதற் றம், சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதிப்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகச் சிக்கல்கள், உரங்களின் விலை உயர்வு உள்ளிட்ட உலகளாவிய சவால்கள் இருந்தபோதிலும், இந்தியா தொடர்ந்து வேகமான பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்ட மைப்பு உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக உள்ளது. யு.பி.ஐ. தளத்தில் மாதந்தோறும் 20 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்த னைகள் நடைபெறுகின்றன. மேலும், நாட் டில் 2,100-க்கும் மேற்பட்ட உலகளாவிய திறன் மையங்கள் செயல்பட்டு வருகின் றன. அவை பெருநகரங்களைத் தாண்டி இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்க ளுக்கும் விரிவடைந்து வருகின்றன. தொழில்முனைவோர் தயக்கத்தையும் தோல்வி பயத்தையும் கடந்து புதுமை, பொறுப்புணர்வுடன் செயல்பட்டு “வளர்ந்த இந்தியா–2047” இலக்கை அடைய பங்க ளிக்க வேண்டும் என்றார். பின்தங்கிய 114 மாவட்டங்களை லட்சிய மாவட்டங்களாக மேம்படுத்தும் திட்டத்தில், தமிழகத்தின் விருதுநகர் மற்றும் இராமநாத புரம் மாவட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் பாராட்டினார். விருது நகரின் வத்தல் தொழில் மற்றும் மாப்பிள் ளைச் சம்பா, கருப்புக் கவுனி உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்களுக்கு மதிப்புக் கூட்டும் நடவடிக்கைகளுக்கு இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கியின் ஆதரவு வழங் கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மதுரையின் வரலாற்றை குறிப்பிட்ட அவர், கங்காதேவியின் “மதுரா விஜயம்” நூலை மேற்கோள் காட்டி, பல்வேறு சவால் களை கடந்து மீண்டும் எழுச்சி பெற்ற நகரம் மதுரை என்றும், “மீளெழுச்சியின் அடையாளம் மதுரை” என்றும் குறிப்பிட்டார். உலக அரங்கில் இந்தியா தவிர்க்க முடி யாத சக்தியாக உருவெடுத்து வருவதாக வும், அணுக்கரு இணைவு, துருவ மற்றும் விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டு வருவதாகவும் அமைச் சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட உள்விளையாட்டு அரங்கையும் அவர் திறந்து வைத்தார்.

விழிப்புணர்வு முகாமில் மாணவி புகார் போக்சோ வழக்கில் வாலிபர் கைது

ஒட்டன்சத்திரம், ஜூலை 18- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள காசிபாளையத்தில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு முகாம் சிங்கப்பெண் அதிரடிப்படை காவல்துறை சார்பில் நடைபெற்றது. சிங்கப்பெண் சிறப்பு சார்பு ஆய்வாளர் சித்ரா, பெண் தலைமைக் காவலர்கள் நித்யா, சுகப்பிரியா மற்றும் ஓட்டுநர் காவலர் கௌதம் உள்ளிட்டோர் பங்கேற்று பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பு, சட்ட விழிப்புணர்வு மற்றும் அவசரகால உதவி குறித்த தகவல்களை எடுத்துரைத்தனர். முகாமின் போது அப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் தனது தாயாருடன் சிங்கப்பெண் குழுவினரை தனியாக சந்தித்து புகார் அளித்தார். அந்தப் புகாரில், கூவக்காபட்டி முத்துப்பழனியூரைச் சேர்ந்த மகாமுனியின் மகன் நாகமணி என்பவர் தனது அலைபேசி எண்ணுக்கு அடிக்கடி தொடர்புகொண்டு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்ததாகவும், தொடர்ந்து மனஉளைச்சலை ஏற்படுத்தியதாகவும் கூறினார். இதனையடுத்து நாகமணியை வடமதுரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆய்வாளர் புவனேஸ்வரி, சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் நாகமணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

அரசு பேருந்து – ஆட்டோ நேருக்கு நேர் மோதல் பெண், சிறுமி பலி; 3 பேர் படுகாயம்

சிவகங்கை, ஜூலை 18- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூர் அருகே அரசு விரைவு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் மற்றும் சிறுமி உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். இராமநாதபுரத்தில் இருந்து மதுரையை நோக்கி அரசு விரைவு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதே நேரத் தில், மதுரை மதிச்சியம் பகுதியில் இருந்து இடைக்காட்டூர் தேவாலயத்துக்கு வழிபாட்டிற்காக சுமார் 8 பேருடன் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. திருப்புவனம் புதூர் அருகே இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோ பலத்த சேதமடைந் தது. இந்த விபத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் 5 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர். மேலும், 3 பேர் பலத்த காயமடைந்தனர். மற்ற பயணி களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, மேல்சிகிச்சைக் காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து திருப்புவனம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழிபாட்டிற்காகச் சென்றவர்கள் விபத்தில் சிக்கி இரு வர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது.

