திருச்சி விரைவு செய்திகள்
23 Jun 2026, 9:20 pm

கடலாடியில் ஓய்வூதியர் சங்க வட்ட பேரவை

இராமநாதபுரம், ஜூன் 23- இராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் வட்ட பேர வைக் கூட்டம் நடைபெற்றது. வட்டத் துணைத் தலைவர் நவநீதகிருஷ்ணன் தலை மையில் நடைபெற்ற கூட்டத்தில், வட்டச் செயலாளர் முருகன், பொருளாளர் நாகலிங்கம் அறிக்கை சமர்ப்பித்த னர். கூட்டத்தில் மாவட்டத் தலைவர் கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை யாற்றினர். தொடர்ந்து மாவட்டச் செயலாளர் விஜயராகவன் நிறை வுரையாற்றினார். இறுதியில் பொருளாளர் நாகலிங்கம் நன்றி கூறினார்.

வாடகை பாக்கி செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு ‘சீல்’

சிவகங்கை, ஜூன் 23- சிவகங்கை நகராட்சிக்குச் சொந்தமான கடைகளில் வாடகை மற்றும் வரி பாக்கிகளை நீண்டகாலமாக செலுத் தாத கடைகள் மீது நகராட்சி நிர்வாகம் அதிரடி நட வடிக்கை மேற்கொண்டுள்ளது. பலமுறை எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டதுடன், நிலுவைத் தொகையை செலுத்துவதற்காக கூடுதல் கால அவகாசமும் வழங்கப்பட்டதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், சில கடை உரிமையாளர்கள் வாடகை பாக்கியை செலுத்தாததால் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் அதிகாரி கள் நகராட்சிக்கு உட்பட்ட கடைகளில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். இதில் மொத்தம் 139 கடைகள் ஆய்வு செய்யப்பட்டன. அதன் அடிப்படையில், முதற்கட்டமாக வாடகை பாக்கி செலுத்தாத 4 கடைகள் பூட்டப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட் டன. மேலும், நிலுவைத் தொகைகளை வசூலிக்கும் நட வடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க வும், நிலுவைத் தொகைகளை வசூலிக்கவும் இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். வாடகை பாக்கி வைத்துள்ள மற்ற கடை உரிமையா ளர்களும் உடனடியாக நிலுவைத் தொகைகளை செலுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு யோகா பயிற்சி

திருவில்லிபுத்தூர், ஜூன் 23- சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருவில்லி புத்தூர் அருகேயுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது. கல்லூரியும் ஹார்ட்புல்னஸ் அமைப்பும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சரவணன் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சௌந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். ஹார்ட்புல்னஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹரி கிருஷ்ணன், யோகாவின் முக்கியத்துவம் மற்றும் அதன் உடல், மனநல நன்மைகள் குறித்து மாணவர்களிடம் விளக்கி, பல்வேறு யோகாசனங்கள் மற்றும் மூச்சுப் பயிற்சி களை நடத்திக் காட்டினார்.

டிராக்டரில் இருந்து தவறி விழுந்தவர் பலி

திருவில்லிபுத்தூர், ஜூன் 23- இராஜபாளையம் செல்லும் வழியில் ராக்காச்சி அம் மன் கோவில் அருகில் உள்ள பாலத்தின் மேட்டில் மாட சாமி கோவில் தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்ப வர் கலப்பையுடன் கூடிய டிராக்டரை மம்சாபுரத்தில் வேலைக்கு விடுவதற்காக ஓட்டி வந்துள்ளார். அப்போது ராக்காச்சி அம்மன் கோவில் பாலம் அருகே உள்ள மேட்டில் ஏறும் போது தவறி விழுந்துள்ளார். பின்னர் தன் தம்பியின் காட்டிற்கு சென்று விபரத்தை கூறி யுள்ளார். அங்கிருந்தவர்களின் துணையுடன் பால கிருஷ்ணனை அழைத்துக் கொண்டு தளவாய்புரம் செல் லும் வழியில் உள்ள சுந்தர் மருத்துவமனையில் தம்பி மகா தேவன் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார். அங்கு மருத்துவர் முதலுதவி சிகிச்சை செய்து மேல் சிகிச்சைக்காக இராஜபாளையம் நகரில் உள்ள மீனாட்சி மெமோரியல் மருத்துவமனைக்கு பரிந்துரைத்து அனுப்பி யுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்க னவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து பாலகிருஷ்ணனின் தம்பி மகாதேவன் கொடுத்த புகாரின் பேரில், மம்சாபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புகையிலை பொருட்களை விற்ற ஒருவர் கைது

திருவில்லிபுத்தூர், ஜூன் 23- விருதுநகர் மாவட்டம் மல்லி காவல்நிலைய எல் லைக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்து, அவரிடமி ருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மல்லி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரகுபதி தலை மையிலான போலீசார் பூவநாதபுரம் விலக்கு அருகே உள்ள மெட்ரோ சிட்டி ரெக்ரியேஷன் கிளப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஈஞ்சார் கிராமத்தைச் சேர்ந்த பொன் முனீஸ்வரன் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப் பட்ட விஷத்தன்மை கொண்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீசார் பொன் முனீஸ்வரனை கைது செய்து, அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து மல்லி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரளி விதை அரைத்து குடித்தவர் உயிரிழப்பு

