தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தெற்கு கடலோர ரயில்வே மண்டலம் ஆந்திராவிற்கு இழைக்கப்பட்ட “துரோகம்”

10 May 2026, 9:06 pm
தெற்கு கடலோர ரயில்வே மண்டலம் ஆந்திராவிற்கு இழைக்கப்பட்ட “துரோகம்”

தெற்கு கடலோர ரயில்வே மண்டலம் ஆந்திராவிற்கு இழைக்கப்பட்ட “துரோகம்”

விசாகப்பட்டினம் ஒன்றிய பாஜக அரசு ஜூன் 1 முதல் தெற்கு கடலோர ரயில்வே என்ற புதிய மண்ட லத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடைமுறை அறி விப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் ஆந்திர மாநிலத்தில் உள்ள லாபம் ஈட்டும் முக்கிய ரயில்வே பிரிவுகளை புதிய மண்டலத்தில் இணைக்காமல், ஒடிசாவின் கிழக்கு கடலோர ரயில்வேயுடன் தக்க வைத்துக்கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தெற்கு கட லோர ரயில்வே மண்டலம் ஆந்திரா விற்கு இழைக்கப்பட்ட “துரோகம்” என இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) கடும் கண்டனம் தெரி வித்துள்ளது.

ரூ.7,294 கோடி வருவாய்

இதுதொடர்பாக சிஐடியு ஆந் திர மாநிலத் தலைவர் சி.எச்.நரசிங்க ராவ், மாநிலச் செயலாளர் ஆர்.கே.எஸ்.வி. குமார் ஆகியோர் ஞாயி றன்று நடைபெற்ற செய்தியாளர் சந் திப்பில் மேலும் கூறுகையில், ”புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தெற்கு கடலோர ரயில்வே மண்ட லத்தில் விஜயவாடா கோட்டம், குண்டூர் கோட்டம், குண்டக்கல் கோட்டம், வால்தேர் கோட்டம் ஆகி யன உள்ளன. இதில் வால்தேர் கோட்டம் பிரிக்கப்பட்டு, அதன் பெரும் பகுதி இந்த புதிய மண்ட லத்துடன் இணைக்கப்பட உள்ளன. ஆனால் ராயகடா என்ற புதிய கோட்டமாக மாற்றப்பட்டு கிழக்கு கடலோர ரயில்வேயுடன் இணைக் கப்பட உள்ளது. குறிப்பாக வால் தேர் பிரிவின் இதயப்பகுதியாகக் கருதப்படும், அதிக லாபம் ஈட்டும் கொத்தவலசை-கிரண்டூல் தடம் ஒடிசாவை தலைமையிடமாகக் கொண்ட கிழக்கு கடலோர ரயில்வேயிடம் திட்டமிட்டு ஒப்ப டைக்கப்பட்டுள்ளது. 471 கி.மீ நீளம் கொண்ட கொத்த

வலசை-கிரண்டூல் தடத்தில் வெறும் 27 கி.மீ மட்டுமே விசாகப் பட்டினம் பிரிவில் உள்ளது. மீத முள்ள 444 கி.மீ கிழக்கு கடலோர ரயில்வேயின் புதிய ராயகடா பிரி வுக்கு மாற்றப்பட்டுள்ளது. 2024-2025இல் இந்தத் தடம் ஈட்டிய ரூ. 7,294 கோடி வருவாயில், சுமார் 93% இனி ஒடிசாவின் கிழக்கு கட லோர ரயில்வேக்கே செல்லும். சுற்றுலாத் தலமான அரக்கு பகுதி யும் புதிய மண்டலத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தெற்கு கடலோர ரயில்வே மண்ட லத்தில் இருந்து ஆந்திராவிற்கு என்ன பயன்?

காலிப்பணியிடங்கள்

விசாகப்பட்டினம் பிரிவில் மட்டும் 4,698 பணியிடங்கள் காலி யாக உள்ளன (இதில் 2,413 பாது காப்பு தொடர்பானவை). ஆனால் ஒன்றிய அரசு ஆட்சேர்ப்பை முடக்கிவிட்டு, ஏப்ரல் 2026இல் மட்டும் 29,608 பணியிடங்களை ரத்து செய்துள்ளது. ரயில்வேயை தனியார் வசம் ஒப்படைக்க ஒன்றிய அரசு தயாராகி வருகிறது. நிரந்தரப் பணிகளுக்குப் பதிலாக குறைந்த ஊதியத்தில் ஒப்பந்தப் பணிகள் வழங்கப்படுகிறது.

ரியல் எஸ்டேட்

ரயில்வே மண்டல தலைமை யகத்தை விசாகப்பட்டினம் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள இடத்தில் அமைக்காமல், 20 கி.மீ தொலைவில் உள்ள முடாசர் லேவா பகுதிக்கு மாற்றுகின்றனர். இது ரியல் எஸ்டேட் நலன்களுக் காகச் செய்யப்பட்ட முடிவு. இத னால் ஊழியர்களுக்கு மிகுந்த சிர மம் ஏற்படும்.

ரயில்வே மண்டலம் என்பது ஆந்திர மறுசீரமைப்புச் சட்டம் 2014இன் படி எங்களுக்குக் கிடைத்த உரிமை. அது ஒன்றிய அரசு அளித்த தர்மம் அல்ல. ஒன்றிய அரசின் தனி யார்மயக் கொள்கைகளுக்கு எதி ராகவும், ஆந்திராவின் பொருளா தார நலன்களைக் காக்கவும் ரயில்வே தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்திற்குத் தயாராக வேண்டும்” என சிஐடியு தலைவர்கள் அழைப்பு விடுத்துள் ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.