விளையாட்டு
4 Nov 2026, 8:54 pm

விளையாட்டு

ஷார்ட் பிட்ச் பந்துவீச்சில் கரைந்த ‘கங்காரூஸ்’ ஆஸ்திரேலியாவை நடுங்க வைத்த தென் ஆப்பிரிக்க - எம்.சதீஸ் குமார்

மைதானங்கள்கிரிக்கெட் உலகின் சாம்பியன் என்றால் ‘கங்காரூகளின் பூமி’ ஆஸ்திரேலியாதான். அதிரடி வேகம், நீண்டகால ஆதிக்கம், கடைசி வரை போராட்டம், சூப்பர் பார்முடன் வரிசையாக உலகக்கோப்பையை வெல்லுதல் என தனிச் சிறப்புடன் கிரிக்கெட் உலகின் தனிக்காட்டு ராஜாவாக வலம் வருகிறது.

முக்கிய சாம்பியன் அணிகளில் ஒன்றாக இருந்தாலும் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட மற்ற சாம்பியன் அணிகளிடம் ஆஸ்திரேலியா அடிக்கடி தோல்வியை சந்திப்பது வழக்கமான விஷயம்தான். சொல்லப்போனால் சாம்பியன் அந்த ஸ்து இல்லாத ஜிம்பாப்வே உள்ளிட்ட சிறிய அணிகளிடம் கூட ஆஸ்திரேலியா அடிக்கடி மண்ணைக் கவ்வியுள்ளது.

ஷார்ட் பிட்ச்இந்நிலையில், சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டிடம் ஒருநாள், டெஸ்ட் தொடரை இழந்து ஆஸ்திரேலியா பலத்த அடி வாங்கியுள்ளது. விளை யாட்டில் வெற்றி, தோல்வி சகஜமான விஷயம்தான் என்றாலும், ஆஸ்திரேலியா வாங்கிய அடி தென் ஆப்பிரிக்கா அணி யின் பலமான ஆட்டத்தால் கிடைத்தது அல்ல ; சாதாரண ஷார்ட் பிட்ச் பந்து வீச்சைப் போட்டு ஆஸ்திரேலிய அணியை பதம் பார்த்துள்ளது. அதாவது பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என மூன்றிலும் கணிப்பில் சிறப்பாக செயல்படக் கூடிய ஆஸ்திரேலிய அணியை வெறும் ஷார்ட் பந்துவீச்சில் வீழ்த்தியிருப்பது தான், கிரிக்கெட் உலகில் இன்று வரை அதிர்ச்சி தரும் விஷயமாக உள்ளது.

ஒருநாள் ஆட்டங்களில் கூட தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பலமான போட்டி இருந்தது. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவின் ஆட்டம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உல கையே ஈர்த்தது. தென் ஆப்பிரிக்கா மைதானங்களின் பிட்ச் பெரியளவில் கடினமாக இல்லை ; எகிறும் பவுன்சரும் அவ்வளவாக தாக்கவில்லை. ஆனால் ஷார்ட் பிட்ச் வகை பவுன்சரை (இடுப்புக்கு கீழ் அல்லது நெஞ்சுக்கு கீழ் நிதான வேகத்தில் எகிறும்) போட்டு, ஆஸ்திரேலி யாவை திக்கு முக்காடவிட்டது தென் ஆப்பிரிக்கா.

3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா, டர்பன் மைதானத்தில் ஒருநாள் மட்டுமே நடை

பெற்ற தொடரை இழந்த கடுப்பில் அபாரமாக விளையாடி, அந்தபோட்டியில் வெற்றிப் பெற்றது. ஆனால் கெபெர்ஹா,கேப்டவுனில் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசையை சின்னாபின்னமாக்கி அடுத்த டுத்து 2 போட்டிகளிலும் தென் ஆப்பி ரிக்கா வென்றது.

மைதானத்தை கணிக்காததே தோல்விதென் ஆப்பிரிக்கா மைதானங்களில் பவுன்சர் பலமாக இருக்கும். பிட்ச் பகுதியில் புற்கள் மிதமாக இருப்பதால், பெர்த் மைதானத்தில் (உலகின் அதிவேக மைதானம் - ஆஸ்திரேலியா) விளையாடுவது போன்று ஆடி தென் ஆப்பிரிக்காவைச் சாய்த்து விடலாம் என கடந்த கால கணக்குகளுடன் ஆஸ்திரேலியா இறங்கியது. ஆனால் பிட்ச் பகுதியின் உண்மையான உணர்திறனை ஆஸ்திரேலியா ஆய்வு செய்யவில்லை. இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் - இங்கிலாந்து - ஆஸ்திரேலியா என பல கண்டங்களின் பிட்ச் அமைப்புகளில் தென் ஆப்பிரிக்க ஆடுகளங்கள் இருந்தன. சொந்த அணிக்காக தென் ஆப்பிரிக்கா நிர்வாகம் செயற்கை முறையில் இவ்வாறு உருவாக்கியதா? அல்லது காலநிலை மாற்றத்தால் மைதான பிட்ச் மாறியதா? என்று சரிவர தெரியவில்லை.

ஆனால் தென் ஆப்பிரிக்கா அணி இதனை நன்கு உணர்ந்து அசத்தலாக விளையாடியது. புரியும்படி சொன்னால், அதிரடி - ஆக்ரோஷம் வேண்டாம், சும்மா பந்தை போடுங்கள் என்று கூறுவது போல, பந்தை கை, கால், ஸ்டெம்ப் பகுதிகளுக்குள் அப்படி - இப்படி போட்டு ஆஸ்திரேலியாவை படாதபாடு படுத்தி விட்டது தென் ஆப்பிரிக்கா.

ரபடா ஸ்டைலில் ஒட்டுமொத்த அணியும்தென் ஆப்பிரிக்காவின் சூப்பர் ஸ்டார் ரபடா வித்தியாசமான முறையில் வேகப்பந்தை வீசக்கூடியவர். 130 கிமீ முதல் 145 கிமீ வேகத்தில் மிதமாக பந்துவீசும் ரபடா ஸ்டெம்ப் - கால் மட்டுமே குறிவைத்து பந்துவீசக் கூடியவர். சில நேரங்களில் மட்டும்தான் அவரது பந்துவீச்சு பவுன்சராக எகிறும். மற்றபடி ஸ்டெம்ப் பகுதிக்குள் பாயும் அல்லது வைடு கிராசிங் சைடு பகுதியில் படிப்படியாக விலகும். இதே பந்துவீச்சைதான் யான்சன் என ஒட்டுமொத்த தென் ஆப்பிரிக்கா அணியும் தேர்ந்தெடுத்து, ஆஸ்திரேலிய அணியை சாய்த்துள்ளது. குறிப்பாக புதுமுக சுழற்பந்துவீச்சாளர் சைமன் ஹார்மர் ரிங்காரம் (சர்ரென்று உள்ளே புகுந்து விடும்) இல்லாத சூழலைப் போட்டு ஆஸ்திரேலிய பேட்டர்களை நிலைகுலையச் செய்தார்.

ஒட்டுமொத்தத்தில் மைதான கணிப்பிற்கு ஏற்ப, போராட்டம் இல்லாமல், அதிரடி ஆக்ரோஷம் இல்லாமல் ஒரு

சாதாரண பயிற்சி ஆட்டத்தில் விளையாடு வது போன்று பலவகை சாம்பியனான ஆஸ்திரேலியாவை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியிருப்பது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சி கலந்த விஷயமாகதான் இன்று வரை வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- எம்.சதீஸ் குமார்