தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

டிஆர்இயு சங்கத்தை முடக்க முயற்சிக்கும் தெற்கு ரயில்வே நிர்வாகம்

8 Jul 2026, 8:22 pm
டிஆர்இயு சங்கத்தை முடக்க முயற்சிக்கும் தெற்கு ரயில்வே நிர்வாகம்

டிஆர்இயு சங்கத்தை முடக்க முயற்சிக்கும் தெற்கு ரயில்வே நிர்வாகம்

சென்னையில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஆவேச ஆர்ப்பாட்டம்!

சென்னை, ஜூலை 8 - தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் வெற்றி பெற்ற ‘தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியனை’ (டிஆர்இயு) முடக்க முயற்சிக்கும் தெற்கு ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து, புதனன்று ஆயிரக்கணக்கான ரயில்வே ஊழியர்கள் சென்னையில் ஆவேச ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தெற்கு ரயில்வே தலைமைப் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்காக, சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட்டில் இருந்து தொழிலாளர்கள் திரண்டு பேரணியாக வந்தனர்.

காலிப்பணியிடங்களை நிரப்பவும், சம உரிமை வழங்கவும் கோரிக்கை

ரயில்வே துறையில் நாடு முழுவதும் 3 லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ளன. தெற்கு ரயில்வேயில் மட்டும் பாதுகாப்புப் பிரிவுகளான டிராக்மேன், லோகோ பைலட், சிக்னல் டெக்னீசியன் உள்ளிட்ட 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மற்றொரு அங்கீகரிக்கப்பட்ட சங்கத்திற்கு இணையாகத் தேர்தலில் வெற்றி பெற்ற டிஆர்இயு சங்கத்திற்கும் சமமான உரிமைகளை வழங்க வேண்டும். ஆனால், நிர்வாகம் டிஆர்இயு-வை முடக்கும் நோக்கில் பாரபட்சமாகச் செயல்படுகிறது. மற்றொரு சங்கத்திற்கு 170 கிளை அலுவலகங்களை வழங்கிய நிர்வாகம், டிஆர்இயு-விற்கு வெறும் 70 கிளைகளை மட்டுமே ஒதுக்கியுள்ளது. ஒதுக்கப்பட்ட கிளைகளுக்கும் போதுமான அலுவலக அறைகள் வழங்கப்படவில்லை எனத் தொழிலாளர்கள் கண்டனம் எழுப்பினர்.

ஒன்றிய அரசின் ஒடுக்குமுறைப் போக்கு : அ.சவுந்தரராசன் எச்சரிக்கை

டிஆர்இயு செயல் தலைவர் அ.ஜானகிராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலத் தலைவர் ஜி.சுகுமாறன், டிஆர்இயு பொதுச்செயலாளர் ஏ.எம். பேபிஷகிலா உள்ளிட்டோர் உரையாற்றினர். அங்கீகாரத் தேர்தலில் வென்ற டிஆர்இயு சங்கத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தவிர்ப்பது ஜனநாயக விரோதமானது எனச் சாடிய அ.சவுந்தரராசன், “பிஎஸ்என்எல் மற்றும் அஞ்சல் துறையில் பாஜகவின் பிஎம்எஸ் சங்கத்தைப் புறவாசல் வழியாகக் கொண்டுவர மற்ற சங்கங்களை ஒடுக்குவது போல், இங்கும் ஒன்றிய அரசு செயல்பட முயல்கிறது. நிர்வாகம் தனது போக்கை மாற்றிக்கொண்டு தொழிற்சங்க விதிகளை மதிக்க வேண்டும். இல்லையெனில், போக்குவரத்து ஓய்வூதியதாரர்கள் 62 நாட்கள் போராடிப் பெற்ற வெற்றியைப் போல, டிஆர்இயு-வும் கடுமையான போராட்டங்களை முன்னெடுக்கும்” என எச்சரித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.