திருச்சி விரைவு செய்திகள்
27 Oct 2026, 10:37 pm

திருவாடானை அருகே ஆற்று மணல் கடத்தல்இருவர் கைது; மேலும் இருவர் தப்பியோட்டம்

இராமநாதபுரம், அக்.27-இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம் மல்லனூர் ஆற்றுப் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக இருவரைக் கைது செய்த தொண்டி போலீசார், டிராக்டர் உள்ளிட்ட இரண்டு வாகனங்களைப் பறிமுதல்செய்தனர். மேலும் இருவர் தப்பியோடியதால், அவர் களைத் தேடி வருகின்றனர்.மல்லனூர் ஆற்றுப் பகுதியில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுவதாகப் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப் போது, ஆற்று மணல் ஏற்றிச் சென்ற இரண்டு வாகனங்களைச் சோதனையிட்டு, கடத்தலில் ஈடுபட்டதாக மல்லனூரைச் சேர்ந்த சதீஷ்குமார் (34), நாகப்பட்டினம் மாவட்டம், ஒரத்தூரைச் சேர்ந்த பிரவீன் (22) ஆகியோரைக் கைது செய்தனர்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் மல்லனூரைச் சேர்ந்த உடையார், அவரது மகன் தென்னரசு ஆகியோர் தப்பியோடினர். அவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிராக்டர் உள்ளிட்ட இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப் பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் தப்பியோடியவர்கள் மீது ஏற்கெனவே மணல் திருட்டு தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

5 நாட்களே ஆன ஆண் குழந்தை உயிரிழப்புஅரசு மருத்துவமனை மீது ஆட்சியரிடம் புகார்

இராமநாதபுரம், அக்.27-இராமநாதபுரம் மாவட்டம், பாசிப்பட்டணத்தைச் சேர்ந்த அசாருதீனின் மனைவி நூருல் ஆசிகா, பிரசவத்திற் காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், ஐந்து நாட்களுக்குப் பிறகு குழந்தை உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.குழந்தைக்குத் தேவையான மருத்துவ உபகரணங் கள் போதிய அளவில் இல்லாததும் உயிரிழப்புக்குக் காரணமாக இருக்கலாம் எனப் பெற்றோர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.எனவே, குழந்தையின் உயிரிழப்பு குறித்து விரிவான

விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும் பத்துக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

கணவரை எரித்துக் கொன்றதாக மனைவி சரண்

விருதுநகர், அக்.27-விருதுநகர், கூரைக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட வி.வி.ஆர். காலனியைச் சேர்ந்தவர் சங்கர்குரு (35). இவரது மனைவி சங்கரேஸ்வரி. இவர்களுக்கு 12 வயதில் மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர். சங்கர்குரு குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்ததால், இருவரும் 2022-ல் விவாகரத்து பெற்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.இந்நிலையில், சங்கர்குரு குடிபோதையில் வீட்டுக்கு வந்தபோது தம்பதியரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது ஆத்திரமடைந்த சங்கரேஸ்வரி, கணவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த தீக்காயமடைந்த சங்கர்குரு உயிரிழந்தார்.இதையடுத்து, சங்கரேஸ்வரி விருதுநகர் கிழக்குக் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் நகராட்சியில் கோவிட் காலத்தில் பல லட்சம் ரூபாய் ஊழல் நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குநர் விசாரணை

விருதுநகர், அக்.27-விருதுநகர் நகராட்சியில் கோவிட் காலத்தில் கிருமிநாசினி உள்ளிட்ட பொருட் கள் வாங்கியதாகப் போலி பில்கள் தயாரித்து, பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் பேரில், அப்போது பணியில் இருந்த ஆணையாளர், சுகாதார ஆய்வாளர்கள், கணக்காளர் உள்ளிட்டோரிடம் நகராட்சி நிர்வாகக் கூடுதல் இயக்குநர் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.

