தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

14 ஆண்டுகளாக உயர்வின்றி வழங்கப்படும் போனஸ் டிஆர்இயு தொழிலாளர்கள் போராட்டம்

1 hour before
14 ஆண்டுகளாக உயர்வின்றி வழங்கப்படும் போனஸ் டிஆர்இயு தொழிலாளர்கள் போராட்டம்
<p><strong>14 ஆண்டுகளாக உயர்வின்றி வழங்கப்படும் போனஸ் டிஆர்இயு தொழிலாளர்கள் போராட்டம்</strong></p><p>சென்னை, அக். 6 -போனஸ் உயர்வு வழங்க கோரி செவ்வாயன்று (அக்.6) தெற்கு ரயில்வேமுழுவதும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.ரயில்வே துறையில் கடந்த 14ஆண்டுகளாக போனஸ் உயர்வுவழங்கப்படவில்லை, போனஸ் கணக்கீட்டிற்கான உச்சவரம்பை உயர்த்தஒன்றிய அரசு மறுத்து வருகிறது.ரயில்வேயில் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தில் மொத்த வருவாய் சுமார் 3 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இருப்பினும் போனஸ் உச்ச வரம்பை மாற்ற மறுக்கிறது.</p><p>இதனை கண்டித்து தட்சிணரயில்வே எம்பிளாயீஸ் யூனியன் சார்பில் தெற்கு ரயில்வே முழுவதும் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போனஸ் கணகீட்டிற்கான அடிப்படை ஊதியத்தை 7ஆயிரம் ரூபாயிலிருந்து, 28ஆயிரத்து 440 ரூபாயாக உயர்த்த வேண்டும், 78 நாள் போனசை உற்பத்தி திறனுக்கு ஏற்பஉயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினர்,இந்த போராட்டத்தின் ஒருபகுதியாக தாம்பரம் மின்சார ரயில் பெட்டிபராமரிப்பு பணிமனையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டிஆர்இயுபொதுச் செயலாளர் பேபிசகிலா,கிளைத்தலைவர்கள் ஆறுமுகம், சர்மா, கிளைச் செயலாளர் கள் ரமேஷ், ஜெயராஜ் முறியட், ஓய்வூதியர் சங்கத் தலைவர் ராமமூர்த்தி மற்றும் செபஸ்டின், சுதர்சன் உள்ளிட்டோர் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.