தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தென்சென்னையில் 6 மையங்களில் போராட்டம்

21 Jun 2026, 2:11 am
தென்சென்னையில் 6 மையங்களில் போராட்டம்
<p><strong>தென்சென்னையில் 6 மையங்களில் போராட்டம்</strong></p><p>சென்னை, ஜூன் 20 - பெட்ரோலியப் பொருட்களின் விலையை குறைக்க வேண்டும், 4 தொழி லாளர் விரோத சட்டத்தொகுப்புகளை ரத்த செய்ய வேண்டும், விபி ஜிராம்ஜி திட்டத்தை ரத்து செய்து மீண்டும் மகாத்மா காந்தி ஊரகா வேலை உறுதியளிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வெள்ளியன்று (ஜூன் 19) ஆறு மையங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தாம்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், தாம்பரத்தில் தொகுதிச் செயலாளர் த.கிருஷ்ணா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ஹெலன் தேவகிருபை, ஆர்.விஜயா உள்ளிட்டோர் பேசினர். விருகம்பாக்கம் பகுதி சேமாத்தமன் நகரில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் மாவட்டச்செயலாளர் ஆர்.வேல்முருகன், பகுதிச் செயலாளர் ஏ.நடராஜன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ரெங்க சாமி, சி.செங்கல்வராயன், ச.ஆனந்தகுமார் உள்ளிட்டோர் பேசினர். மயிலாப்பூரில் பகுதி ஆர்ஏ புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், பகுதிச்செயலாளர் ஐ.ஆர்.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.முகமது ரஃபி, எம்.சரஸ்வதி எம்.சி., உள்ளிட்டோர் பேசினர் சோழிங்கநல்லூர் பகுதி துரைப் பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.லெனின், பகுதிச் செயலாளர் பி.ஜெயவேல், மாவட்டக்குழு உறுப்பினர் என்.குமரன் உள்ளிட்டோர் பேசினர். தி.நகர் பகுதி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.தாமோதரன், பகுதிச் செயலாளர் எம்.குமார் உள்ளிட்டோர் உரையாற்றினர். சைதாப்பேட்டை பகுதி சார்பில் அரங்க நாதன் சுரங்கப்பாதை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.செந்தில்குமார், ம.சித்ர கலா, பகுதிச் செயலாளர் ஜி.வெங்கடேஷ் உள்ளிட்டோர் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.