கடந்த 2020–21-ஆம் ஆண்டுகளில், கொரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. அப்போது உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் பிளீச்சிங் பவுடர் தெளித்தல், கிருமிநாசினி தெளித் தல், துப்புரவுப் பணியாளர்கள்மற்றும் நகராட்சி ஊழியர்களுக்குக் கையுறை, முகக் கவசம், சானிடைசர் வழங்குதல், பகுதிவாரியாகக் கபசுரக் குடிநீர் விநியோகித்தல் உள் ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தப் பணிகளுக்காகப் பொருட்கள் வாங்கியதாகப் போலி பில்கள் தயாரித்து பல லட்சம் ரூபாய் முறைகேடு நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக அப்போது பணியில் இருந்த ஆணையாளர் பார்த்தசாரதி, சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்ஆண்டவர், முத்துப்பாண்டி, குருசாமி, சீனிவாசன், கணக்காளர் செண்பகநாச்சியார், இளநிலை உதவியாளர்கள் பிரேம்குமார், ராஜேஸ்வரன் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் நகராட்சி நிர்வாகக் கூடுதல் இயக்குநர் பி.ஜானகி ரவீந்திரன் விசாரணை நடத்தினார். குற்றச்சாட்டுக்கு உள் ளானவர்களிடம் விசாரணை மேற்கொண்ட அவர், சாட்சிகளான முன்னாள் ஆணையாளர் சையது முஸ்தபா கமால், கணக்காளர் மல்லிகா, இளநிலை உதவியாளர்கள் கென்னடி, குலசேகர பாண்டியன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினார்.இந்த விசாரணையால் விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

வடகிழக்குப் பருவமழை பாதிப்புகளைத் தடுக்க அமைச்சர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

விருதுநகர், அக்.27-விருதுநகர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற் கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அரி முன்னிலையில், அமைச்சர்கள் கீர்த்தனா, ஜெகதீஸ்வரி தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் அமைச்சர் கீர்த்தனா பேசுகையில், மழைநீர் எளிதில் வெளியேறும் வகையில் வரத்து வாய்க்கால்களைத் தூர் வார வேண்டும் என்றும், குடிநீரில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கவும், டெங்கு கொசு உற்பத்தியைத் தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். கால்நடைகளை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பதுடன், மழைநீரைச் சேமித்துக் குடிநீர் ஆதாரமாகப் பயன்படுத்தவும் வலியுறுத்தினார்.

அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசுகையில், மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்படக் கூடிய 9 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், தகவல் பரிமாற்றத்துக்காக 1,540 முதல் தகவல் அளிப்பாளர்கள் மற்றும் 16 வாக்கி டாக்கிகள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், கண்மாய்கள் மற்றும் நீர்நிலைகளில் உடைப்பு ஏற்படுவதைத் தடுக்க 23,850 மணல் மூட்டைகள் தயார்நிலையில் உள்ளன. மழை வெள்ளத்தால் பாதிக் கப்படும் மக்களைத் தங்க வைப்பதற்காக 17 பள்ளிகள், 2 அங்கன்வாடி மையங்கள், 6 திருமண மண்டபங்கள், 12 சமுதாயக் கூடங்கள், 2 இ-சேவை மையங்கள் என மொத்தம் 39 இடங்களில் நிவாரண முகாம் கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.இக்கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல், மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தி உள் ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

7 வயது சிறுவன் உயிரிழப்பு: கொலை வழக்காகப் பதிவு உறவினர் பெண் கைது; 10 வயது சிறுவனிடம் விசாரணை

மதுரை, அக். 27-மதுரை மாவட்டம், மேலூர் அருகே தனியாமங்கலத்தைச் சேர்ந்த பெரியகருப்பன்–சத்யா தம்பதியரின் மகன் முத்துவேலன் (7), கடந்த 25-ஆம் தேதி வீட்டின்அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போனார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப் பட்டு தேடுதல்பணி நடைபெற்றது.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை அதே பகுதியில் உள்ள பாழடைந்த ஓட்டு வீட்டில் முத்துவேலன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். போலீஸார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவனுடன் விளையாடியபோது ஏற்பட்டசம்பவத்தில் முத்துவேலன் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது.

சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்காமல், 10 வயது சிறுவனின் தாயான சந்தியா, முத்துவேலனின் உடலைப் பாழடைந்த வீட்டில் மறைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன், மேலூர் காவல் துணைக் கண்கா

ணிப்பாளர் சிவகுமார் ஆகியோர் கீழவளவு காவல் நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துவிளக்கமளித்தனர். 10 வயது சிறுவன் கைது செய் யப்படவில்லை; அவரிடம் விசாரணை மட்டுமே நடைபெற்று வருகிறது.