தெற்கு ரயில்வேயின் சிறப்புப் பேருந்து சேவை! வழித்தடத்தை மாற்ற பயணிகள் கோரிக்கை
28 Feb 2026, 2:29 pm
<p><strong>தெற்கு ரயில்வேயின் சிறப்புப் பேருந்து சேவை! வழித்தடத்தை மாற்ற பயணிகள் கோரிக்கை</strong></p>
<p>சென்னை, பிப்.28- தெற்கு ரயில்வே அறிவித்துள்ள சிறப்பு இலவச பேருந்து சேவை வரவேற்புக்குரியது என்றாலும், இது மட்டும் போதுமானதல்ல என்று ரயில் பயணிகள் தெரிவிக்கின்றனர். தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி காலையிலும், சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் நோக்கி மாலையிலும் இயக்கப்படும் இந்தப் பேருந்து, தாம்பரம், சானடோரியம், குரோம்பேட்டை, பல்லாவரம், திரிசூலம், கிண்டி, எழிலகம், தலைமைச் செயலகம் மற்றும் பாரிமுனை வழியாகச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும், சைதாப்பேட்டை, மாம்பலம், கோடம் பாக்கம், நுங்கம்பாக்கம், எழும்பூர், பூங்கா போன்ற ரயில் நிலையங்களில் இறங்கும் பயணிகளுக்கு இப்போது அறிவிக்கப்பட்டுள்ள பேருந்து பாதை போதுமான வசதியை வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தாம்பரம், சானடோரியம், குரோம்பேட்டை, பல்லாவரம், திரி சூலம், கிண்டி, சைதாப்பேட்டை, நந்த னம், தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., ஆயிரம்விளக்கு, எல்.ஐ.சி., சென்ட்ரல், பாரிமுனை வழியாக சென்னை கடற்கரை வரை காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்புப் பேருந்துகளை இயக்குமாறு தெற்கு ரயில்வேயிடம் ரயில் பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர். இவ்வாறு இயக்கப்பட்டால், அன்றா டம் பயணிக்கும் ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.</p>
