தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

31 May 2026, 9:54 pm
திருச்சி விரைவு செய்திகள்

சார்பு ஆய்வாளரிடம் ரூ.3.75 லட்சம் பணம் மோசடி செய்தவர் கைது ரூ.90 ஆயிரம், பொருள் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூர், மே 31- ஸ்ரீவில்லிபுத்தூரில் ஓய்வுபெற்ற எஸ்.பி.சி.ஐ.டி. சார்பு ஆய்வாளரின் ஏடிஎம் கார்டை மாற்றி, அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.3.75 லட்சம் மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து ரூ.90 ஆயிரம் ரொக்கம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்த னர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் ஓய்வுபெற்ற எஸ்.பி.சி.ஐ.டி. சார்பு ஆய்வாளர் சுந்தரராஜன் என்பவரின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி ரூ.3.75 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டதாக அண்மையில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த குற்றப்பிரிவு போலீசார், சம்பவம் நடைபெற்ற ஏடிஎம் மையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சிவகாசியைச் சேர்ந்த மாரிமுத்து (41) என்பவர், சுந்தரராஜனுக்கு ஏடிஎம் மையத்தில் உதவி செய்வது போல நடித்து, அவரது ஏடிஎம் கார்டை மாற்றிப் பெற்றது டன், பின்னர் அந்த கார்டைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கிலிருந்து ரூ.3.75 லட்சம் பணத்தை எடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் மாரிமுத்துவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், வழக்கின் தொடர்ச்சியாக அவரிடமிருந்து ரூ.90 ஆயிரம் ரொக்கப் பணம், புதிதாக வாங்கப்பட்ட ஒரு தொலைக்காட்சி மற்றும் ரூ.32,500 மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரு சக்கர வாகனம் மோதி முதியவர் பலி

இராமநாதபுரம், மே 31- இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வெள்ளிக் கிழமை இரவு சாலையோரம் நடந்து சென்ற முதியவர் இரு சக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம், நத்தகுளத்தை அடுத்துள்ள பெரியாண்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு மகன் அழகர்சாமி (85). மன நலம் பாதிக்கப்பட்ட இவர், வெள்ளிக்கிழமை இரவு கமுதி -அருப்புக்கோட்டை சாலை யில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கமுதியை அடுத்த பெருமாள் தேவன்பட்டி யைச் சேர்ந்த வழிவிட்டான் மகன் முத்து ராமலிங்கம் (49) ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் இவர் மீது மோதியது. இதில் அழகர்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த முத்துராமலிங்கம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். இது தொடர்பாக கமுதி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கஞ்சா விற்றவர் கைது

திருவில்லிபுத்தூர், மே 31- திருவில்லிபுத்தூர் நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரிடமி ருந்து 40 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்த னர். திருவில்லிபுத்தூர் நகர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட சி.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் அருகே, நகர் காவல்நிலைய சார்பு ஆய்வா ளர் முருகராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணி யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த சீனியாபுரத்தைச் சேர்ந்த விஜய் என்ற அபியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் அய்யம்பட்டி தெருவைச் சேர்ந்த இந்திரா என்பவரிடம் இருந்து கஞ்சா பெற்று விற்பனை செய்து வந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து விஜயை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 40 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விஜய் மற்றும் அவருக்கு கஞ்சா வழங்கியதாகக் கூறப்படும் இந்திரா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற் கொள்ளப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட விஜயை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணன்கோவில் பகுதியில் இருசக்கர வாகனம் மாயம்

திருவில்லிபுத்தூர், மே 31- கிருஷ்ணன்கோவில் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த இருசக்கர வாகனம் மாயமான சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சுந்தரபாண்டியம் பகுதியைச் சேர்ந்தவர் திரு நாவுக்கரசு. இவர் கிருஷ்ணன்கோவிலில் செயல்பட்டு வரும் வேலவன் பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் வெள்ளிக்கிழமை தனது சகோதரியின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அருப்புக் கோட்டைக்கு சென்றிருந்தார். அப்போது கிருஷ் ணன்கோவிலில் உள்ள எஸ்.எஸ்.கே. தனியார் விடுதி முன்பாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்து சனிக்கிழமை மீண்டும் வாகனம் நிறுத்தியிருந்த இடத்திற்குச் சென்று பார்த்தபோது, இரு சக்கர வாகனம் காணாமல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பல்வேறு இடங்களில் தேடியும் வாகனத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து திருநாவுக்கரசு கிருஷ்ணன்கோவில் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