முன்விரோதம் காரணமாக உறவினர் கொலை இளைஞர் காவல்நிலையத்தில் சரண்

மதுரை, ஜூலை 18- மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவு வி.எஸ். நகரில் முன்விரோதம் காரணமாக தங்கராஜ் (50) என்ப வர் கட்டையால் தாக்கிக் கொலை செய்யப்பட்டார். தங்கராஜ், தனது சகலை ராமுவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, உறவினரின் மகனான சிவா (35) திடீரென கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் தங்கராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதலுக்கு பயன்படுத்திய கட்டையுடன் சிவா மேல வளவு காவல்நிலையத்தில் சரணடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை யினர், தங்கராஜின் உடலை மீட்டு பிரேதப் பரிசோத னைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர். அப்போது, சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று உறவினர் கள் வலியுறுத்தி காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மேலூர் டி.எஸ்.பி. சிவக்குமார் சம்பவ இடத்துக்கு வந்து உறவினர்களை சமாதானப்படுத்தி யதைத் தொடர்ந்து, உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், சிவாவின் உறவினர் முனி யாண்டி கொலை வழக்கில் தங்கராஜ் தொடர்புடையவர் எனக் கூறப்படும் நிலையில், அதனால் ஏற்பட்ட நீண்ட கால முன்விரோதமே இந்தக் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது.

சதுரகிரி அன்னதான மடத்தில் திருட்டு

அறங்காவலர் மீது புகார்; போலீஸ் விசாரணை வத்திராயிருப்பு, ஜூலை 18- சதுரகிரி மலையில் செயல்பட்டு வரும் பழமையான அன்னதான மடத்தில் சமையல் பாத்திரங்கள் மற்றும் போர்வெல் மோட்டார் திருடப்பட்டதாகவும், இதில் கோயில் அறங்காவலர் தரப்பினருக்கு தொடர்பு இருப்ப தாகவும் குற்றம்சாட்டி மட நிர்வாகிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அருகே உள்ள கஞ்சி மடம், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறது. அரசு உத்தர வால் மலையில் செயல்பட்ட பிற அன்னதான மடங்கள் மூடப்பட்ட நிலையில், உயர்நீதிமன்ற அனுமதியுடன் தொடர்ந்து இயங்கி வரும் ஒரே அன்னதான மடமாக இது உள்ளது. கடந்த சில மாதங்களாக மடத்தில் இருந்த பொருட்கள் அடிக்கடி மாயமாகி வந்ததாகவும், அண்மையில் சமையல் பாத்திரங்கள் மற்றும் போர்வெல் மோட்டார் திருடப்பட்ட தால் அன்னதானம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டதாக வும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதனால், ஆனி அமாவாசையையொட்டி மலைக்கு வந்த ஏராளமான பக்தர்கள் அன்னதானம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் கோயில் அறங்காவலர் ராஜா மற்றும் அவரது தரப்பினருக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டி, மட நிர்வாகிகள் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர். மேலும், மாவட்ட ஆட்சியர், அறநிலையத்துறை அமைச் சர் மற்றும் முதலமைச்சருக்கும் மனு அனுப்பியுள்ளனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி அருகே நகை, பணம் திருட்டு

தேனி, ஜூலை 18- தேனி அருகே வீட்டில் இருந்த நான்கரை பவுன் நகை, ரொக்கம் ரூ.3 ஆயிரம் திருடு போனதாக பழனிசெட்டி பட்டி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பழனிசெட்டிபட்டி காமாட்சியம்மன் கோயில் தெரு வைச் சேர்ந்தவர் கங்கன் மனைவி பஞ்சவர்ணம் (39) கடந்த வியாழனன்று வீட்டை பூட்டிவிட்டு சாவியை மீட்டர் பெட்டி யில் வைத்து விட்டு மருத்துவமனை சென்று வந்ததாகவும், மறுநாள் வழக்கம் போல் வீட்டு செலவுக்கு பணம் எடுக்க பீரோவை திறந்த போது ரூ.3 ஆயிரம், நான்கரை பவுன் எடையுள்ள 2 செயின் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து பஞ்சவர்ணம் கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி காவல் சார்பு ஆய்வாளர் அமாவாசை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.