மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட தேர்தல்
14 Mar 2026, 2:57 pm
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட தேர்தல் நிதியளிப்பு கூட்டம் வெள்ளியன்று (மார்ச் 13) சைதாப்பேட்டையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் எழுதி, பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள ‘குடியிருப்பு - பிரச்சனைகளும் தீர்வும்’ என்ற நூலை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி வெளியிட, தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா பெற்றுக்கொண்டார். நர்மதாதேவி - வி.விஜயலட்சுமி தொகுத்த ‘சோசலிசமே தீர்வு’ என்ற நூலையும் உ.வாசுகி வெளியிட இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அமர்நீதி பெற்றுக்கொண்டார். மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, தொகுப்பாசிரியர் வி.விஜயலட்சுமி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.</p>