றுமிக்கு பாலியல் வன்கொடுமை திருமங்கலத்தில் 4 சிறுவர்கள் போக்சோ சட்டத்தில் கைது

மதுரை, மே 31- மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 13 வயது சிறுமிக்கு எதிராக கும்பல் பாலியல் வன்கொடுமை நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவத்தில், நான்கு சிறுவர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருமங்கலம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவியை, அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய நான்கு சிறுவர்கள், மாரியம்மன் கோவில் வைகாசி திரு விழாவையொட்டி நடைபெற்று வந்த சித்திரைப் பொருட் காட்சி பகுதிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு சிறுமிக்கு எதிராக பாலியல் வன்கொடுமை நடை பெற்றதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்ப டையில், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். விசாரணையின் அடிப்படையில், சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் நான்கு சிறுவர்களை யும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாது காக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் கைது செய்து, சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருந்தக ஊழியர் தற்கொலை

தேனி, மே 31- போடியில் பெரிய பள்ளியில் மகனை படிக்க வைக்க முடியாததால் மருந்தக ஊழியர் கண்மாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் ஞாயிற் றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். தேனி மாவட்டம் போடி திருமலாபுரம் குப்பழகிரி தோட்டம் பகுதியில் வசித்து வந்தவர் பால்ராஜ் மகன் சிவகுருநாதன் (46). இவர் போடி பழைய பேருந்து நிலை யத்தில் பிரபல மருந்தகத்தில் வேலை செய்து வந்தார். இவ ரது மூத்த மகனை தேனி முத்துத்தேவன்பட்டியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் படிக்க வைத்திருந்தார். செலவு அதிகம் ஏற்பட்டதால் அங்கிருந்து மகனின் மாற்றுச் சான்றிதழை பெற்று போடியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் சேர்த்தார். தொடர்ந்து முத்துத்தேவன் பட்டி பெரிய பள்ளியில் படிக்க வைக்க முடிய வில்லையே என சிவகுருநாதன் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் சனிக்கிழமை மாலை தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு மருந்தகத்திலி ருந்து சென்றவர் மீண்டும் மருந்தகத்திற்கு வரவில்லை. வீட்டிற்கும் வராததால் குடும்பத்தினர் தேடி வந்த னர். இந்த நிலையில் போடி மீனாட்சிபுரம் அருகே மீனாட்சி யம்மன் கண்மாய் கரையில் சிவகுருநாதன் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம் நின்றிருந்துள்ளது. அப்பகுதியில் பார்த்தபோது கண்மாயில் சிவகுருநாதன் சடலம் மிதந்துள்ளது. இதுகுறித்துப் போடி தாலுகா காவல்நிலையத்தில் புகார் செய்ததன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிவகுருநாதனின் சடலத்தை மீட்டு விசாரணை செய்கின்றனர்.

மது பாட்டில்கள் பதுக்கி விற்றவர் கைது

போடி, மே 31- போடி அருகே ஞாயிற்றுக்கிழமை, மதுப்பாட்டில் களை பதுக்கி விற்றவரை போலீசார் கைது செய்து விசா ரிக்கின்றனர். போடி அருகே கிராமப் பகுதியில் போடி தாலுகா காவல்நிலையப் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டி ருந்தனர். மேலச்சொக்கநாதபுரம் விலக்கு அருகே சந்தே கத்திற்கிடமான முறையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் மதுப்பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் இவர் போடி ராம கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் சுரேஷ் (40) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சுரேசை கைது செய்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.