தெற்கு ரயில்வேயில் நிரப்பப்படாத 15,495 காலிப் பணியிடங்கள்
16 May 2026, 8:54 pm

தெற்கு ரயில்வேயில் நிரப்பப்படாத 15,495 காலிப் பணியிடங்கள்

ஒன்றிய பாஜக அரசின் வேலை நியமனத் தடையைத் தொடர்ந்து, தெற்கு ரயில்வேயில் 15,495 பணியிடங்கள் காலியாக உள்ளன. 95,336 நிரந்தரப் பணியிடங்களில், 79,841 மட்டுமே நடைமுறையில் உள்ளன. பெரும்பா லான காலிப் பணியிடங்கள் குரூப் சி, டி பிரிவுகளில் உள்ளன. தெற்கு ரயில்வே மண்டலத்தில் கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், கர்நாட காவின் சில பகுதிகள் அடங்கும்.

கேரளத்தில் உள்ள இரண்டு கோட்டங் களில் சுமார் 3,000 காலிப் பணியிடங்கள் உள்ளன. பாலக்காடு கோட்டத்தில் மட்டும் 1,170 காலிப் பணியிடங்கள் உள்ளன. 10,823 பணியிடங்களைக் கொண்ட திருவனந்தபுரம் கோட்டத்தில் 9,069 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப் பட்டுள்ளன. அதிகபட்ச பணியிடங்க ளைக் கொண்ட சென்னை கோட்டத்தில் 23,302 பணியிடங்களில் 3,151 காலிப் பணியிடங்கள் உள்ளன. 10,028 பணி யிடங்களைக் கொண்ட திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் 1,472 இடங்கள் காலியாக உள்ளன. சேலம் கோட்டத்தில் 1,404 காலிப் பணியிடங்கள் உள்ளன. மதுரை கோட்டத்தில் உள்ள 8,982 பணியிடங்க ளில், 1,218 காலியாக உள்ளன. பாது காப்புப் பணியாளர்களின் எண்ணிக்கை யிலும் பற்றாக்குறை உள்ளது. ரயில்வே பாதுகாப்புப் படையில் (RPF) உள்ள மொத்த 4395 பணியிடங்களில், தற்போது 3216 மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.

கணக்குத் துறையில் 965 காலிப் பணியிடங்களும், மிகக் குறைவான பணி யிடங்களைக் கொண்ட சென்னையில் உள்ள ராயபுரம் ரயில்வே அச்சகத்தில் ஏழு காலிப் பணியிடங்களும் உள்ளன. தெற்கு ரயில்வே தலைமையகத்தில் 664 காலிப் பணியிடங்கள் உள்ளன. பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை யில் 393 காலிப் பணியிடங்களும், லோகோ ஒர்க்ஸில் 158 காலிப் பணியிடங்களும் உள்ளன. திருச்சிராப்பள்ளி கோல்டன் ராக் பட்டறையில் 382 காலிப் பணி யிடங்கள் உள்ளன.

இந்திய ரயில்வேயில் உள்ள மொத்த காலிப் பணியிடங்கள் 3.5 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளன. ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் 20 சதவிகித பணி யிடங்களை நீக்க முயற்சித்து வரு கிறது. இதன் ஒரு பகுதியாக, ஓராண்டில் 29,808 பணியிடங்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஐம்ப தாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்றபோதிலும், அதற்கேற்ப எந்த நியமனங்களும் செய்யப்படுவதில்லை. தேசாபிமானியில் நிகில் ரவீந்திரன். தமிழில் : சி.முருகேசன்