தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தென் தமிழ்நாட்டில் குறைந்துவரும் மேய்ச்சல் மாடுகள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் மேய்ச்சல் நிலங்கள் பாதுகாக்க கோரிக்கை

12 May 2026, 10:41 pm
தென் தமிழ்நாட்டில் குறைந்துவரும் மேய்ச்சல் மாடுகள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் மேய்ச்சல் நிலங்கள் பாதுகாக்க கோரிக்கை

தென் தமிழ்நாட்டில் குறைந்துவரும் மேய்ச்சல் மாடுகள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் மேய்ச்சல் நிலங்கள் பாதுகாக்க கோரிக்கை

தென் தமிழ்நாட்டில் குறைந்துவரும் மேய்ச்சல் மாடுகள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் மேய்ச்சல் நிலங்கள் பாதுகாக்க கோரிக்கைதென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான மேய்ச்சல் மாடுகள் படிப்படியாக குறைந்து வருவதாக கால்நடை வளர்ப்போர் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் மேய்ச்சல் மாடுகளுக்காக தனியாக மேய்ச்சல் நிலங்கள் ஒதுக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது மலை அடிவார காடுகள் மற்றும் திறந்த வெளிப் பகுதிகளில் மாடுகளை சுதந்திரமாக மேய்த்தனர்.

ஆனால் பின்னர் பல மலைப்பகுதிகள் வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்ட காப்புக்காடுகள் மற்றும் சரணாலயங்களாக மாற்றப்பட்டதால், மேய்ச்சல் மாடுகள் அங்கு செல்லத் தடை விதிக்கப்பட்டது

. விதிமுறை களை மீறி சென்றால் அபராதம் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் மாடு மேய்ப்போர் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக தற்போது கண்மாய் கரைகள், தரிசு நிலங்கள் மற்றும் கால்வாய் ஓரங்கள் போன்ற குறுகிய பகுதிகளிலேயே மாடுகளை மேய்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலை தொடர்ந்தால், முன்பு கோடிக்கணக்கில் இருந்த மேய்ச்சல் மாடுகள் படிப்படியாக குறைந்து முற்றிலும் அழியும் அபாயம் உருவாகும் என கால்நடை வளர்ப்போர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே, இயற்கை வளங்களையும் பாரம்பரிய கால்நடை வளர்ப்பையும் பாதுகாக்கும் நோக்கில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் மீண்டும் மேய்ச்சல் நிலங்களை ஒதுக்கி பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் மாடு வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.