தென்னாப்பிரிக்காவில் தொடரும் பெண்கள் படுகொலைகள்
27 Sept 2026, 9:38 pm
<p><strong>தென்னாப்பிரிக்காவில் தொடரும் பெண்கள் படுகொலைகள் </strong></p><p>தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க்கிற்கு கிழக்கே கடந்த இரண்டு மாதங்களில் 10 பெண் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல்-ஜூன் இடைவெளியில் மட்டும் 569 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை கூறுகிறது. பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுத்து நிறுத்துவதில் கவனம் செலுத்தக் கோரி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பணியிடங்களில் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான ஐஎல்ஓ கோட்பாடு 190-ஐ அரசு ஏற்றிருந்தாலும், அதனை முழுமையாக அமலாக்கிட மறுக்கிறது.</p>
