நாங்கள் குற்றவாளிகள் அல்ல, ஏழைகள்! தென் ஆப்பிரிக்க மக்கள் போராட்டம் நில உரிமைப் போராட்டங்களைக் குற்றமாக்கும் சட்ட மசோதா
17 Jun 2026, 8:39 pm

நாங்கள் குற்றவாளிகள் அல்ல, ஏழைகள்! தென் ஆப்பிரிக்க மக்கள் போராட்டம் நில உரிமைப் போராட்டங்களைக் குற்றமாக்கும் சட்ட மசோதா

ஜோகன்னஸ்பர்க், ஜூன் 17- தென் ஆப்பிரிக்காவில் நகர்ப்புற ஏழைகளின் நில உரிமைகளைப் பறிக்கும் வகையிலும் நில உரிமைப் போராட்டங்களைக் குற்றமாகக் கரு தவும் புதிய சட்ட மசோதா அறிமுகம் செய் யப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வுரி மைக்கு எதிரான இந்த மசோதாவி ற்கு எதிராக, அங்குள்ள ஆயிரக்கணக் கான குடிசை வாழ் மக்கள் நாட்டின் முக்கிய நகரங்களில் தீவிரமான போராட்டத்தைத் துவங்கியுள்ளனர்.

தென் ஆப்பிரிக்க அரசு சட்ட விரோத வெளியேற்றத் தடுப்புத் திருத்த மசோதா ‘(Prevention of Illegal Evic tion Amendment Bill-’PIE ) கொண்டு வர உள்ளது. இது தங்களின் வாழ்வா தாரத்தை முற்றிலும் அழித்துவிடும் எனப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மாற்று இடமின்றி வெளியேற்ற அனுமதி

தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி, நிலங்களில் குடியேறி யுள்ள மக்களை வெளியேற்ற வேண்டும் என்றால், அவர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மாற்று இடவசதி செய்து தரப்பட்டுள் ளதா என்பதை நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும். ஆனால், புதிய சட்டத்திருத்தமானது மாற்று இடவசதி தராமல் ஏழை மக்களை அவர்களது இடத்தில் இருந்து வெளியேற்ற நீதி மன்றங்கள் உத்தரவிட வழிவகை செய்கிறது.

அதுமட்டுமின்றி நில உரிமைக் காக மக்களைத் திரட்டிப் போராடும் சமூகச் செயல்பாட்டாளர்கள், அமைப் புகளுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது 20 லட்சம் ராண்ட் (1 கோடியே 16 லட்சம் ரூபாய்) வரை அபராதம் விதிக்கவும் அம்மசோதா வழிவகை செய்கிறது.

இந்தக் கொடூரச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தென் ஆப்பி ரிக்காவின் குடிசைவாழ் மக்களின் முன்னணி இயக்கமான ‘அபஹ்லாலி பேஸ்ம்ஜொண்டோலோ’ மற்றும் தென் ஆப்பிரிக்கத் தொழிற்சங்கங்க ளின் கூட்டமைப்பு (SAFTU) இணைந்து ஜூன் 12 அன்று ஜோகன்னஸ்பர்க், டர்பன், ம்புமலங்கா ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் பல்லாயிரக்க ணக்கான மக்கள் பங்கேற்புடன் ஒருங்கிணைந்த பிரம்மாண்ட பேரணி களை நடத்தின.

நாங்கள் குற்றவாளிகள் அல்ல, ஏழைகள்!

தென் ஆப்பிரிக்காவில் தற்போது 44 சதவிகித வேலையின்மை நிலவு கிறது. கிராமப்புறங்களில் எதிர்காலம் இல்லாததால், பிழைப்புத் தேடி நக ரங்களுக்கு வரும் ஏழைகள் தாங்கள் தங்குவதற்கு வீடின்றி, காலியாகக் கிடக்கும் நிலங்களில் குடிசை அமைப்ப தைத் தவிர வேறு வழியில்லை. மக்கள் குற்றவாளிகள் என்பதால் நிலங்களை ஆக்கிரமிக்கவில்லை, வாழ வழியில்லாததால் தான் இங்கு வந்து தங்கியுள்ளனர். அரசாங்கம் இந்த நெருக்கடிக்குத் தீர்வு காண் பதை விட்டுவிட்டு, எங்களைக் குற்றவா ளிகளாக்கப் பார்க்கிறது,” என்று போ ராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ள னர்.

வரலாற்றுப் பின்னணி

கடந்த 1951-ஆம் ஆண்டு நிலவிய வெள்ளையின இனவெறி ஆட்சிக் காலத்தில் (Apartheid), கருப்பின மக்கள் நகர்ப்புறங்களில் நிலம் வாங்குவதைத் தடுக்க இதுபோன்ற கடுமையான சட்டங்கள் இருந்தன. பின்னர் 1998 இல் நெல்சன் மண் டேலா தலைமையிலான அரசுதான் ஏழைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் சட்டங்களைக் கொண்டு வந்தது. தற்போதைய புதிய கூட்டணி அரசு மண்டேலா காலத்தில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலப் பாதுகாப்பை மீண்டும் பறிக்க முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.

இனவெறி ஆட்சி முடிவுக்கு வந்ததி லிருந்து ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) தனது தனிப்பெரும்பான்மை யை முதல்முறையாக 2024 ஆம் ஆண்டு இழந்தது. இதனால் தேசிய ஒற்றுமைக்கான அரசாங்கம்’ (GNU) என்ற பெயரில் 10 கட்சிகள் இடம் பெற்ற ஒரு கூட்டணி அரசு அமைக்கப் பட்டு அங்கு ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.