முந்தய பக்கம்

மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்த தெற்கு ரயில்வே பொது மேலாளர்

12 Jun 2026, 10:24 pm
மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்த தெற்கு ரயில்வே பொது மேலாளர்
<p><strong>மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்த தெற்கு ரயில்வே பொது மேலாளர்</strong></p><p>மேட்டுப்பாளையம், ஜூன் 12- மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப்பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலா ளர் ஆர்.என் சிங் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத் தில் அம்ரூத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.12 கோடி மற்றும் யார்டு ரீமாடலிங் என்ற திட்டத்திற்கு ரூ.20 கோடி என தொகை ஒதுக் கப்பட்டு ரயில் நிலைய மேம்பாட்டுப்பணிகள் நடைபெற்று வரு கின்றன. புதிய நடைமேடை அமைப்பது, ரயில் தண்டவாள இருப்பு பாதை புதுப்பித்தல், பார்க்கிங் வசதி போன்ற ரயில் நிலைய உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலை யில், அப்பணிகளை வெள்ளியன்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என் சிங் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.என்.சிங், மேம்பாட்டுப் பணிகள் உரிய காலத்தில் முடிக்கப்பட்டு, அடுத்த 2027 ஆம் ஆண்டு முதல் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து புதிய ரயில்கள் இயக்குவது நோக்கம், என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram