தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காண்டாமிருகங்களைக் காக்க புதிய திட்டம்

9 May 2026, 2:19 pm
காண்டாமிருகங்களைக் காக்க புதிய  திட்டம்

காண்டாமிருகங்களைக் காக்க புதிய திட்டம்

கொம்புகளுக்காக காண்டாமிருகங்கள் திருட்டுத்தனமாகக் கொல்லப்படுவதை தடுக்க அவற்றின் கொம்புகளில் கதிரியக்க ஐஸோடோப்புகள் அடங்கிய சிப்புகளைப் பதிக்கும் திட்டத்தை தென்னாப்பிரிக்க பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர். விட்வாடெர்ஸ்ரண்ட் (Witwatersrand) பல்கலைக்கழகம், சர்வதேச அணு ஆற்றல் முகமை (IAEA) மற்றும் சூழலியலாளர்களின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ரிஸோடோப் திட்டம்

இத்திட்டத்தின்படி இப்போது ஐந்து காண்டாமிருகங்களின் கொம்பில் சிப் பதிக்கப்பட்டது. ரிஸோடோப் (Rhisotope) என்று அழைக்கப்படும் திட்டத்தில் குறைந்துவரும் இந்த உயிரினங்களின் எண்ணிக்கையை நிலைநிறுத்தமுடியும் என்று நம்பப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் பரிசோதிக்கப்பட்ட பிறகு இந்த திட்டம் 2021ல் உருவாக்கப்பட்டது. 2024ல் முதல்முதலில் தொடங்கப்பட்டது. இதன்படி தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு சரணாலயத்தில் சுமார் 20 காண்டாமிருகங்களின் கொம்புகளில் சிப் பதித்து பரிசோதிக்கப்பட்டது. அதன் வெற்றியைத் தொடர்ந்து இப்போது இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் ஏற்கனவே விமான நிலையங்கள், எல்லைகள் மற்றும் துறைமுகங்களில் கதிரியக்க பொருட்கள் கடத்தப்படுவதை கண்டுபிடிக்க 10,000 கதிரியக்க தள கண்காணிப்பு கருவிகள் (radiation portal monitors (RPMs) பொருத்தப்பட்டுள்ளன. இப்போது வன உயிரினங்களின் கள்ளக் கடத்தலைத் தடுக்க இவ்வசதி பயன்படுத்தப்படுகிறது. “உலகளவிலான புதிய சவால்களை சமாளிக்க நியூக்ளியர் அறிவியல் மற்றும் உட்கட்டமைப்பை பயன்படுத்தலாம் என்பதை இந்த திட்டம் எடுத்துக்காட்டுகிறது. நியூக்ளியர் பாதுகாப்பை மகத்தான வழிகளில் உலக நாடுகள் பயன்படுத்த முகமை ஊக்கமளிக்கிறது. இதுபோன்ற வழிகள் மூலம் உலகின் அற்புத அடையாளமாகத் திகழும் அழியும் ஆபத்தில் இருக்கும் இந்த உயிரினங்களை காப்பாற்றமுடியும்” என்று சர்வதேச அணு ஆற்றல் முகமை இயக்குநர் ஜெனரல் ராஃபையல் மரியானோ க்ரோசி (Rafael Mariano Grossi) கூறுகிறார். தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பெர்க் நகரின் வட பகுதியில் 250 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள வாட்டர்பெர்க் என்ற இடத்தில் லிம்போப்போ (Limpopo) வன விலங்குகள் பூங்காவில் நடந்த நிகழ்வில் இத்திட்டத்தின் பாதுகாப்பு மதிப்பீட்டை விட்வாடெர்ஸ்ரண்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டது. 2024ல் நடந்த திட்டத்தின் முதல் முயற்சியில் சிப் பதிக்கப்பட்ட 15 காண்டாமிருகங்களின் ஆரோக்கிய நிலை பெல்ஜியம் கெண்ட் (Ghent) பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் பரிசோதிக்கப்பட்டது.

சிப்புகளால் ஆபத்து இல்லை

இந்த முறையில் சிப்புகள் விலங்கின் உடலிற்குள் நுழைக்கப்படுவதில்லை. அதனால் காண்டாமிருகத்தின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற்படவில்லை என்று அந்த ஆய்வுகள் உறுதிசெய்தன. கதிரியக்க ஐஸோடோப்புகள் குறைந்த அளவில் இருந்தாலும் விமான நிலையங்கள், எல்லைகளில் அவற்றின் கதிரியக்கத்தால் சுங்க அதிகாரிகள் அவற்றை சுலபமாக கண்டுபிடிக்கமுடியும். அதனால் வேட்டைக்காரர்கள், கடத்தல்காரர்களை கைது செய்யமுடியும். சிப்புகளில் பயன்படுத்தப்படும் கதிரியக்க ஐஸோடோப்புகள் காண்டாமிருகங்களுக்கு தீங்கு எதுவும் ஏற்படுத்தவில்லை என்று விட்வாடெர்ஸ்ரண்ட் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பிரிவு கதிரியக்கம் மற்றும் ஆரோக்கியத் துறை விஞ்ஞானிகள் கூறுகின்றனர். “அறிவியலிற்கும் அப்பாற்பட்டு சந்தேகத்திற்கு இடமின்றி சிப்புகள் காண்டாமிருகங்களுக்கு பாதுகாப்பானது என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சிப்புகளின் ஆயுட்காலம் ஐந்தாண்டுகள். சிப் பதிக்கப்பட்ட கொம்புகளை சர்வதேச சுங்கத் துறையின் அணு பாதுகாப்பு முறைகள் மூலம் எளிதில் கண்டறியமுடியும். நடைமுறையில் இருப்பதை விட மிகக் குறைந்த அளவில் கதிரியக்கப் பொருள் காண்டாமிருகத்தின் ஒற்றைக் கொம்பில் இருந்தாலும் அதை கதிரியக்கப் பொருட்களை கண்டுபிடிக்கும் கருவிகள் அடையாளம் கண்டு வெற்றிகரமாக எச்சரிக்கை விடுக்கின்றன. சரக்குகள் முழுவதும் நிரப்பப்பட்ட 40 அடி உள்ள கப்பல் சரக்குப் பெட்டகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தாலும் கொம்புகளை சுலபமாக கண்டறியலாம். வேட்டையாடலுக்கு முடிவு காண ஒத்த கருத்துடைய தனிநபர்களும் இந்த முயற்சியில் பங்கேற்றுள்ளனர். கதிரியக்க சிப்புகள் தீமை செய்வதற்கு பதில் காண்டாமிருகங்களை எவ்வாறு காக்கமுடியும் என்ற கேள்வியுடன் இத்திட்டத்தைத் தொடங்கினோம். ஆனால் இரண்டு ஆண்டு டிஜிட்டல் மாதிரியாக்கல், பாதுகாப்பு பரிசோதனைகள், கடத்தலைக் கண்டுபிடிக்க பயன்படும் தூண்டுதல் பரிசோதனைகளுக்குப் பிறகு இத்திட்டம் வேட்டையாடல் பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இதன் வெற்றி யானைகள், எறும்புத் தின்னிகள் போன்ற மற்ற ஆபத்தான நிலையில் இருக்கும் உயிரினங்களையும் காக்கும் முயற்சியில் ஒரு புதிய வாசலைத் திறந்துள்ளது” என்று திட்டத்தின் தலைமை அறிவியல் அலுவலர் ஜேம்ஸ் லார்க்கின் கூறுகிறார்.

காண்டாமிருகங்கள் காப்பாற்றப்படுமா? “

இந்த ரிஸோடோப் திட்டம் உலகளவில் நியூக்ளியர் பாதுகாப்பு வலையமைப்பை செயல் வடிவில் கொண்டுவந்துள்ளது. இதன் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்கனவே உலக நாடுகளில் சட்ட விரோத நியூக்ளியர் பொருட்களின் கடத்தலை தடுக்க நடைமுறையில் உள்ளது. இப்போது இந்த தொழில்நுட்பம் மற்ற துறைகளிலும் பயன்படுத்தப்படலாம் என்பதை இத்திட்டம் சுட்டிக்காட்டுகிறது” என்று சர்வதேச அணு ஆற்றல் முகமையின் நியூக்ளியர் பாதுகாப்பு பிரிவு இயக்குநர் இலினா பக்லோவா (Elena Buglova) கூறுகிறார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகளவில் 500,000 காண்டாமிருகங்கள் வாழ்ந்துவந்தன. கடந்த பத்தாண்டில் மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டன. இவற்றின் எண்னிக்கை இப்போது சுமார் 27,000 மட்டுமே என்று சர்வதேச இயற்கை பாதுகாப்புச் சங்கம் (IUCN) கூறுகிறது. இவை உலகளவில் தென்னாப்பிரிக்காவிலேயே அதிகமாக வாழ்கின்றன. 2025இன் முதல் கால் பகுதியில் மட்டும் 103 காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டன என்று தென்னாப்பிரிக்க வன, மீன் நலம் மற்றும் சூழல் அமைச்சரகம் கூறுகிறது. தென்னாப்பிரிக்காவில் இந்த விலங்குகள் வாழும் மற்ற தனியார் வன உயிரியல் பூங்கா நிர்வாகிகளும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். இத்திட்டத்தின் வெற்றி வன விலங்குகளை பாதுகாக்க போராடும் போராளிகளுக்கும் ஆய்வாளர்களுக்கும் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.