முந்தய பக்கம்

தெற்கு ரயில்வே வருவாய் 8.84% அதிகரிப்பு கடந்த நிதியாண்டில் ரூ.13,778 கோடி வருவாய்

16 Aug 2026, 10:00 pm
தெற்கு ரயில்வே வருவாய் 8.84% அதிகரிப்பு  கடந்த நிதியாண்டில் ரூ.13,778 கோடி வருவாய்
<p><strong>தெற்கு ரயில்வே வருவாய் 8.84% அதிகரிப்பு கடந்த நிதியாண்டில் ரூ.13,778 கோடி வருவாய்</strong></p><p>சென்னை, ஆக.16 -தெற்கு ரயில்வேயின் வருவாய் 8.84 சதவீதம் அதிகரித்து, கடந்த நிதியாண்டில் ரூ.13,778 கோடியாகப் பதிவாகியுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.</p><p>சென்னை பெரம்பூர் ரயில்வே மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசிய அவர், பயணிகள் போக்குவரத்து 4.7 சதவீதம் அதிகரித்து 76.765 கோடி பேர் பயணம் செய்துள்ளதாகவும், ரயில்களின் நேரம் தவறாமை 91.3 சதவீதமாக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாகவும், வீட்டை விட்டு வெளியேறிய 2,008 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram