தென்னிந்திய அளவில் வாலிபால் போட்டி அரசு கலைக்கல்லூரி மாணவருக்கு பாராட்டு
9 Dec 2025, 4:25 pm
<p><strong>தென்னிந்திய அளவில் வாலிபால் போட்டி அரசு கலைக்கல்லூரி மாணவருக்கு பாராட்டு</strong></p>
<p>தருமபுரி, டிச.9- தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆடவர் வாலிபால் போட்டியில் பங்கேற்கவுள்ள தருமபுரி அரசுக்கல்லூரி மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரி களுக்கு இடையிலான ஆடவர் வாலிபால் போட்டிகள் டிச.1, 2 ஆகிய தேதிகளில் சேலம் ஏவிஎஸ் கல்லூரியில் நடைபெற்றது. அதில் தருமபுரி அரசு கலைக்கல்லூரி வாலி பால் அணி பங்கேற்றது. பல்கலைக்கழக விளையாட்டுத் தேர்வு குழுவால், தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆடவர் வாலிபால் போட்டிகளில் பங்கேற்க தரு மபுரி அரசு கலைக்கல்லூரி அரசியல் அறிவியல் துறை இரண் டாமாண்டு மாணவர் ஐ.ஹரிதரன், சேலம் பெரியார் பல் கலைக்கழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஆந்திர பிரதேச மாநிலம், காக்கிநாடா ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தென்னிந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான ஆடவர் வாலிபால் போட்டி யில் பங்கேற்கவுள்ளார். இந்நிலையில், பல்கலைக்கழகத் தால் வழங்கப்பட்ட தேர்வு கடிதத்தினை கல்லூரி முதல்வர் கோ.கண்ணன் வழங்கி, மாணவரை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்வில் உடற்கல்வி இயக்குநர் கு.பாலமுரு கன், பேராசிரியர்கள், அரசியல் அறிவியல் துறை தலை வர் (பொ) சபாபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
