முந்தய பக்கம்

சவுரவ் தாஸ் குடியுரிமை?: ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்!

30 Oct 2026, 8:55 pm
சவுரவ் தாஸ் குடியுரிமை?:  ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்!
<p><strong>சவுரவ் தாஸ் குடியுரிமை?: ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்!</strong></p><p>சென்னை, அக். 30 -கரப்பான் ஜனதா கட்சிஇணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸை குறிவைத்து, ஒன்றிய அரசும், பாஜகவினரும் செயல்பட்டு வருகின்றனர். இதனொரு பகுதியாக, சவுரவ் தாஸின் உண்மையான பெயர் யோகேஷ் சர்மா என்றும், அவர் நேபாளத்தை பூர்வீகமாகக் கொண்டவர், என்றும்; அவர் தனது அடையாளங்களை மறைத்து, இந்தியாவில் போலி ஆவணங்கள் மூலம் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை முறைகேடாகப் பெற்றுள்ளதாக வும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக, உள்துறை அமைச்சகம் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே இந்த வழக்கில்ஒன்றிய அரசு 6 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தலைமை நீதிபதி எஸ். ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர்அடங்கிய சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு உத்தரவிட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram