தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தெற்கு ரயில்வேயில் ரூ.2,576 கோடியில் 5 புதிய திட்டங்களுக்கு அனுமதி

19 Jul 2026, 9:09 pm
தெற்கு ரயில்வேயில் ரூ.2,576 கோடியில் 5 புதிய திட்டங்களுக்கு அனுமதி

தெற்கு ரயில்வேயில் ரூ.2,576 கோடியில் 5 புதிய திட்டங்களுக்கு அனுமதி

சென்னை, ஜூலை 19 - தெற்கு ரயில்வேயில் தாம்பரம் - செங்கல்பட்டு புதிய ரயில் பாதை உள்ளிட்ட ரூ.2,576 கோடியிலான 5 திட்டங்களுக்கு ரயில்வே வாரியம் அனுமதித்துள்ள நிலையில், அதற்கான நிலங்களைக் கையகப் படுத்தும் பணி தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “தெற்கு ரயில்வே மண்டலத்தில் பயணி கள் நெரிசலைத் தவிர்க்கும் வகை யில் கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது.

அதற்காக தற்போதுள்ள ரயில்கள் எண்ணிக்கையை அதி கரிக்கும் வகையிலும், போக்கு வரத்து நெரிசலைக் தவிர்க்கும் வகையிலும் புதிய ரயில் பாதை அமைத்தல் உள்ளிட்ட திட்டங் களுக்கு ரயில்வே வாரியம் அனுமதித் திருப்பதுடன், அதற்கான பணி களையும் தற்போது தொடங்கி யுள்ளது.

தாம்பரம் - செங்கல்பட்டு இடை யேயான புதிய ரயில் பாதைக்கு ஏற்கனவே ரூ.713 கோடி ஒதுக்கப் பட்ட நிலையில், அரக்கோணம் - செங்கல்பட்டு இடையேயான புதிய இரட்டை ரயில் பாதைக்கு ரூ.929 கோடி, ஈரோடு - கரூர் இடையே யான இரட்டை ரயில் பாதை களுக்கு ரூ.934 கோடி என மொத்தம் ரூ.2,576 கோடிக்கு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. ரயில்வே பாதைகளுக்கு ஒப்புதல் கிடைத்த நிலையில், நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அதற்கான ஒப்பந்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்தப் பணிகளை 2030 ஆம் ஆண்டுக்குள் முடிக்கவும், அதன்பிறகு மதுரை, திருச்சி மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட உள்ளதாகவும், அனைத்து புதிய ரயில் பாதை பணி கள் நிறைவடைந்தால் தற்போ துள்ள ரயில்கள் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது” என்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.