திருவில்லிபுத்தூர், ஜூன் 23- விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அரளி விதையை அரைத்து குடித்த ஆடு மேய்ப்பவர் சிகிச்சை பலனின்றி உயி ரிழந்தார். வத்திராயிருப்பு காவல்நிலைய எல் லைக்கு உட்பட்ட மாத்தூர் தெற்கு தெரு வைச் சேர்ந்த செல்வம் ஆடுகள் வளர்த்து வாழ்ந்து வந்தார். கடந்த ஆறு மாதங்க ளாக உடல்நலக்குறைவு மற்றும் கடுமை யான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை வயிற்று வலி அதிகரித்ததால் மனமு டைந்த அவர், வீட்டில் அரளி விதையை அரைத்து குடித்துள்ளார். பின்னர், தனது வீட்டின் அருகே கடை நடத்தி வரும் அழகு லட்சுமியிடம் இதுகுறித்து தெரிவித்துள் ளார். அவரது தகவலின் பேரில் செல்வத்தின் இளைய மகன் ராஜ்குமார் உடனடியாக வீட்டிற்கு வந்து, தந்தையை வத்திரா யிருப்பு அரசு மருத்துவமனைக்கு சிகிச் சைக்காக கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ராஜ்குமார் அளித்த புகா ரின் பேரில் வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமருக்கே அல்வா கொடுத்தவர்கள் பாஜகவினர்

மாணிக்கம் தாகூர் எம்.பி. விமர்சனம் விருதுநகர், ஜூன் 23- உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர் களிடமிருந்து பெறப்பட்ட நிதியை முறை யாக பயன்படுத்தாமல், “ராமருக்கே அல்வா கொடுத்தவர்கள் பாஜகவினர்” என விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக் கம் தாகூர் கடுமையாக விமர்சித்தார். விருதுநகரில் செய்தியாளர்களை சந் தித்த அவர், ராமர் கோவில் நிதி தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதாகவும், இது ஒரு “விஞ்ஞான ஊழல்” எனவும் குற் றம்சாட்டினார். இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சிகள் நடைபெற்று வருவ தாகவும், வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சி இந்த பிரச்சனையை எழுப்பும் என்றும் தெரிவித்தார். மேலும், விருதுநகர் மற்றும் இராம நாதபுரம் மாவட்டம் ஆகிய மாவட்டங் களை “முன்னேறத் துடிக்கும் மாவட்டங் கள்” என ஒன்றிய அரசு அறிவித்திருந்தா லும், அதற்கான சிறப்பு நிதி எதுவும் ஒதுக் கப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டி னார். இதுகுறித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பலமுறை கேள்வி எழுப்பியபோதும், முறையான பதில் கிடைக்கவில்லை என்றும் கூறினார். அதனைத் தொடர்ந்து நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவித்த அவர், நாட்டில் செயல்பட்டு வரும் நீட் பயிற்சி மையங்கள் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்க ளிடமிருந்து பெருமளவில் கட்டணம் வசூ லிப்பதாக குற்றம்சாட்டினார். அந்த மையங் கள் பல மாநில அரசுகளின் கல்வி பட் ஜெட்டை விட அதிக வருவாய் ஈட்டுவதாக வும், இது மாணவர்களுக்கும் பெற்றோர் களுக்கும் கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார். எனவே, மாணவர்கள் மற்றும் பெற்றோர் களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

இறந்த பெண்ணுக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணம் தயாரித்து விற்ற தம்பதி நெல்லை ஆட்சியரிடம் புகார்

திருநெல்வேலி, ஜூன் 22 - இறந்துபோன பெண்ணை உயிருடன் இருப்பதாக போலி ஆவணங்கள் தயாரித்து பல லட்சம் ரூபாய் மதிப்பு நிலத்தை மோசடியாக விற்பனை செய்த தம்பதியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே உள்ள பக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் உச்சிமுத்து. இவர் திங்கட்கிழமை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எனது சகோதரி செல்லம்மாள் (81) என்பவர் கடந்த 11.3.2016 அன்று வயது முதிர்வு காரணமாக இயற்கை மரணமடைந்தார். அவருக்கு வாரிசுகள் இல்லாததால், இறுதிவரை எனது பராமரிப்பிலேயே அவர் இருந்து வந்தார். செல்லம்மாள் உயிருடன் இருந்தபோது, பாளையங்கோட்டை தாலுகா, முன்னீர்பள்ளம் பகுதியில் அவருக்குச் சொந்தமான 23 சென்ட் நிலத்தை நிர்வகிக்க அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு 2013-இல் பொது அதிகாரப் பத்திரம் வழங்கியிருந்தார். ஆனால், சில நாட்களிலேயே அந்தப் பத்திரம் ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில், செல்லம்மாள் இறந்த பின்னர், அவர் உயிருடன் இருப்பதாகக் கூறி, பொது அதிகாரம் பெற்றவரும் அவரது மனைவியும் கடந்த 3.6.2016 அன்று ஒரு போலி வாழ்வுச் சான்றிதழை தயாரித்து அடமானம் வைத்து மோசடி செய்துள்ளனர். பின்னர் செல்லம்மாள் இறந்து 6 ஆண்டுகள் கடந்த நிலையில், கடந்த 17.5.2022 அன்று அவர் மீண்டும் உயிருடன் இருப்பதாக மற்றொரு போலி சான்றிதழை உருவாக்கி, அந்த 23 சென்ட் நிலத்தை வேறொரு நபருக்கு விற்பனை செய்து பணம் பெற்றுள்ளனர். இறந்த நபரின் பெயரில் போலி ஆவணங்கள் மற்றும் வாழ்வுச் சான்றிதழ்களை தயாரித்து, அரசுப் பதிவாளர் அலுவலகங்களை ஏமாற்றி நிலத்தை அபகரித்த தம்பதி மீது கடும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, ஜூன் 23- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாளையங்கோட்டை வி.எம். சத்திரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், பாளையங்கோட்டை பகுதிக்குழு செயலாளர் ஆர்.மதுபால், மாவட்டக்குழு உறுப்பினர் காமராஜ், பார்த்தசாரதி ஆகியோர் பேசினர்,